Saturday, January 2, 2016

இறைவன் படைப்பில் எல்லா உயிர்களும் ஒன்றுதான்.

இறைவன் படைப்பில் எல்லா

உயிர்களும் ஒன்றுதான்.

மனித நேயம் 

பிறருக்கு உதவும் உள்ளம் 
படைத்தவர்கள் மனித  நேயம் 
கொண்டவர்கள் என்று 
அழைக்கப்படுகிறார்கள். 

ஆனால் அவ்வாறு அழைப்பது 
சரியில்லை என்றே தோன்றுகிறது. 

இந்த  உலகில் மனித வடிவில் 
விலங்குகளும் விலங்கு வடிவில் 
மனிதர்களும் இருக்கத்தான் 
செய்கின்றன 

நாய் நன்றியுள்ள பிராணி என்று அழைக்கிறோம். 
அது தன்னை வளர்ப்பவர்களிடம் காட்டும்  பாசம் 
நேசம், அன்பு எழுத்தில் வடிக்க இயலாதது. 
சில நாய்கள் தங்களின் எஜமானருக்காக உயிரை 
தியாகம் செய்திருக்கின்றன. 

மாடுகளை, யானைகளை ,குதிரைகளை 
மனிதன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து எவ்வளவு 
துன்புறுத்தி வதைத்தாலும் அவனுக்காக உயிர் 
உள்ளளவும்  உழைக்கின்றன.

விலங்கினங்கள் பெரும்பாலானவை அவன் 
வயிற்றுக்குள்  தள்ளுவதற்காகவே தோன்றியவை 
என்று மனிதன் மமதை கொண்டு அவைகளை 
கொன்று அவன் மமதை கொண்டு திரிகிறான் 

அவன் கோடிக்கணக்கான உயிர்களை 
கொல்வதைப்  பற்றி கவலைப்படுவதில்லை.

ஆனால் ஒரு புலியோ பாம்போ அவன் இருக்குமிடத்தில் வேறு வழியின்றி புகுந்து ஒரு மனிதரைக் கொன்றுவிட்டால் அந்தஊரே திரண்டு அதை கொடூரமாக கொலை செய்ய பல ஆயிரம் ரூபாய்களை செலவழிக்க தயங்குவதில்லை இதுதான் அவனுடைய மனிதநேயம் (விலங்கு நேயம்) 

அதே நேரத்தில் அவனை பாம்பு கடித்துவிட்டால் எண்ணத்தில்   நஞ்சு தன்மை கொண்ட  அவன்  உயிர் காக்க அந்த பாம்பின்  நஞ்சுதான் நஞ்சு முறிப்பு மருந்தாக தேவைப்படுகிறது 


அந்த மனிதனை கொன்று தின்னும்  காபாலிக 
கூட்டம் அன்றும் உண்டு நர பலி என்ற பெயரில் 
இன்றும் உண்டு என்றும் உண்டு 

எந்த உழைப்பையும் செய்யாமல் மற்றவர்களின் 
உழைப்பின் பலன்களை பறித்து சென்று உடல் 
வளர்க்கும்  திருடர்கள், அரசியல் வாதிகள், கொள்ளையர்கள் சுயலபிசாசுகள்,ஏமாற்றுக்காரர்கள், பொய், பித்த லாட்டக்காரர்கள்
ஊடக தொலைகாட்சி நடத்துபவர்கள் போன்ற பலவகையான 
குரங்குகள் மனிதர்களிடையே ஏராளம் ஏராளம். 

இதைதவிர உழைத்து உடலை வளர்த்து மனிதர்களுக்கு 
பலவிதங்களில் தங்களை அர்ப்பணிக்கும் பசு, போன்ற 
விலங்குகளையே கொன்று தின்று வயிறாய் நிரப்பும் 
சிங்கம், புலி, போன்ற எண்ணற்ற விலங்குகளும் 
மனிதர்களிடையே ஏராளம், ஏராளம் .

இறைவன் படைப்பில் எல்லா உயிர்களும் ஒன்றுதான்.
எல்லாம் பிறக்கும் வளரும் ஒருநாள் மறையும்  என்பது 
மாற்றமுடியாத நியதி. 
 
விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் வடிவங்கள் வேறுபடலாம் 
ஆனால் குணங்கள் வேறுபடுவதில்லை  என்பது உண்மை. 

No comments:

Post a Comment