Monday, January 25, 2016

நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கண்டு !

நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கண்டு !

நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கண்டு !


கல்விக் கூடங்களா  இல்லை கொலைக் களங்களா 

இன்றைய நாளிதழில் ஒரு மாணவி நீச்சல் பிரிவில் பல 
பதக்கங்களை பெற்றவள் பள்ளிக்கு செல்லும் பேருந்து 
பயணக் கட்டணத்தை செலுத்த இயலாமையினால் 
தன் வாழ்வை முடித்துக்கொண்டாள் 

தமிழ் நாட்டில் கல்லூரி மாணவிகள் இதுபோன்ற நிலை காரணமாக 
தங்கள் வாழ்வை முடித்துக் கொண்டனர்.கல்லூரி முதல்வர்  கைது. 

தினமும் இது போன்ற செய்திகள் ஊடகங்களை வந்து கொண்டு இருக்கின்றன 

நாம் அனைவரும் படித்துவிட்டு அடுத்த செய்திக்கு தாவிக் கொண்டிருக்கிறோம். 

மிருகம் போல் வாழ்பவனை மனித்னாக்குவதுதான் கல்வி. 

அது ஒரு சேவை 

ஏறக்குறைய 25 ஆண்டுகள் பல கோடி ரூபாய் செலவு செய்து 
ஒரு பட்டத்தை  பெற்று பிறகு மற்றவரிடம் அடிமை சேவகம் செய்து மாதம் சில ஆயிரம் முதல் சில லட்சம் வரை ஊதியம் பெறுவதற்கு வழி செய்யும் 
இந்த உருப்படாத கல்வி முறையினால் ஆகும் பயன் என்ன  என்று புரியவில்லை? 


ஆம் நம் நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக

கல்வி துறையில் நடக்கும் பகல் கொள்ளைகள்,


கண்டிப்பு என்ற போர்வையில் நடத்தப்படும்

காட்டுமிரண்டிதனமான அடக்குமுறைகள்


ஜாதி, ஏழ்மை போன்றவற்றை குறி வைத்து

அப்பாவி மாணவர்கள் மீது தொடுக்கப்படும்

தாக்குதல்கள்,


அதனால் ஏற்படும் மன உளைச்சலிலிருந்து

விடுபட முடியாமல் மரணத்தை தழுவும்

நம் நாட்டின் எதிர்கால செல்வங்கள்,


இதை எந்த அமைப்புகளும் அரசுகளும்

கண்டு கொள்ளாமல் கண்டன அறிவிப்புகளை

மட்டும் வெளியிட்டுவிட்டு தங்களின்

அடுத்த போராட்டத்திற்கு தாவும்  முதுகெலும்பற்ற

அரசியல் கட்சிகள்


வெறும் உதவி தொகைகளை மட்டும் அறிவித்துவிட்டு

பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை எடுக்க

திராணியற்ற கையாலாகாத அரசுகள்


இதற்கு என்றுதான் முற்றுப்புள்ளி யார்

வைக்கப் போகிறார்களோ தெரியவில்லை.?


கல்வி நிறுவனங்கள் முதல் போட்டு லாபம் பார்க்கும்

வியாபார நிறுவனங்களாக மாறி விட்டதால்தான்

இந்த கொடுமைகள் அனு  தினமும் அரங்கேறி வருகின்றன


காசு இருப்பவன் எவ்வளவு வேண்டுமானாலும் செலவு

செய்து படிக்கட்டும் .கவலையில்லை


காசில்லாதவன் காசு இல்லாவிடில் படிக்கக் கூடாதா ?


அவன் கல்வி நிறுவனங்களால் சிறுமை படுத்தப்பட்டு

தனிமைப்படுத்தப்பட்டு சீரழியத்தான் வேண்டுமா?

என்பதுதான் என் கேள்வி.


கோடிக்கணக்கான பணத்தை வீணடிக்கும் அரசுகள்

மக்களை ஏமாற்றி பிழைக்கும் தொலைகாட்சி ஊடகங்கள்,

கவைக்குதவாத சக்கைகளை நம் தலையில் கட்டி கோடி கோடியாய்

கொள்ளையடிக்கும் பன்னாட்டு சுரண்டல் நிறுவனங்கள்

வாழ்வில் உண்மையை கடை பிடிக்காமல் வெறும்

நடிப்பையே மூலதனமாக  வைத்து  லட்சக்கணக்கில்

கோடிக்கணக்கில் வருவாய் ஈட்டும் நடிகர்கள்  போன்றோர்

இந்த அபாக்கியவான்களுக்கு உதவ ஏன் முன்வரக்கூடாது ?


எந்த ஒரு மாணவனையும் அவனுடைய இயலாமையினை

காரணம் காட்டி அவர்களை மரணக் குழியில் தள்ள நினைக்கும்

மதி கேடர்கள் மனம் திருந்தி அவர்களை அந்த நிலையிலிருந்து

மீட்கும் உயர்ந்த குணம் வரவேண்டும்.


தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம் என்ற பாரதியை நாம் வறுமையில் வாடவிட்டு சாகடித்த வள்ளல் பரம்பரை அளவோ நம் தமிழ் சமுதாயம்

இதைத் தடுத்து நிறுத்த  நடவடிக்கை எடுக்குமா என்பது கேள்விக்குறிதான்?

6 comments:

  1. நெஞ்சம் கனக்கின்றது ஐயா..

    இதற்கு முன் -
    எத்தனையோ கேள்விக் குறிகளை அல்ல
    கேள்விக் கணைகளை எய்தாகி விட்டது..

    அரசு இயந்திரமாகி விட்டது..

    ReplyDelete
  2. இயந்திரத்தின் மீது தவறில்லை
    அதற்கு இதயம் கிடையாது
    உயிரும் கிடையாது
    உணர்வும் கிடையாது

    ஆனால் அதை இயக்குபவர்களும்
    ஈவிரக்கமற்ற இயந்திரம்போல்
    ஆகிவிட்டதுதான் இன்றைய நிலைமை

    ஆனாலும் அல்லல்பட்டு ஆற்றாது

    அழுபவர்களின் கண்ணீர் ஒருநாள்

    இவர்கள் மீது படிந்த கறைகளை கழுவி
    பழி தீர்த்துக்கொள்ளும்

    ReplyDelete
    Replies
    1. நானும் இதைத்தான் இலை மறைவு காய் மறைவாக சொல்லியிருக்கின்றேன்..

      >>> ஆனாலும், அல்லல்பட்டு ஆற்றாது
      அழுபவர்களின் கண்ணீர் ஒருநாள்
      இவர்களைப் பழி தீர்த்துக்கொள்ளும்.. <<<

      சத்தியமான வார்த்தைகள்!..

      Delete
    2. உண்மையை உள்ளபடி தான் கூறவேண்டும்.
      அப்படி கூறுபவர்கள் நம் நாட்டில் இனி உயிருடன்
      வாழமுடியாத சூழ்நிலை இந்த நாட்டில் மட்டுமல்ல
      உலகெங்கிலும் இதே நிலைமைதான் என்பது
      கவலைக்குரிய உண்மை

      Delete
  3. Excellent article.idhai paddikkumpothu nam nenju kothikirathu. Our God His Alimighty should give proper advise to them to give proper education opportunities to poor and needing persons.Radha Krishna. M. Mohan. Urappakkam

    ReplyDelete
    Replies
    1. After reading the incidents about this in the morning newpaper my heart's outporings made me to write this article.
      some good thing must happen in this regard.
      TRP

      Delete