Monday, February 18, 2013

என்னே இறைவன் கருணை!


என்னே இறைவன் கருணை!

எல்லோரும் இறைவனை அடைய
குரு அவசியம் என்று உரைக்கின்றார்கள்.

குருவருளின்றி திருவருள் இல்லை
என்றும் சொல்கின்றார்கள்.

குருவே சகல உலகமும்
என்றும் சொல்கிறார்கள்

குருவும் இறைவனும் ஒன்று என்று
மேலும் வலியுறுத்துகிறார்கள்.

ஏனென்றால் குருதான் அஞ்ஞானமாகிய
இருளை போக்குபவர் என்று சொல்லப்படுகிறது.

தத்தாத்ரேயர் போன்ற அவதார புருஷர்கள்
இந்த உலகமே தனக்கு குரு என்றும்
அவருக்கு 24 குரு இருந்ததாக கூறியுள்ளார்.

சிலர் இறைவன்தான் குரு என்கிறார்கள்
.
அருணகிரிநாதர் முருகனையே
குருவாய் வருள்வாய் அருள்வாய்
என்று வேண்டுகிறார்.

இறைவனை பக்தியினால்
தரிசிக்கலாம் மிக சுலபம்

ஆனால் ஆன்ம ஞானம்
அடைவது மிக கடினம்

ஆன்ம ஞானம் அடைய செல்லும் வழி
பல தடைகள் நிறைந்தது.

அகந்தை நிறைந்த மனத்தால்
அதை அடைய இயலாது.

அகந்தை அழிந்து அவன் பாதங்களில்
தான் என்ற செருக்கின்றி
 தனது என்ற எண்ணமின்றி
சரணடைந்தால்தால்
வெற்றி கிடைக்கும்

அகந்தையின் வெளிப்பாடுகள்
 எண்ணிலடங்கா

அது பாமரனுக்கோ அல்லது
படித்தவனுக்கோ புரியாது

பாமரனுக்கோ அது
என்னவென்று புரியாது

படித்தவனுக்கோ அது என்னவென்று தெரிந்தும்
அவன் அறிவு அதை விட இடம் கொடாது

சத்தான உண்மைப்பொருளை அறிந்த
சத் குருவிற்க்கே அது சாத்தியம்.

அதனால்தான் தெய்வங்களும்
இவ்வுலகில் அவதாரம் செய்யும்போது
சற்குருவை நாடுகின்றன .


ஞானம் என்றால் என்ன ?

ரூப,நாம பேதங்கள் அனைத்தும் நீங்கி
ஆன்மாவை தவிர தவிர எதுவும் இல்லை
என்று அறிந்துகொள்வதே ஞானம்

அஞ்ஞானம் என்றால் என்ன?

இந்த உண்மையை அறியாது புலனின்பத்தில்
மூழ்கி தொடர்ந்து இன்பத்திலும் துன்பத்திலும்,
 பிறவிகள்தோறும் உழன்றுகொண்டிருப்பது அஞ்ஞானம்

இரண்டையும் விளக்க ஏராளமான சாத்திரங்கள்
தோத்திரங்கள், கணக்கற்ற மகான்களின்
உபதேசங்கள் உண்டு இவ்வுலகில்

போதாக்குறைக்கு இறைவனே
பலமுறை தானே நேரில் அவதரித்து
விளக்கியுள்ளது போதாது என்று
அவன் வாய்மொழிக்கு பல விளக்க மொழிகள்
அவரவர் மனம் மற்றும் அறிவால்
விளங்கிகொண்டமைக்கு
தக்கவாறு எண்ணிலடங்கா நூல்கள்.

சிலர் பக்தி செய் என்கிறார்கள்

சிலர் கடமைகளை செய் என்கிறார்கள்

சிலர் பாடு என்கிறார்கள்.

சிலர் ஆடுகிறார்கள்

சிலர் தன்னை இறைவன்
அருள் வேண்டி வருத்தி கொள்கிறார்கள்

சிலர் சடங்குகளுக்கு
முக்கியத்துவம் அளிக்கிறார்கள்

சிலர் சடங்குகள் பலன்களை எதிர்பார்த்து
செய்யப்படுபவை அதனால்
ஆன்ம ஞானம் ஏற்படாது என்கிறார்கள்.

சிலர் எல்லாவற்றையும் துறந்து
கானகம் சென்று பானகம் மட்டும் அருந்தி
வானகத்தில் இருக்கும் கடவுளை
நோக்கி தவமியற்றுகிரார்கள்.

அவர்கள் புரிந்துகொண்டதை
உலகிற்கு பறை சாற்றுகிறார்கள்.

அவர்களை சுற்றி ஒரு சீடர் கூட்டம்.
இறைவனை மறந்து அந்த மனிதரை
கடவுளாக்கிவிடுகிறது அஞ்ஞான  கூட்டம்.

உண்மையில் ஞானம் என்றால் என்ன?

அதை எப்படி அடைவது?

அதை அடைவதால் என்ன பயன்?

அடையாவிட்டால் என்ன விளைவுகள்?

எல்லாவற்றிற்கும் ஏற்கெனவே
விடைகள் பெறப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது

இருந்தும் மனிதர்கள் அதில் கண்டுள்ள
எந்த வழிகளையும் அயர்ச்சியின்றி,
தளர்ச்சியின்றி முயற்சி செய்யாமல்
குறுக்கு வழியில் அடைந்திட முயல்கிறார்கள்

அது நடக்குமா?

நிச்சயம் முடியாது.

ஞானத்தை அடைய
குறுக்கு வழி கிடையாது.

இரண்டே வழிகள்தான் உண்டு

ஒன்று அனைத்தும்
அவன் செயல் என்று சும்மா இருப்பது.

அது முடியாத செயல்.
ஏனென்றால் ஓய்வின்றி எப்போதும்
இயங்கிகொண்டிருக்கும்
இந்த உலகில் சும்மா இருப்பது
மிக கடினமான செயல்.

அதற்க்கு மிகவும் பாடுபடவேண்டும்.
ஆம் சும்மா இருப்பதற்கு பாடுபடவேண்டும்
அதுதான் இறைவனின் லீலை

கடினமான சோதனைகளை
ஏற்றுக்கொள்ளா தயாராக வேண்டும்.

அதற்க்கு யாரும் தயாராக இல்லை
இறைவனை தேடி செல்லும்யாத்திரைகளில்  கூட
சகல சொகுசு வசதிகளுடன்
யாத்திரைமேற்க்கொள்ளுகிரார்கள்.

எல்லாவற்றையும் தன் படைப்புக்களுக்காக
தியாகம் செய்துவிட்ட இறைவனுக்காக
யாரும் எந்த சுகத்தையும்
தியாகம் செய்ய தயாரில்லை.
கேட்டால் இறைவன் கொடுத்திருக்கிறான்
அனுபவிக்கிறேன் என்கிறார்கள்.

தன் படைப்புக்களை காப்பாற்ற
ஆலகால நஞ்சையே தான் உட்கொண்டு
தன் நெஞ்சில்  நிறுத்தி வைத்த ஈசனை காண
எந்த வசதிகளையும் தியாகம்
செய்ய தயாரில்லை இக்கால பக்தர்கள்.

எனவே எண்ணிலடங்கா வழிமுறைகளில்
ஏதாவதொன்றை பற்றிக்கொண்டு
இறுதி வரை அதில் நிலைத்து நின்று
நிலையில்லா வாழ்க்கை நடுவில்
நிலையான ஆன்ம ஞானத்தை
அடைய பாடுபடவேண்டும்.

தன் படைப்புகள் தன்னை நாடி வர
தானே கோயில் கொண்டு சிலையாய்
நின்று அருளுகிறான் ஈசன்.


.

பகவான் ராம கிருஷ்ண பரம ஹம்சர்
உபதேசித்தது போல்ஒரே இடத்தில
கிணறு வெட்டுபவன்தான் நீரை பெறுவான்.

சிறிது தோண்டியதும் அந்த இடத்தை
விட்டுவிட்டு பல குழிகளை தோண்டுபவன்
சம்சார குழியிலிருந்து எழ இயலாமல்
அவன் வெட்டிய குழியில்
ஒரு  நாள் விழுந்து மடிவான்.

10 comments:

  1. SridaranRanganaathan

    Only one method is given, what is the other method, see para 10 counting from end.

    Being idle though difficult, can not be the route for Kjnanam, because trees are all idle, but they can not reach salvation.

    Therefore, thinking of God by chanting his nama is the best way as on date as mentioned by you already.

    However, Rama Name itself can be taken as both "Guru & Mantra"

    ReplyDelete
    Replies
    1. Pattabi Raman
      12:28 PM (2 hours ago)

      to Sridharan
      the name of the tree itself is GOD

      sage valmeegi has chanted the name of the tree-mara-
      continuous chanting of mara has become ramaa .

      eventhough the chanting of RAMA nama
      is simple nobody take it seriously

      They have no faith, perseverance,vairaagyaa ,
      energy ,effort to grt out of this vicious circle of births and deaths.

      who says trees are idle.standing there from the beginning to end they produce everything and gave away everything to the world. including themselves.
      Lord Krishna has said in the geethai that in respect pf trees is Arasamaram
      every temple has a sthala vrisham. which is worshipped as GOD.

      They are the real yogis. Pl. dont understimate them.

      only the humans are the selfish rogues
      who take away everything for themselves.
      including the life of the fellow beings.

      Delete

    2. From Sridaran ranganathan
      Gr8 explanation.

      Trees are idle - meaning not indulging in Sin, you mean to say that all trees will attain salvation. My contention is that being idle can not lead to salvation. Trees are cited only as an example, you can even take fish in the sea, they do nothing & are idle w.r.t God Realisation, all can not attain salvation. Doing nothing or being idle means w.r.t God REalisation & not material existence. Exception will always be there like Machamuni ( born out of fish ) who created Sri Gorrakka Sithar. Lord Vishnu had taken the Avarthar of a "Pig", for that we can not pray all Pigs or render Pooja to all Pigs ( said Kanchi Sri Paramacharia ). Chanting of Rama nama or doing something out of NAvavitha Bakthi is essential, unless you surrender through an Acharya ( Paranyasam ).

      Out of say 500 trees in a forest each tree will not even know the existence of another tree because of possessing only single sense.

      FYI - It is said by many elders that those who die in sleeping will take the birth of a Tree. Lord Kubera's Sons became tree on the curse of Sage Naradha because they stood like a Tree without doing Pranams to Bagawathas.

      I too respect Trees Like Neem Tree ( birth place of Sri Shirdi Baba), Arashamaram, Sthala Virusham etc.,. It is cited only for example.

      By the bye - Second method referred by you in the write up is missing, will it continue ?

      Delete
  2. Pattabi Raman
    2:41 PM (19 minutes ago)

    to Sridharan
    Trees are idle - meaning not indulging in Sin, you mean to say that all trees will attain salvation. My contention is that being idle can not lead to salvation. Trees are cited only as an example, you can even take fish in the sea, they do nothing & are idle w.r.t God Realisation, all can not attain salvation. Doing nothing or being idle means w.r.t God REalisation & not material existence. Exception will always be there like Machamuni ( born out of fish ) who created Sri Gorrakka Sithar. Lord Vishnu had taken the Avarthar of a "Pig", for that we can not pray all Pigs or render Pooja to all Pigs ( said Kanchi Sri Paramacharia ). Chanting of Rama nama or doing something out of NAvavitha Bakthi is essential, unless you surrender through an Acharya ( Paranyasam ).

    மரங்களுக்கும் ஆன்மா உண்டு.மண்ணுக்கும் உண்டு விண்ணுக்கும் உண்டு. புல்லுக்கும் உண்டு ,விலங்குகளுக்கும் ஆன்மா உண்டு என்பதை புராணங்களிலிருந்து நாம் அறிந்துகொள்ளலாம்

    உரலில் கட்டப்பட்ட கண்ணன் இருமரங்களுக்கு இடையே செல்லும்போது மரம் முறிந்து மரமாய் நின்றஇருவர் மர உரு நீங்கி நல்ல கதி அடைந்தனர் என்பதுசரித்திரம்.

    மரங்கள் எப்படியாவது போகட்டும்

    மரத்திற்கு இருக்கும் பல நல்ல பண்புகள் மனிதர்களுக்கு கிடையாது. ஒரு மரம் நச்சுக்காற்றை உட்கொண்டு நாம் வாழ பிராண வாயுவை தருகிறது. பறவைகள், உட்பட பல ஆயிரக்கணக்கான் உயிரினங்கள் தங்க இடம் அளிக்கிறது.செடி கொடிகள் அதன் மீது படர அனுமதிக்கிறது. மழையை ஈர்த்து பசுமையை தருகிறது. இப்படியாக சொல்லிக்கொண்டே போகலாம்.

    நீங்கள் ஓரரிவுடையவை என்று அவைகளை மட்டமாக பேச ஆறறிவு இருப்பதாக பீற்றிகொள்ளும் மனித இனத்திற்கு எந்த அருகதையும் கிடையாது.

    இவ்வளவு நல்ல குணங்கள்இருந்தும்
    ஏன் அவைகள் இப்படி இருக்கின்றன
    என்று சிந்திக்க வேண்டும்

    நாம் மனிதர்களாக பிறந்தும்
    எந்த நல்ல குணங்களும் இல்லாது
    பிறரை இழித்தும் பழித்தும்,
    அன்பில்லாமல் இறைவனிடம்
    பக்தியில்லாமல் வாழ்க்கையை
    கழித்து கொண்டிருக்கிறோமே
    இதற்கு நமக்கு எத்தகைய தண்டனை
    காத்திருக்கிறது என்பதை உணர வேண்டும்.

    உணர்ந்தால் எதையும்
    யாரையும் குறை கூற மாட்டோம்.

    குறை ஒன்றுமில்லாத கோவிந்தனை
    போற்றுவதை தவிர வேறெதுவும் செய்யமாட்டோம்.

    அவரவர்களின் கர்மத்திர்க்கும்
    பாவ புண்ணியங்களுக்கு தகுந்தாற்போல் பிறவி கிடைக்கிறது.

    கிடைத்த பிறவியை நல்ல முறையில்
    பயன்படுத்தி பக்தி செய்வதில் கவனம் செலுத்த வேண்டுமே ஒழிய
    சாத்திர ஆராய்ச்சிகளில் ஈடுபாடுகொண்டிருந்தால்.
    காலம் போய்விடும்.

    ஏதாவது ஒன்றில் நம்பிக்கை வேண்டும்
    அவ்வளவுதான்.

    அது இல்லாவிடில்மனித பிறப்பு வீண்.

    இந்த உலகம் அனைத்துவிதமான நம்பிக்கைகளுக்கும்
    இடம் அளித்துள்ளது.
    அவரவர் அவரவர் வழியில் செல்லட்டும்

    ஒரு கால கட்டத்தில் எது உண்மை வழி
    என்பதை அவரர்களே புரிந்துகொள்வார்கள்.

    எது எப்படி இருந்தாலும் நாம் தேர்ந்தெடுக்கும் வழியில்
    முழு நம்பிக்கை வைத்து அதில் தொடர்ந்து
    சாதனை செய்ய வேண்டும்.

    பிறர்மீது எதையும் திணிக்க முடியாது.
    நாம் தேர்ந்தெடுத்த வழியில் நாம் வெற்றி
    அடைந்தோமானால் நம்மை பார்த்து பலர் பின் பற்றுவார்கள்.

    மரங்கள் கூட்டமாக இருந்தாலும்
    மனிதர்களைப்போல் ஒன்றுக்கொன்று அடித்துகொள் வதில்லை

    நல்லவைகளை கற்றுகொள்ளதான்
    இவ்வுலகில் பிறக்கிறோம்

    பாவங்களின் பலன்களை நோயாகவும்,
    துயரங்களாகவும் இழப்புகளாகவும்
    அனுபவித்து தீர்க்கிறோம்.

    அதன் நடுவிலே அனைத்து துன்பங்களிலிருந்தும் விடுபட பகவானை நாடுகிறோம். முயற்சி செய்பவனுக்கு பகவான் வழிகாட்டுகிறான்.

    ReplyDelete
  3. Gopalakrishnan Vai.
    10:36 AM (4 hours ago)

    to me
    //சிறிது தோண்டியதும் அந்த இடத்தை
    விட்டுவிட்டு பல குழிகளை தோண்டுபவன்
    சம்சார குழியிலிருந்து எழ இயலாமல்
    அவன் வெட்டிய குழியில்
    ஒரு நாள் விழுந்து மடிவான். //

    ;))))

    மிகவும் அழகாகச் சொல்லியுள்ளீர்கள். ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்ஸர் சொல்லியதா இது! ஸந்தோஷம். எனக்குச் சொன்னவர் ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் அவர்கள்.

    ஸ்ரீ ஆதி ச்ங்கரர் சொல்வது போல சில விஷயங்களை நான் அழகாக என் நாடகம் ஒன்றில் எடுத்துச்சொல்லியுள்ளேன்.

    http://gopu1949.blogspot.in/2012/04/17.html

    பகிர்வுக்கு நன்றிகள், சார்.

    அன்புடன்
    VGK

    ReplyDelete
    Replies
    1. Pattabi Raman
      12:32 PM (2 hours ago)

      to Gopalakrishnan
      வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி
      சொல்வதற்கு என்னைப்போல்
      பலபேர்கள் கிளம்பிவிட்டார்கள் ஆனால் .
      சொன்னதை வாழ்வில் கடைபிடித்தவர்கள்
      மகான்கள்.மட்டும்தான்

      Delete
  4. Gopalakrishnan Vai.
    1:29 PM (1 hour ago)

    to me
    ;))))) ஆஹா, அழகாகச் சொல்லிவிட்டீர்கள். எதுவும் படிக்கவும் எழுதவும் ருசியாகத்தான் உள்ளன. கடைபிடிப்பது நடைமுறையில் சாத்யமில்லாமல் கசப்பாகத்தான் உள்ளது, சார். எல்லோருமே மஹான்கள் ஆகிவிட்டால் அப்புறம் மஹான்களுக்கும் மதிப்பு இருக்காதோ என்னவோ, அதனால் தான் நம்மை கடைபிடிக்கவிடாமல், கலியுகம் தடுக்கிறதோ? அன்புடன் VGK

    ReplyDelete
  5. Pattabi Raman
    2:02 PM (1 hour ago)

    to Gopalakrishnan
    நமக்கு எதிரிகள் வெளியில் இல்லை

    நமக்குள்ளேதான் இருக்கிறார்கள்.

    அது தெரியாமல் நாம் செய்யும் தவறுகளுக்கும்
    இயலாமைக்கும் பிறர் மீது குற்றம் சுமத்தி கொண்டிருக்கிறோம்.

    கலியுகம் என்பது களிக்கும் யுகம்.

    இந்த யுகத்தில்தான் கணக்கற்ற மகான்கள்
    அவதரித்து நம்மை நல்வழி காட்ட வந்துள்ளார்கள்
    இன்னும் வழி காட்டிகொண்டிருக்கிரார்கள்.
    இன்னும் பலர் இருக்கிறார்கள்.

    இந்த யுகத்தில்தான் அதிக அளவில் வழிபாடுகள்,
    ஆன்மீக சிந்தனைகள், கடந்துபோன யுகங்களை
    விட. உள்ளது.

    அவரவர்கள் அவரவர்களுக்கு பிடித்த
    வாழ்க்கை முறையை கையாண்டு இறைவனை
    அடைய கலியுகத்தைபோல் சௌகர்யம்.
    முந்தய யுகங்களில் கிடையாது

    சாத்திரங்களை விளக்க ஏராளமான
    விற்ப்பன்னர்கள்(சாத்திரங்களை விற்பவர்கள்-வேத வித்து-வேதத்தை விற்பவர்கள் )இவ்வுலகில்)இன்று உண்டு.

    இந்த சௌகர்யம் பிற யுகங்களில் கிடையாது.

    ஹிரநியனைபோல் பல அசுரர்கள்
    இந்த உலகில் இன்று இருப்பினும்
    பிரகலாதனைபோல் நாம் துன்பப்படவில்லை.

    நல்ல வழியை தேர்ந்தெடுத்து
    நல்ல கதி அடைவது நம் கையில்தான் உள்ளது.

    நமக்குள் இருக்கும், பகைவர்களான
    காமம், சினம் , கர்வம், கருமித்தனம்,
    இச்சைகள்,பொறாமை, சோம்பேறித்தனம்,
    அவ நம்பிக்கை மன உறுதியற்ற தன்மை,
    முயற்சியின்மை ஆகிய பகைவர்களை
    இனம் கண்டு ஒழித்துவிட்டு உறுதியுடன்
    ஒரு நல்ல வழியை தேர்ந்தெடுத்து
    அதை கடைபிடித்தால்
    மீண்டும் பிறவாமல் தப்பிக்கலாம்.
    பிறந்தாலும் இறையுணர்வுடன்
    இன்ப வாழ்க்கை வாழலாம்.
    TRPattabiraman

    ReplyDelete
  6. Gopalakrishnan Vai.
    2:39 PM (25 minutes ago)

    to me
    ஆமாம் சார், இதையும் அந்த ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் அவர்கள் எனக்குச்சொல்லியுள்ளார்கள். மிகச்சுலபமாக இறைவனை அடைய கலியுகத்தில் தான் வழியுண்டு என்றார்கள். ராம ராம சிவ சிவ என்ற சுலபமான மந்திரங்கள் போதும். எப்போது இதை உச்சரித்து வந்தால் போதும்.

    தினமும் ஸ்நானம், பஞ்சக்கச்சம், நெற்றிக்கு இட்டுக்கொள்ளுதல், த்ரிகால சந்தியாவந்தனம், ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ர நாமம், ஸ்ரீ ஆதித்ய ஹிருதயம் இவை போதும் என்று எனக்கு உபதேசித்துள்ளார்கள்.

    இவற்றில் எல்லாமே அடக்கம் என்றும் சொல்லி அருளியுள்ளார்கள்

    ReplyDelete
  7. Pattabi Raman
    2:55 PM (10 minutes ago)

    to Gopalakrishnan
    ராம ராம என்று
    சொன்னால் மட்டும் போதுமா?

    ராமன் என்ன செய்தான் ?

    தர்மத்தை கடைபிடித்தான்
    மோகத்தை துறந்தான்
    அண்டியவர்களுக்கு ஆதரவு கட்டினான்
    அனைவரிடமும் அன்பு காட்டினான்
    தாய் தந்தையர்களின் அறிவுரையை மதித்து நடந்தான்.
    மனித குலத்திற்கு துன்பம் தந்த அரக்கர்களை அழித்தான்

    பக்தனான் ஹனுமானுக்கு தன் சக்திகளைஎல்லாம் அளித்து அவனை கௌரவித்தான்

    சுயநலமில்லாமல் வாழ்ந்து காட்டினான்

    ராம நாமம் சபிப்பவர்கள் இந்த சிந்தனைகளை மனதில் கொண்டு நம்பிக்கையுடன் ஜபித்தால் அவர்களும் சமர்த்த ராமதாஸ் ஆகலாம். தியாகராஜ சுவாமி ஆகலாம், பத்ராசல ராமதாஸ் ஆகலாம், பாப்பா ராம தாஸ் ஆகலாம் ஏன் சமீப காலத்தில் நம்மிடையே வந்துதித்த திருவண்ணாமலை GODCHILD யோகி ராம் சூரத் குமார் கூட ஆகலாம்.

    மோர் சாதத்திற்கு ஊறுகாய் தொட்டுக்கொள்வதுபோல் ராம நாமத்தை தொட்டுகொண்டிருந்தால் பல கோடி பிறவிகளை கடக்க வேண்டி இருக்கும்.

    அதுபோல்தான் சிவா சிவா என்று சொல்வதும்

    அன்பே சிவம் அன்பில்லாமல்
    சிவ மந்திரத்தை எந்திரம்போல் ஜபிப்பதால் என்ன பயன்?
    பக்தி வேண்டும் பாவம் வேண்டும்.
    எந்த சக்தியாலும் அசைக்கமுடியாத
    நம்பிக்கைவேண்டும். விடாமுயற்சி வேண்டும்.

    இதெல்லாம் இருந்தால் எல்லாம் சித்தியாகும்

    முயற்சி செய்யுங்கள்

    விரைவில் உங்களை தரிசிக்க வருகிறேன்.

    ReplyDelete