Sunday, March 3, 2013

எய்தவன் இருக்க அம்பை நோவதேன்(பகுதி-2)


எய்தவன்   இருக்க
அம்பை நோவதேன்(பகுதி-2)






குழந்தையை இழந்த பெற்றோர்
அந்நாட்டு அரசனிடம் சென்று
நடந்த சம்பவத்தை விவரித்தனர்.

தங்கள் குழந்தையை
யார் கொன்றது ?

அவர்களை தேடி கண்டுபிடித்து
தண்டனை வழங்க வேண்டும்
என்று கேட்டுக்கொண்டனர்

அரசனும் அவர்களுக்கு
ஆறுதல் கூறி தான் நடவடிக்கை
எடுப்பதாக தெரிவித்து
அவர்களை அனுப்பி வைத்தான்

அரசனுக்கு தன்  நாட்டில்
இதுபோன்ற ஒரு அநியாயம்
நிகழ்ந்துவிட்டதே என்று
மிகவும் மனம் வருந்தினான்

ஒரு பச்சிளம் பாலகனை
இப்படி இரக்கமில்லாமல்
கொல்வார்களா என்றும்
அதிசயப்பட்டான்.

நம் நாட்டிலும் இது போன்ற
இரக்கமற்ற மனித மிருகங்கள்
இருக்கிறதே என்றும்
அங்கலாய்த்தான்.

அவனுக்கு உறக்கம்
வரவில்லை.

ஆம் அன்றைய அரசர்கள்
மக்களின் நலனில்
அவ்வளவு அக்கறை கொண்டவர்களாக
ஒரு காலத்தில் விளங்கினர்.

அவர்களுக்கு ஏற்ப்படும் துன்பம்
தங்களுடைய துன்பமாக கருதி
அதை போக்க முனைந்தனர்

அதனால் மக்களும்
அரசனை தங்களை காக்கும்
தெய்வமாகவே கருதினார்கள்.

அரசன் தர்ம வழியில்
ஆட்சி செய்தமையால்
தெய்வமும் அரசனுக்கு துணையாய் இருந்து
அவன் நல்லாட்சி பெற உதவி வந்தது.

எனவே இந்த பிரச்சினைக்கு
தீர்வு காண இறைவனிடமே
செல்லுவோம்
என்று நினைத்து
கோயிலுக்கு சென்று
இறைவா ,என் நாட்டில்
ஒரு குடிமகனுக்கு இது போன்ற
துன்பம் நிகழலாமா என்று
மனமுருக வேண்டி நின்றான்

அப்போது இறைவன்
உன் கேள்விக்கு
பதில் சொல்கிறேன்

நாளை நம் நகரில்
ஒரு வீட்டில் நடக்கும்
திருமண வைபவத்தில்
சந்திப்போம்

அங்கு உன் கேள்விக்கு
விடைகிடைக்கும். என்றார்.

அரசன்
அரண்மனைக்கு சென்றான்.

படுக்கையில் படுத்தாலும்
உறக்கம் வரவில்லை.

நாளை காலை பொழுது
எப்போது விடியும் என்று
காத்திருந்தான்

நாமும் காத்திருப்போம்.

1 comment: