Tuesday, January 22, 2019

அந்த நாள் நெஞ்சிலே வந்ததே.. நண்பனே.நண்பனே

அந்த நாள் நெஞ்சிலே வந்ததே.. நண்பனே.நண்பனே

அந்த நாள் நெஞ்சிலே வந்ததே..
நண்பனே.நண்பனே 


அந்த நாள் நெஞ்சிலே வந்ததே
வந்ததே..நண்பனே நண்பனே

இந்த நாள் அன்றுபோல் இன்பமாய்
இல்லையே ..நண்பனே நண்பனே.

இரண்டு சக்கர மிதி வண்டியில்
ஆனந்தமாய் மனைவி மக்களுடன்
சவாரி செய்து மகிழ்ந்த அந்த நாட்கள்
இனி வருமோ? வராது.




                                                                          பென்சில் ஓவியம்-தி.ரா.பட்டாபிராமன் 

காலம் கடந்தது ...கடந்தவைதான்.

35 ஆண்டுகள் சைக்கிள் சவாரி.
கால் முட்டி தேய்ந்துவிட்டதால் மருத்துவர் அறிவுரைப்படி
16 ஆண்டுகளுக்கு முன் ஓய்வு அளிக்கப்பட்டுவிட்டது சைக்கிள் சவாரிக்கு.
அதற்கு பிறகு முடிந்த அளவு நடைப்பயணம்தான். இப்போது அதுவும் இல்லை. எங்குசெல்லவேண்டுமென்றாலும் வாடகை வண்டிதான்.

இருந்தாலும் அந்த கால பசுமையான நினைவுகளை நெஞ்சம் என்றும் மறப்பதில்லை. ஒன்றா இரண்டா .எண்ணற்றவை. எளிதில் மறக்க முடியாதவை. 

4 comments:

  1. அதே நிலையில் என்பதால்
    கூடுதலாய் இந்தப் பதிவை இரசிக்க முடிகிறது
    எழுத்தும் ஓவியமும் அற்புதம்
    வாழ்த்துக்களுடன்...

    ReplyDelete
    Replies
    1. .நன்றி அன்பரே. இந்த ஓவியத்தில் தந்தை பொறுப்பாக வண்டியை ஒட்டி செல்கிறான். தாயோ தன்கணவனுடன்
      பின் இருக்கையில் வசதியாக அமர்ந்து செல்வதை நினைத்து மகிழ்வதை பாவம் காட்டுகிறது. குழந்தையோ தாயின் அரவணைப்பில் எந்த கவலையுமில்லாமல் புன்னகையோடு பயணிக்கிறது. இந்த போல் நாமும் அம்மையப்பனிடம் சரணடைந்துவிட்டால் எந்த கவலையுமின்றி இவ்வுலகில் வாழலாம். இன்னொன்றும் இந்த படத்தைப் பார்த்ததும் என் நினைவிற்கு வருகிறது டபுல்ல்ஸ் சென்றால் காவல் துறையினரிடம் சிக்கி அபராதம் கட்டியதும் புரட்சி தலைவர் ஆட்சிக்கு வந்ததும் இதற்க்கு முற்றுப்புள்ளி வைத்து கோடானுகோடி மக்களின் இதயத்தில் இடம் பெற்றுவிட்டார்

      Delete
  2. அந்த இனிமையை யாராலும் மறக்க முடியாது ஐயா...

    ReplyDelete
    Replies
    1. அதனால்தான் இந்த பதிவு.DD

      Delete