Friday, January 11, 2019

எதற்காக பிறக்கிறோம்?

எதற்காக பிறக்கிறோம்?

இந்த உலகில் பிறக்கிறோம்.?

இந்த கேள்வியை ஒவ்வொருவரும்
தனக்குள் கேட்டுக்கொள்ள வேண்டும். 

ஆனால் யாரும் அதைசெய்வதில்லை.

மாறாக எல்லோரையும் நாம்தான்  கேள்விகளைக் கேட்டு
பதில்களை வாங்கி நம் மண்டையில் திணித்துக் கொள்கிறோம்.

எதற்காக?

பிறர் யாராவது நம்மை அந்த கேள்வியைக் கேட்டால்
அவர்களுக்கு பதில் சொல்வதற்காக.

மனிதர்களைத் தவிர புத்தகங்களிலிருந்து வேறு
நம் கேள்விகளுக்கு பல விளக்கங்களை பெற்றுக்கொள்கிறோம்.

ஒவ்வொரு விளக்கமும் அவரவர்
பார்வையைப் பொறுத்து வேறுபடுகிறது.

இதனால் குழப்பம் ஏற்படுகிறது.

அதற்கு பிறகுதான் நாம் சுயமாக சிந்திக்க தொடங்குகிறோம்.
நாம் கேட்ட விளக்கங்களில் எது உண்மையானது என்பதை
முயற்சி செய்கிறோம்.

அதை செயலில் கொண்டு வரும்போதுதான்
அனுபவம் பெறுகின்றோம்.

இது இருக்கட்டும்
.
நாம் ஏன்  பிறக்கிறோம் என்றால்.நம் மனதில் உள்ள
நிறைவேறாத ஆசைகளை நிறைவேற்றிகொள்வதற்கு

நாம் நினைப்பதை செயல்படுத்தி இன்பம் அடைவதற்கு.

இன்பத்தை தேடும் முயற்சியில் இடைஇடையே
துன்பம் வந்தால் அதை அனுபவிப்பதற்கு.

ஆனால் அதை மட்டும் நாம் செய்வதில்லை.
நம் ஆசைகளை செயல்படுத்தினால்
மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்று பயந்து
மனதிற்குள்ளே மூடி வைத்து மன  நோய்க்கு ஆளாகி
பெரும்பாலானோர் வீணே மடிகின்றனர்.

ஒன்று ஆசைப்படாமல் இருக்க வேண்டும்.
அப்படி ஆசைப்பட்டுவிட்டால் அதை எப்படியாவது நிறைவேற்றிவிடவேண்டும்.

இப்படி செய்பவன்தான்
உலகில் மகிழ்ச்சியாக வாழ்கிறான்.

நம்முடைய ஆசைகள் பிறருக்கு துன்பம் வரவழைக்கும் எனில்
அதை முளையிலேயே கிள்ளிவிடவேண்டும்.

நாம் உயர்ந்த நிலைக்கு வருவதற்கு ஆசைப்படுவதில் தவறில்லை.
ஆனால் அதற்காக முயற்சிகள் மேற்கொள்ளாமல் பொறாமைக் குணத்தை மட்டும் வளர்த்துக்கொண்டால் தோல்வியும் அவமானமே  மிஞ்சும்.

ஆசைகள் இருக்கும்வரை பிறவிகள் தொடரும்.

பிறவிகள் என்றால் இன்பமும் துன்பம்
இருந்துகொண்டுதான் இருக்கும்.

இனி பிறவி வேண்டாம் என்றால்
எல்லா ஆசைகளையும் விட்டுவிடுங்கள்

வாழ்க்கையை அதன் போக்கில் அனுபவியுங்கள். 

No comments:

Post a Comment