Tuesday, January 29, 2019

இசையும் நானும் (349)-திரைப்படம்- ஆனந்த ஜோதி (1963) பாடல்- ஒரு தாய் மக்கள் நாமென்போம்


இசையும் நானும் (349)-திரைப்படம்- ஆனந்த ஜோதி   (1963) பாடல்- ஒரு தாய் மக்கள் நாமென்போம்-ஒன்றே எங்கள் குலமென்போம்


MOUTHORGAN VEDIO-349

இசை -விஸ்வநாதன் ராமமூர்த்தி

படம்: ஆனந்த ஜோதி 

பாடியவர்: டி .எம்.சவுந்தர்ராஜன் 

பாடல் வரிகள்-கண்ணதாசன் 





ஆ: ஒரு தாய் மக்கள் நாமென்போம்
ஒன்றே எங்கள் குலமென்போம்
தலைவன் ஒருவன் தானென்போம்
சமரசம் எங்கள் வாழ்வென்போம்
சமரசம் எங்கள் வாழ்வென்போம்
ஒரு தாய் மக்கள் நாமென்போம்..
வாழ்க…வாழ்க…வாழ்க…

ஆ: பொதிகை மலையில் பிறந்தவளாம்
பூவை பருவம் அடைந்தவளாம்
கருணை நதியில் குளித்தவளாம்
காவிரி கரையில் களித்தவளாம் (ஒரு தாய்)


ஆ: உரிமையில் நான்கு திசை கொண்டோம்
உறவில் நண்பர்கள் பலர் கொண்டோம்
மூத்தவர் என்னும் பெயர் கொண்டோம்
முத்தமிழ் என்னும் உயிர் கொண்டோம் (ஒரு தாய்)


ஆ: தர்மத்தின் சங்கொலி முழங்கிடுவோம்
தமிழ் தாயின் மலரடி வணங்கிடுவோம்
அமைதியை நெஞ்சினில் போற்றி வைப்போம்
ஆனந்த ஜோதியை ஏற்றி வைப்போம் (ஒரு தாய்)




Monday, January 28, 2019

நானும் ஒரு ஓவியன் தான்.

நானும் ஒரு ஓவியன் தான்.




சுமார் 48 ஆண்டுகளுக்கு முன்பு 
நான் வரைந்த பென்சில் ஓவியம்.

நண்பர்களின் பார்வைக்கு. 


Sunday, January 27, 2019

நானும் ஒரு ஓவியன் தான்.

நானும் ஒரு ஓவியன் தான்.




இன்றய ஓவியம் 
ஆப்பிரிக்கா யானைக்குட்டி. 

ஆனை ஆனை 
அழகர் ஆனை 
அழகிய மணவாளன் ஏறும் ஆனை 
குட்டி ஆனைக்கு 
கொம்பு முளைச்சுத்தான் 
பட்டணமெலாம் பறந்தோடி போச்சாம். 

இந்த பாடலை 61  ஆண்டுகளுக்கு முன்பு  என் பாட்டி குழந்தைகளை கையில் பிடித்துக்கொண்டு பாடியது  இந்த யானை ஓவியத்தை வரைந்ததும் நினைவுக்கு வந்தது



பென்சில் ஓவியம்-தி,ரா,பட்டாபிராமன் 

Friday, January 25, 2019

குடியரசு தின வாழ்த்துக்கள்




குடியரசு தின  வாழ்த்துக்கள் 

கொண்டாடுவோம் முடியரசை
வீழ்த்தி குடியரசை அமைக்க
அடித்தளம் அமைத்த  அந்த முகம் தெரியா
கோடானுகோடி விடுதலை வீரர்களுக்கும்
அதை செயலில் கொண்டு வர வழி வகுத்த
உத்தம தலைவர்களை நினைவில் கொண்டு
குடியரசு தின  விழாவினை கொண்டாடி
மகிழ்வோம்.

குடி மக்களை தன் மக்கள் போல் கருதி
அரசர்கள் ஆட்சி செய்த நம் திருநாட்டில் குடிக்க
கற்றுக்கொடுத்து ,அவர்களுக்கு அரசு
செலவில் மதுவை விற்று அவர்களை
மதி மயங்க செய்து மூடர்களாக்கி
ஆள்பவர்கள் மன்னர்கள் போல்
வளம் பெற்று பவனி வருவதை
கண்டு மனம் வெதும்பாமல் "குடியரசு தின  விழா"
கொண்டாடுவோம்.

ஆராயாது தவறான நீதி வழங்கியமைக்காக
தன்னையே தண்டித்துக் கொண்ட மதிப்புமிகு
மன்னர்களாண்ட  மண்ணில் நீதிமன்றம்
தண்டித்தாலும் கண்டித்தாலும் கண்டு கொள்ளாது
ஆட்சியில் நீடிக்கும் நம் நாட்டு ஆளும் வர்க்கம்
வாழ்க வாழ்க என்று குடியரசு தினம் கொண்டாடுவோம்.

உழைப்பவர்கள் வாழ்வையும் உழைப்பையும்
சூறையாடி உண்டு கொழுக்கும் அனைத்து  தீய சக்திகளும்
புற்றீசல்போல் பெருகி வளர  உதவி செய்யும்
சிந்தனை திறன் இல்லாத மக்கள் சமூகத்தை
உருவாக்கி அதிர் குளிர் காயும் வாய்ச் சொல் வீரர்கள்
வாழ்க வாழ்க என்று குடியரசு தினம் கொண்டாடுவோம்.

நாட்டை சுற்றிலும் பாதுகாப்பின்மை ஒருபுறமிருக்க
நாட்டின் உள்ளே நம் ஜனநாயகத்தை சீர்குலைக்கும்
பல தீய சக்திகள் சுதந்திரமாய் நடமாடிட
சுயநல சுரண்டல் பெருச்சாளிகள் கர்வத்தோடு செயல்பட
தம்மையே அழிக்கும் புரையோடிய ஊழலையும்
சுற்றுப்புற சூழல் மாசுகளையும் கண்டும்
காணாதும் இருந்துகொண்டு ஒருநாள் கூத்து போல்
குடியரசு தினம் கொண்டாடுவோம்.

பல துறையில் முன்னேற்றம் கண்டோம் -எனினும்
பிறரோடு பழகுவதில் குறையையே காண்கின்றோம்.
இருப்பதை பிறரோடு பகிர்வதில் இணக்கமில்லை
அன்போடு அனைவரோடும் அனுசரித்து வாழ
மனமில்லை.

இங்கு ஒரு பேச்சு .அங்கு ஒரு பேச்சு
இன்று ஒரு பேச்சு நாளை ஒரு பேச்சு.
பொய்யுரைப்பதிலோ வாள்போல் வீச்சு
மூச்சு நின்றால்   அனைத்தும் போச்சு.





தேங்காயில் சமைத்த சோறு தின்ன வாரியளா ?

தேங்காயில் சமைத்த சோறு தின்ன வாரியளா ?




தேங்காயில் சமைத்த சோறு தின்ன வாரியளா ?

தேங்காயில் உள்ள நீரில்
அரிசியை போட்டு வேகவைத்து  சமைத்து
தானும் உண்டு குரங்கு குட்டிகளுக்கும்
கொடுக்கும் இந்த காணொளியை
கண்டு மகிழுங்கள்.
காட்டில் அருவியின் சலசலக்கும்
ஓசையை ரசித்துக்கொண்டே.

பாத்திரங்கள் ஏதுமில்லாமல் தேங்காயில் உணவு சமைக்கும்
உத்தியை இப்போதுதான் பார்க்கிறேன்.


Thursday, January 24, 2019

இசையும் நானும் (347)-HINDI திரைப்படம்- VISHWAS (1969) பாடல்-चाँदी की दीवार ना तोड़ी




இசையும் நானும் (347)-HINDI திரைப்படம்- VISHWAS (1969) 

பாடல்-चाँदी की दीवार ना तोड़ी


MOUTHORGAN VEDIO-347


chandi ki deewar lyrics માટે છબી પરિણામ

Movie/Album: विश्वास (1969)
Music By: कल्याणजी आनंदजी
Lyrics By: गुलशन बावरा
Performed By: मुकेश

Chandi Ki Deewar Na Todi
Pyar Bhara Dil Tod Diya
Ek Dhanwan Ki Beti Ne
Nirdhan Ka Daman Chhodh Diya
Chandi Ki Deewar...

Kal Tak Jisne Kasme Khai
Dukh Mein Saath Nibhane Ki
Aaj Woh Apne Sukh Ki Khatir
Ho Gayi Ek Begaane Ki
Shehnaiyon Ki Goonj Mein Dab Ke
Reh Gayi Aah Deewane Ki
Dhanwano Ne Deewane Ka
Gam Se Rishta Jod Diya
Ek Dhanwan Ki Beti Ne...

Woh Kya Samjhe Pyar Ko Jinka
Sab Kuch Chandi Sona Hai
Dhanwano Ki Is Duniya Mein
Dil To Ek Khilon Hai
Sadiyon Se Hi Toot-ta Aaya
Dil Ka Bas Yeh Rona Hai
Jab Tak Chaha Dil Se Khela
Aur Jab Chaha Tod Diya
Ek Dhanwan Ki Beti Ne ...


Tuesday, January 22, 2019

அந்த நாள் நெஞ்சிலே வந்ததே.. நண்பனே.நண்பனே

அந்த நாள் நெஞ்சிலே வந்ததே.. நண்பனே.நண்பனே

அந்த நாள் நெஞ்சிலே வந்ததே..
நண்பனே.நண்பனே 


அந்த நாள் நெஞ்சிலே வந்ததே
வந்ததே..நண்பனே நண்பனே

இந்த நாள் அன்றுபோல் இன்பமாய்
இல்லையே ..நண்பனே நண்பனே.

இரண்டு சக்கர மிதி வண்டியில்
ஆனந்தமாய் மனைவி மக்களுடன்
சவாரி செய்து மகிழ்ந்த அந்த நாட்கள்
இனி வருமோ? வராது.




                                                                          பென்சில் ஓவியம்-தி.ரா.பட்டாபிராமன் 

காலம் கடந்தது ...கடந்தவைதான்.

35 ஆண்டுகள் சைக்கிள் சவாரி.
கால் முட்டி தேய்ந்துவிட்டதால் மருத்துவர் அறிவுரைப்படி
16 ஆண்டுகளுக்கு முன் ஓய்வு அளிக்கப்பட்டுவிட்டது சைக்கிள் சவாரிக்கு.
அதற்கு பிறகு முடிந்த அளவு நடைப்பயணம்தான். இப்போது அதுவும் இல்லை. எங்குசெல்லவேண்டுமென்றாலும் வாடகை வண்டிதான்.

இருந்தாலும் அந்த கால பசுமையான நினைவுகளை நெஞ்சம் என்றும் மறப்பதில்லை. ஒன்றா இரண்டா .எண்ணற்றவை. எளிதில் மறக்க முடியாதவை. 

Monday, January 21, 2019

முகத்திற்கும் அதிர்ஷ்டத்துக்கும் தொடர்பு உண்டா?

முகத்திற்கும் அதிர்ஷ்டத்துக்கும் தொடர்பு உண்டா?

முகத்திற்கும் அதிர்ஷ்டத்துக்கும்
தொடர்பு உண்டா?

முகத்திற்கும் அதிர்ஷ்டத்துக்கும்
தொடர்பு உண்டா?

இல்லை .இல்லை அது மூட நம்பிக்கை
என்று கூறுபவர்கள் சிலர்.

ஆம் உண்மைதான்.
என்று நம்புபவர்கள் பலர்.

ஒரு வேலைக்கு போகும்போதோ,
அல்லது தொடங்கும்போதோ
சில மனிதர்கள்,விலங்குகள், பறவைகள்
முகங்களில் விழிக்கக்கூடாது என்று
பட்டியலே போட்டு வைத்திருக்கிறார்கள்.

ஏதாவது நடக்காமல் போனால் இன்னார் முகத்தில்
விழித்ததனால்தான் நடக்காமல் போயிற்று என்று
அவர்களை வெறுப்போடு கரித்து கொட்டுபவர்கள்  பலர்.






அதேபோல் இவர் முகத்தில்  விழித்தால்
அதிருஷ்டம் என்று ஒரு பழமொழி
மக்களிடையே நிலவி வருகிறது.
அது உண்மையா? 

நானும் ஒரு ஓவியன் தான்



நானும் ஒரு ஓவியன் தான்


நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் 

ஓவியம் வரைய தொடங்கியுள்ளேன். 

sketch pen ஐ  பயன்படுத்தி இன்று மாலை வரைந்தேன். 

ஓவியம் இதோ. 


Sunday, January 20, 2019

வாருங்கள் மான்களோடு கொஞ்சி விளையாட..

வாருங்கள் மான்களோடு கொஞ்சி விளையாட..




வாருங்கள் மான்களோடு  கொஞ்சி விளையாட...


ஜப்பானில்மான்களுக்காக
என்று தனியாக ஒரு
சரணாலயம் உள்ளது.

அதன் பெயர்    NARA PARK

அங்கு ஆடு மாடுகள்போல்
 சர்வ சகஜமாக மான்கள்
சுற்றி திரிகின்றன.

பொதுவாக மான்கள் மிகவும் கூச்ச
சுபாவம் உடையவை.

ஆனால் இங்கு நிலைமை வேறு.

அங்கு  வரும் அத்தனை மனிதர்களிடமும்
செல்ல பிராணிகள்போல் அன்போடு
பழகுவதை காண்பது  கண் கொள்ளா
காட்சியாக இருக்கிறது.

எங்கு பார்த்தாலும் இயற்கையன்னை
பச்சைப் பசேல் என்று புல்வெளியாய்
கண்களுக்கு இதமாய் காட்சி தருகிறாள்.

இதுபோன்ற சரணாலயம் நம் நாட்டில் இருந்தால்
அத்தனை மான்களும் மனிதர்களின்
வயிற்றுக்குள் என்றோ போயிருக்கும்.

அங்கே ஓடும் பேருந்து மற்றும் கார்கள் ஓட்டுபவர்கள்
மான்களுக்கு ஆபத்து ஏற்படாவண்ணம்
வாகனங்களை செலுத்துகின்றனர்.

நண்பர்களே இந்த அறிய காட்சியை
தவறாமல் கண்டு களிக்க வேண்டுகிறேன்.



Tuesday, January 15, 2019

நாளை நடப்பதை யாரறிவார்?

நாளை நடப்பதை யாரறிவார்?

நாளை நடப்பதை யாரறிவார்?

மும்பை படவுலகில் லக்ஷ்மிகாந் பியாரிலால் போன்ற இசையமைப்பாளர்களுடன் பணியாற்றிய   70 வயதைக் கடந்த பிரபல ஹார்மோனியம் இசைப்பவர்  திரு. கேசவலால் தந் மனைவியுடன்
30 ஆண்டுகளுக்கு மேலாக யாரும் ஆதரவின்றி சாலை ஓரத்தில் துன்பத்தில் வாழ்ந்து வருவருகிறார்.

தற்போது அவருக்கு தங்க இடமும் உணவும் அளிக்க ஒரு தொண்டு நிறுவனம்
ஏற்பாடு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அது தொடர்பான காணொளி கண்டு மகிழுங்கள்.







Monday, January 14, 2019

இசையும் நானும் (346)-திரைப்படம்- பாவை விளக்கு (1960) பாடல்-ஆயிரம் கண் போதாது வண்ணக்கிளியே

இசையும் நானும் (346)-திரைப்படம்- பாவை விளக்கு (1960) பாடல்-ஆயிரம் கண் போதாது வண்ணக்கிளியே


இசையும் நானும் (346)-திரைப்படம்- 

பாவை விளக்கு (1960)


பாடல்-ஆயிரம் கண் போதாது வண்ணக்கிளியே 

இசை -கே.வி .மகாதேவன் 

படம்: பாவை விளக்கு 

பாடியவர்: C.S. ஜெயராமன் 



கவிஞர்: A. மருதகாசி


MOUTHORGAN VEDIO-346


ஆயிரம் கண் போதாது வண்ணக்கிளியே …. ஆயிரம் கண் போதாது வண்ணக்கிளியே குற்றால அழகை நாம் காண்பதற்கு வண்ணக்கிளியே ஆயிரம் கண் போதாது வண்ணக்கிளியே குற்றால அழகை நாம் காண்பதற்கு வண்ணக்கிளியே தென்றல் இசை பாடி வரும் தேனருவி ஆடிவரும் ம் …ம் …ம் ..ம் …ம் …ம் .. தென்றல் இசை பாடி வரும் தேனருவி ஆடிவரும் அன்றலர்ந்த செண்பக பூ வண்ணக்கிளியே அன்றலர்ந்த செண்பக பூ வண்ணக்கிளியே எங்கும் ஆனந்த காட்சி தரும் வண்ணக்கிளியே ஆனந்த காட்சி தரும் வண்ணக்கிளியே ஆயிரம் கண் போதாது வண்ணக்கிளியே குற்றால அழகை நாம் காண்பதற்கு வண்ணக்கிளியே எங்கும் பனி தூங்கும் மலை .....................……. எங்கும் பனி தூங்கும் மலை வண்ணக்கிளியே நெஞ்சில் இன்ப நிலை தந்திடுதே வண்ணக்கிளியே எங்கும் பனி தூங்கும் மலை வண்ணக்கிளியே நெஞ்சில் இன்ப நிலை தந்திடுதே வண்ணக்கிளியே
கொஞ்சி வரும் ஐந்தருவி வண்ணக்கிளியே கொஞ்சி வரும் ஐந்தருவி வண்ணக்கிளியே இங்கே தங்க தமிழ் முழங்கிடுதே வண்ணக்கிளியே தங்க தமிழ் முழங்கிடுதே வண்ணக்கிளியே ஆயிரம் கண் போதாது வண்ணக்கிளியே குற்றால அழகை நாம் காண்பதற்கு வண்ணக்கிளியே மந்தி எல்லாம் மாங்கனியை பந்தாடி பல் இளிக்கும் ம் …ம் …ம் ..ம் …ம் …ம் .. மந்தி எல்லாம் மாங்கனியை பந்தாடி பல் இளிக்கும் சந்திரன் போல் சூரியனும் வண்ணக்கிளியே உறுதி தந்திடுவான் இன்று எங்கும் வண்ணக்கிளியே

ஆயிரம் கண் போதாது வண்ணக்கிளியே குற்றால அழகை நாம் காண்பதற்கு வண்ணக்கிளியே வண்ணக்கிளியே……  பாடல்: ஆயிரம் கண் போதாது வண்ணக்கிளியே


Saturday, January 12, 2019

நீங்கள் அத்தனை பேரும் உத்தமர்தானா சொல்லுங்கள்.

நீங்கள் அத்தனை பேரும்  
உத்தமர்தானா சொல்லுங்கள்.

நீங்கள் அத்தனை பேரும்
உத்தமர்தானா சொல்லுங்கள்
உங்கள் ஆசை மனதை
தொட்டுப் பார்த்து கொள்ளுங்கள்
என்ற ஒரு திரைப்பட பாடல் வரிகள்
அனைவருக்கும் பொருந்தும்

இதற்கு எந்த  சாயமும் பூச
வேண்டியதில்லை.

ஏனென்றால் இன்று ஓவ்வொரு கூட்டமும்
மற்ற கூட்டத்தை குறை கூறியே
பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கின்றன.

பிறர் மீது குறை காண்பதால்
யாரும் எந்நாளும்  உத்தமர் ஆகிவிடமுடியாது.

அவர்களுடன் வேண்டுமானால்
ஒரு கூட்டத்தை சிறிது காலம் தக்க வைத்துக் கொள்ளலாம்.

இறைவன் அனைவரையும் சமமாக
கருதி அனைத்து  உதவிகளையும் கேட்காமலேயே
வழங்குகின்றான்.

அவன் கருணையே வடிவானவன்.
அவன் ஒளியாய், மழையாய் ,காற்றாய்.
பறந்து விரிந்த வான்வெளியாய் ,ஒலியாய்
தன் படைப்புகள் நலமாக வாழ உதவுகின்றான்

ஆனால் ஆணவத்தால் அறிவிழந்து மனிதர்கள்
தங்களிடையே பிரிவுகளை உண்டாக்கிக்கொண்டு
ஒருவர் மீது குறை கூறி பகைமை பாராட்டிக்கொண்டு
இவ்வுலகை நரகமாக்கிவிட்டனர்.

பிறர் மீது குறை காண்பவன் தன்னிடம் உள்ள
குறைகளை காண மறுக்கிறான்.

அவன் என்றும் நிம்மதியாய் இருப்பதில்லை
எப்போதும் ஒரு பதட்டத்துடனேயே காணப்படுகிறான்.

அவனும் திருந்துவதில்லை.
மற்றவர்களையும் திருந்த  விடுவதில்லை.

ஆனால் தன் சக  உயிர்களிடம் பிரதிபலன் காணாது அன்பு செலுத்துபவர்களுக்கு இந்த குறை காணும் குணம் இருப்பதில்லை.

அன்பு என்பது இறைவனின் குணம் .

அது மனிதர்களிடம் பிரதிபலிக்கதொடங்கிவிட்டால்
அவர்கள் இறைவனிடம் தனியாக
எந்த விதமான வழிபாடும்
மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை.

ஒரு மனிதன் வாழ்நாளில் அடையவேண்டிய மிக பெரிய முக்கியமான சொத்து. எந்தவிதமான சூழ்நிலையிலும்
மனம் அமைதியாக இருப்பதுதான்.

இந்த அமைதியை பெறுபவர்களுக்காக
அங்கும் இங்கும் அலைகின்றனர்.
ஆயிரம், லட்சம் என சேர்த்து வைத்த  காசையும்
நேரத்தையும் வீணடிக்கின்றனர்.

அவர்களை வைத்து உலகம் முழுவதும்
ஏமாற்று பேர்வழிகள்
நல்ல காசு பார்க்கின்றனர்.

எத்தனையோ போலி சாமியார்களை
சிறைக்கு அனுப்பிய பின்பும்.
சிறையிலிருந்தே பலர் தங்கள்
ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றனர்.

அமைதி என்பது நம் உள்ளத்தில்தான்  உள்ளது.
அங்கே சில மாற்றங்களை செய்தால் அமைதி தானே வரும். 

உறக்கத்தில் அந்த அமைதியை தினமும்
 அனைவரும் அனுபவிக்கின்றோம். 
அதற்காக நாம் ஒரு முயற்சியும் செய்வதில்லை.
அது எப்படி என்றால் அப்போது மனமும்  இல்லை. நம்மை அலைக்கழிக்கும் எண்ணங்களும் இல்லை. அதுதான் காரணம்.

முயற்சியில்லாமல் அடையக்கூடிய ஒன்றுக்காக வீண் முயற்சி செய்வதுதான் அறிவீனத்தின் உச்ச கட்டம். 

அன்பில்லாமல் செய்யப்படும் அனைத்து  வழிபாடுகளும்
ஓட்டை பானையில் ஊற்றப்படும் தண்ணீர் போன்றதே.
அதில் என்றும் நீர் நிரம்பாது.

அதை அடைவதற்கு மிக எளிய வழி
அனைவரையும் நேசிப்பது.

அதுவும் தன்  மீது வெறுப்பை காட்டுபவர்களை
மிக அதிகமாக நேசிப்பது. 

அனைத்தும் இறைவன் ஒருவனுக்கே சொந்தம்.

அனைத்தும் இறைவன் ஒருவனுக்கே சொந்தம்.


அனைத்தும் இறைவன் ஒருவனுக்கே சொந்தம். 



ஒருவன் மற்றவரிடமிருந்து  ஒரு பொருளை திருடினால்
தண்டனை நிச்சயம் கிடைக்கும். இருந்தும் திருடுகிறான்.சிறைப்படுகிறான்
சிறையிலிருந்து வெளியே வந்ததும் இன்னும் பெரிய அளவில் திருடுகிறான். பிறகு இதுவே அவனுக்கு வாடிக்கையாகி விடுகிறது.

ஆனால் அவனுக்கு நல்ல நேரம் வந்தால்
நல்ல ஞானியை சந்திக்க நேர்ந்தால்
அவன் பல ஆண்டுகளாக செய்து வந்த தீய செயல்களை விட்டுவிட்டு நல்லதொரு பாதையை அமைத்துக்கொண்டு நல்ல நிலையை அடையலாம்
.
இராமாயண காவியத்தை இயற்றிய வால்மீகி
வழிப்பறி கொள்ளைக்காரனாக வாழ்க்கை நடத்தி வந்தார்.
நாரத முனிவரை சந்தித்ததும் அவர் வாழ்க்கை
இப்படித்தான் திசை மாறியது



அளவுக்கு அதிகமாக பொருளை சேர்ப்பவன் அதை அனுபவிக்க முடிவதில்லை.மாறாக அதை தம்மிடமிருந்து யாராவது பறித்து சென்று விடுவார்களோ அல்லது அவைகளை அனுபவிக்காமல் இந்த உலகை விட்டு சென்றுவிடுமோ என்று வாழ்நாள் முழுவதும் பயந்து சாகிறான்.
அதை பாதுகாக்கும் பொருட்டு சில நேரங்களில் போராடி திருடர்களால் கொல்லப்படுகிறான்.

வாழ்நாளில் வயிற்றைக் கட்டி வாயைக் கட்டி சேர்த்த  சொத்துக்கள் அவனுக்கு பலவித காரணங்களினால் பயன்படாமல் போய்விடுகிறது.

அவர்கள் தானும் அனுபவிப்பதில்லை
பிறருக்கும் அதை கொடுப்பதில்லை.

ஆனால் அவர்களுக்கு இறைவனின் கருணை இருந்தால் அவர்களை தடுத்தாட்கொள்ள தகுந்த ஒரு பெரியவரை அவர்களிடம் இறைவன் கண்டிப்பாக அனுப்பிவைப்பான்.

புரந்தரதாசர், பட்டினத்தார், பத்திரகிரியார்
கூரத்தாழ்வான் போன்ற போல எண்ணற்ற மனிதர்களுக்கு இறைவன் தடுத்தாட்கொண்ட நிகழ்வுகள் அனைவரும் அறிவர்.

அவர்கள் ஒரே கணத்தில் அத்தனை சொத்துக்களையும் தானம் செய்துவிட்டு துறவு பூண்டு இறைவனை  சரணடைந்து  விடுதலை பெற்றனர்.

இவ்வுலகில் உள்ள அனைத்தும் இறைவன் ஒருவனுக்கே சொந்தம். 
அவைகளுக்கு நாம் சொந்தம் கொண்டாடுவது அறிவீனம்.

இந்த உலகில் இறைவன் நமக்கு அளித்திருப்பதை அனுபவித்து மகிழ்வோம். அதே நேரத்தில் அவை நம்மை விட்டு சென்றுவிட்டால்  மனம் நொந்து வருந்தாமல் அமைதியாக இருக்க பழகி கொள்வோம்.



இதற்காகவா பிறந்தோம்?

இதற்காகவா பிறந்தோம்?

 இதற்காகவா பிறந்தோம்?

வாழ்க்கை வாழ்வதற்க்கே.

நாம் இந்த உலகிற்கு வந்து விதிக்கப்பட்ட
காலம் வரை இருந்துவிட்டு சென்றுவிடுவோம்

நாம் எங்கிருந்து வந்தோம் ,
மீண்டும் எங்கு செல்வோம் என்றும் தெரியாது.

இங்கு இருக்கும் காலத்தில் உறக்கத்தில்
ஒவ்வொரு நாளும் பெரும்பகுதி கழிந்துவிடுகிறது.

ஒரு குறிப்பிட்ட வயது வரை
பிறர் தயவில் நாம் வாழ்கிறோம்.

நாம் சுயமாக சிந்திக்கும் வரை பிறர் சொல்வதை
கேட்டுக்கொண்டு காலத்தை கழிக்கிறோம்.

சில காலம் சென்ற பிறகு பிறருக்காக
நம்மை பந்தம்,  பாசம், அன்பு, சேவை,கடமை,  என்ற போர்வையில்
நம்மை அழித்துக்கொள்ளுகிறோம்.

அதனால், ஆசை, கோபம், பொறாமை, பயம், ஏமாற்றம், மன  அழுத்தம் போன்ற உணர்ச்சிகளுக்கு அடிமையாகி துன்பங்களை சந்திக்கிறோம்.

ஒரு கால கட்டத்தில் நம்மால் ஒருவருக்கும் பயனில்லை என்ற நிலையில் இந்த உலகத்தினரால் ஒதுக்கப்பட்டு மன  வேதனையுடன். இந்த உலகை விட்டு நீக்கப்படுகிறோம்.

ஒரு கால கட்டத்திலும் நாம் நம்மைப் பற்றி சிந்திப்பதில்லை. 

இந்த உலகத்திற்கு வந்த நோக்கத்தை தெரிந்துகொள்வதில். அக்கறை காட்டுவதில்லை.

இப்படியேதான் ஒவ்வொரு பிறவியையும்
வீணடித்துக்கொண்டிருக்கிறோம்.

இந்த உலகத்தை சீர் செய்ய, தீய மனிதர்களை திருத்த தெய்வங்களே மனித வடிவில் வந்து தோற்றுப்  போய்  ஓடிவிட்டன.

இந்த உலகம் மீண்டும் மீண்டும் திருந்த  முடியாத அளவிற்கு சீர்கெட்டு போய்விட்டது.

அப்படி யாராவது முயற்சி செய்தால் அவர்களை குழப்பி மீண்டும் படுகுழியில் தள்ளுவதற்கு இந்த உலகத்தில் ஒரு பெரும் கூட்டமே நம்மை எப்போதும் கண்காணித்துக் கொண்டு தயாராக இருக்கிறது. அவைகளை எதிர்த்து போராட தெய்வத்தின் துணை அவசியம். அப்படி போராடுபவர்களை துன்புறுத்தி கொல்லுவதற்கு இந்த உலகம் தயங்காது என்பது சரித்திரம் காட்டும் உண்மை. 

அந்த வளையத்தை  உடைப்பது மிகவும் கடினம். ஆனால் முயற்சி செய்தால் விடுதலை உண்டு.

ஆகையால் உங்களுக்காக வாழுங்கள். கிடைத்த வாழ்க்கையை இன்பமாக வாழுங்கள்.இல்லாதவர்களுக்கு உதவுவதில் தவறில்லை. ஆனால்  உங்களை அழித்துக்கொண்டு பிறருக்கு உதவுவதால் உங்களுக்கு
ஒன்றும் கிடைக்கப்போவதில்லை. உலகம் உங்களை கொண்டாடப்போவதில்லை.

பிச்சைக்கார உலகம் இந்த வீட்டில் பிச்சை கிடைக்காவிடில் வேறு வீட்டில் பிச்சையெடுத்து பிழைத்துக்கொள்ளும்.

அவர்களுக்காக நீங்கள் இழந்த வாழ்க்கை எந்த நிலையிலும் உங்களுக்கு மீண்டும் திரும்ப கிடைக்கப் போவதில்லை

Friday, January 11, 2019

எதற்காக பிறக்கிறோம்?

எதற்காக பிறக்கிறோம்?

இந்த உலகில் பிறக்கிறோம்.?

இந்த கேள்வியை ஒவ்வொருவரும்
தனக்குள் கேட்டுக்கொள்ள வேண்டும். 

ஆனால் யாரும் அதைசெய்வதில்லை.

மாறாக எல்லோரையும் நாம்தான்  கேள்விகளைக் கேட்டு
பதில்களை வாங்கி நம் மண்டையில் திணித்துக் கொள்கிறோம்.

எதற்காக?

பிறர் யாராவது நம்மை அந்த கேள்வியைக் கேட்டால்
அவர்களுக்கு பதில் சொல்வதற்காக.

மனிதர்களைத் தவிர புத்தகங்களிலிருந்து வேறு
நம் கேள்விகளுக்கு பல விளக்கங்களை பெற்றுக்கொள்கிறோம்.

ஒவ்வொரு விளக்கமும் அவரவர்
பார்வையைப் பொறுத்து வேறுபடுகிறது.

இதனால் குழப்பம் ஏற்படுகிறது.

அதற்கு பிறகுதான் நாம் சுயமாக சிந்திக்க தொடங்குகிறோம்.
நாம் கேட்ட விளக்கங்களில் எது உண்மையானது என்பதை
முயற்சி செய்கிறோம்.

அதை செயலில் கொண்டு வரும்போதுதான்
அனுபவம் பெறுகின்றோம்.

இது இருக்கட்டும்
.
நாம் ஏன்  பிறக்கிறோம் என்றால்.நம் மனதில் உள்ள
நிறைவேறாத ஆசைகளை நிறைவேற்றிகொள்வதற்கு

நாம் நினைப்பதை செயல்படுத்தி இன்பம் அடைவதற்கு.

இன்பத்தை தேடும் முயற்சியில் இடைஇடையே
துன்பம் வந்தால் அதை அனுபவிப்பதற்கு.

ஆனால் அதை மட்டும் நாம் செய்வதில்லை.
நம் ஆசைகளை செயல்படுத்தினால்
மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்று பயந்து
மனதிற்குள்ளே மூடி வைத்து மன  நோய்க்கு ஆளாகி
பெரும்பாலானோர் வீணே மடிகின்றனர்.

ஒன்று ஆசைப்படாமல் இருக்க வேண்டும்.
அப்படி ஆசைப்பட்டுவிட்டால் அதை எப்படியாவது நிறைவேற்றிவிடவேண்டும்.

இப்படி செய்பவன்தான்
உலகில் மகிழ்ச்சியாக வாழ்கிறான்.

நம்முடைய ஆசைகள் பிறருக்கு துன்பம் வரவழைக்கும் எனில்
அதை முளையிலேயே கிள்ளிவிடவேண்டும்.

நாம் உயர்ந்த நிலைக்கு வருவதற்கு ஆசைப்படுவதில் தவறில்லை.
ஆனால் அதற்காக முயற்சிகள் மேற்கொள்ளாமல் பொறாமைக் குணத்தை மட்டும் வளர்த்துக்கொண்டால் தோல்வியும் அவமானமே  மிஞ்சும்.

ஆசைகள் இருக்கும்வரை பிறவிகள் தொடரும்.

பிறவிகள் என்றால் இன்பமும் துன்பம்
இருந்துகொண்டுதான் இருக்கும்.

இனி பிறவி வேண்டாம் என்றால்
எல்லா ஆசைகளையும் விட்டுவிடுங்கள்

வாழ்க்கையை அதன் போக்கில் அனுபவியுங்கள். 

Thursday, January 10, 2019

எல்லாம் முருகனே !


எல்லாம் முருகனே !


ஓவியம்-தி.ரா.பட்டாபிராமன். 

எல்லாம் முருகனே
எனக்கு எல்லாம் முருகனே (எல்லாம்)

தொல்லை மிகு இவ்வுலகில்
கவலை மாற்றி எல்லையில்லா
இன்பம் தருவது அவன் திருநாமமே (எல்லாம்)


அரோஹரா என்றாலும்
ஆறுமுகம் என்றாலும் அன்போடு
அழைக்கும் அடியவனுக்கு அழியா
பதம் அருள்வான் (எல்லாம்)


கந்தா என்றாலும்
கார்த்திகேயன் என்றாலும்
முத்துக்குமரா  என்றாலும்
உள்ளம் புகுந்து கள்ளம் அகற்றி
அமைதியும் ஆனந்த வாழ்வும்
அருள்வான். (எல்லாம்)

மயிலும் சேவலும் பாம்பும் அவன் திருவடியில்
பகை மறந்து பயமின்றி இருப்பதுபோல்
வணங்குவோர் வாழ்விலும் பகையில்லா
நட்பும் சுற்றமும் அருளிடுவான்


குன்றின் மீது நின்றருளும் தெய்வம் அவன்
நினைப்பவர் இதய கோயிலில் நிலைத்து நின்று
வழி நடத்தும் துணைவன் அவன்  (எல்லாம்)


Wednesday, January 9, 2019

இசையும் நானும் (345)-திரைப்படம்- ராமு(1966) பாடல்-பச்சை மரம் ஒன்று.


இசையும் நானும் (345)-திரைப்படம்- 

ராமு(1966)

 பாடல்-பச்சை மரம் ஒன்று.


இசை -எம்.எஸ்.விஸ்வநாதன்

குரல்: பி.சுசீலா

வரிகள்:  கண்ணதாசன் 


MOUTHORGAN VEDIO-345



பச்சை மரம் ஒன்று.
இச்சை கிளி ரெண்டு 
பாட்டு சொல்லி தூங்க வைப்பேன் ஆரீரோ..(2)

அள்ளித் தந்த அன்னை 
சொல்லித் தந்த தந்தை 
உள்ளம் கொண்ட பிள்ளை நானல்லவோ 

கட்டித் தங்கம் என்று 
கன்னம் தொட்டுக் கொண்டு 
ஆசை முத்தம் தந்தேன் ஆரிரரோ..(2)(பச்சை)

பெட்டைக் கிளி கொஞ்சும் 
பிள்ளைக் கிளி பாடும் 
தந்தைக் கிளி அங்கே தேடி வரும் (2)

இன்பம் என்ற போதும் 
துன்பம் வந்த போதும் 
என்றும் எங்கள் சொந்தம் மாறாது.(2)(பச்சை)

பாட்டு சொல்லி தூங்க வைப்பேன் ஆரீரோ..(2)




காணாமல் போய்விட்ட நாதஸ்வரம்

காணாமல் போய்விட்ட நாதஸ்வரம்

காணாமல் போய்விட்ட நாதஸ்வரம்

સંબંધિત છબી


தமிழ்நாட்டின் பாரம்பரியமான நாதஸ்வரம்
இன்றுகாணாமல் போய்விட்டது.

எங்கு பார்த்தாலும் குத்து திரைப்பட பாடல்கள்தான் காதைக்
கிழிக்கிறது

முன்னொரு காலத்தில் திருவாடுதுறை.ராஜரத்தினம், வேதாரண்யம் வேதமூர்த்தி ,என்.பி.என்.பொன்னுசாமி, காருகுறிச்சி .அருணாச்சலம் ,நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன் ,பொன்னுத்தாயி போன்ற பல மேதைகள் நாதஸ்வர  உலகில் கோலோச்சிய கோலோச்சிய காலம் மலையேறி போய்விட்டது.

கோயில் திருவிழாக்களிலும் திருமண மேடைகளில் தாலி  கட்டும்போது கெட்டி மேளம் அடிப்பதற்கும் நாதஸ்வரம்  பயன்படும். நிலைக்கு மட்டும் வந்துவிட்டது.

ஆனால் ஸ்ரீலங்காவில் மக்கள் மிகவும் விரும்பி ரசிக்கும்இசைக் கருவிகளில் ஒன்றாக நாதஸ்வரம் இருந்து வருகிறது.

சமீபத்தில் ஒரு காணொளியைக் கண்டேன். திரைப்பட பாடல்களை எவ்வளவு அருமையாக இசைக்கிறார்கள்! நீங்களும் அதை கேட்டு இன்புறுங்கள்.

images courtesy-google images

Tuesday, January 8, 2019

யானைகளால் என்ன பயன்?


யானைகளால் என்ன பயன்?

யானைகளால்  பயன்?

அவைகள் உலகை வாழ வைக்க வந்த 
ஒரு அபூர்வ இனம். 
யானைகள் இல்லையேல் 
காடுகள் இல்லை. 
காடுகள் இல்லையேல்
மழை இல்லை 
நமக்கு உயிர் வாழ நீர் இல்லை. 

இந்த அடிப்படை உண்மையை உணராமையால்தான் 
மனிதர்கள் முன்னாளில்  யானைகளை துன்புறுத்தி பழக்கி 
போரில் ஈடுபடுத்தி அழித்தும்
அதன் தந்தங்களுக்காக அவைகளை லட்சக்கணக்கில் கொன்றும் 
கோயில்களில் காட்சி பொருளாக வைத்து கொடுமைப்படுத்தியும் 
அவைகளின் வாழ்வாதாரத்தை அழித்தும் இன்று சொல்லொணா 
துன்பத்தில் தவிக்கின்றனர். 

அவைகளின் வாழ்விடத்தில் மனிதர்கள் ஆக்கிரமித்து விட்டதால் 
அவைகள் மனிதர்களின் குடியிருப்புகளை நாடி வரவேண்டிய 
சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டன. 

உண்மையில் இயற்கையில் உள்ள அனைத்துஉயிரினங்களும்
பாதுகாக்கப்பட வேண்டுமென்றால் வனத்தில் மனிதர்கள் அவைகளை 
இயல்பாக சுதந்திரமாக வாழவிட வேண்டும். 

கோடை காலங்களில் ஆறுகளில், குட்டைகளில் நீர் வறண்டுபோகும் 
நிலையில்  யானைகள் தங்கள் தந்தங்களை 
பயன்படுத்தி பள்ளங்களை உருவாக்கி அதில் வரும் நீரை 
பயன்படுத்திக்கொள்ளும்.
அது வனத்தில் உள்ள மற்ற பிராணிகளுக்கும்
உதவியாக அமையும். 

யானைகள் உண்ணும் தாவரங்கள் முழுவதும் 
ஜீரணமாகாமல் உள்ள விதைகள் 
அவைகளின் சாணத்துடன் மண்ணில் விழுந்து
அது செல்லும் இடங்களில் 
எல்லாம் முளைத்து செழிப்பாக வளரும். 
அதனால் காடுகள் அழியாமல் பாதுகாக்கப்படும்

மனித குலம்  நன்றாக இருக்கவேண்டுமானால் 
வெறும் யானை முகம் கொண்ட பிள்ளையாரை 
மட்டும் வணங்கினால் போதாது.


12-ராசி கணபதி- ஓவியம் -தி.ரா. பட்டாபிராமன் 

யானைகளையும் 

வாழவிடவேண்டும் .