Saturday, March 2, 2013

எய்தவன் இருக்க அம்பை நோவதேன்?


எய்தவன்   இருக்க 
அம்பை நோவதேன்?


















என் சிறு வயதில்
ஒரு கதை படித்தேன்
ஒரு தம்பதி தன் குழந்தையுடன்
காட்டின் வழியே
பயணம் செய்துகொண்டிருகிறார்கள்

பகற்பொழுதாக இருந்தமையால்
குழந்தையை ஓர் மரத்தின் நிழலில்
கிடத்திவிட்டு குடிப்பதற்கு நீர்
கிடைக்கிறதா என்று பார்க்க
சென்றனர் தம்பதிகள்.

சிறிது நேரம் கழித்து அவர்கள் திரும்பி
வந்து குழந்தையிடம் சென்றார்கள்

அருகில் சென்று பார்த்தால்
குழந்தையின் மார்பில் அம்பு பாய்ந்து
இறந்துகிடந்ததை கண்டனர் பெற்றோர்.


சுற்று முற்றும் பார்த்தார்கள் .
அங்கு வேடனோ அல்லது
வேறு யாராவது
அந்த குழந்தையை
கொன்று விட்டிருப்பார்களோ
என்று தேடினால் யாரும் இல்லை



எப்படி குழந்தை இறந்தது?
அலறி துடித்தார்கள் பெற்றோர்.

கானகத்திற்கு அவர்களோடு
வந்த குழந்தையை
வானகத்திற்கு அனுப்பிய
அந்த பாதகன் யார் என்று
அறிய இயலாமல்
மனம் வெதும்பி
துன்பத்தில் மூழ்கினர்.

ஆண்டாண்டு அழுது புரண்டாலும்
 மாண்டார் வருவரோ என்றெண்ணி
மனதை தேற்றிக்கொண்டு
குழந்தையின் உடலை பூமி தாயிடம்
அடைக்கலமாக அடக்கம் செய்துவிட்டு
அங்கிருந்து புறப்பட்டனர்.

இக்காலத்தில் உள்ளதுபோல்
அந்த காலத்தில் அரசியல் கட்சிகள் இல்லை
 பிணத்தை வைத்துக்கொண்டு அரசியல் பண்ண .

மனிதனாக பிறப்பெடுத்தவர்கள்
ஒரு நாள் மரணத்தை தழுவுவது
தவிர்க்க முடியாத ஒன்று என்றும்
அதை நாம் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும்
என்றும் அந்நாளைய பாமர மனிதர்களும்
நன்கு அறிந்து வைத்திருந்தனர்.

ஆனால் குழந்தையை மிருகங்கள்
கொல்லவில்லை.
ஏனென்றால் அதன் மார்பில்
அம்பு பாய்ந்து அதன் உயிர்
போய் இறந்துவிட்டிருந்தது .

அம்பை விட்டவர்களும்
அருகில் இல்லை.
அப்படியானால் அந்த குழந்தையின் மீது
அம்பை விட்டவர்கள யார்?

இந்த கேள்விக்கு நமக்கு
பதில் தெரிந்தாக
வேண்டுமில்லையா?

பொறுத்திருங்கள்.

2 comments:

  1. இருந்தாலும் கஷ்டமாக தான் இருக்கு...

    ReplyDelete
    Replies
    1. கஷ்டமாகத்தான்
      இருக்கு..

      இருந்தாலும்
      கஷ்டத்திலிருந்து
      வெளியே
      வரவேண்டாமோ?

      இந்த பார் அதிர தமிழின் பெருமையை
      கொண்டு சென்ற பாரதியின்
      வரிகளை நினைவில் கொள்ளுவீர்

      துன்பகடலிலிருந்து
      வெளியேறுவீர்

      என்ன வரிகள்
      தெரியுமா?

      சென்றதினி மீளாது மூடரே
      நீவிர் எப்போதும் சென்றதையே
      நினைந்து
      நினைந்து கொன்றழிக்கும்
      கவலையில் வீழ்ந்து குமையாதீர்

      சென்றதை குறித்து
      வருந்துதல் வேண்டா

      இன்று புதிதாய் பிறந்தோம்
      என்ற எண்ணமதை
      சிந்தையில் கொண்டு
      தின்று விளையாடி
      இன்புற்று வாழ்வீர்

      தீமைகள் ஒழிந்து போம்
      திரும்பி வாரா
      என்ற வரிகளை 108
      தடவை துன்புற்றவர்கள்
      படித்தால் அவர்கள் துன்பம் தீரும்

      ஆனால் அதை கேட்பவர்கள்தான்
      இந்த உலகத்தில் யாரும் இல்லை

      போதாக்குறைக்கு
      தலைவலியும் திருகுவலியும்
      தனக்கு வந்தாதான் தெரியும்
      உனக்கு வந்தா தான் தெரியும்
      பெரிசா பேச வந்துட்டான்
      போய்யா என்ற ஏச்சும் பேசும்
      வேறு கேட்க தயாராக இருந்தால்
      வாயை திறக்கலாம்

      இல்லாவிடில் ஐயோ பாவம்
      இவருக்கு இந்த கஷ்டம் வந்துவிட்டதே

      அல்லது கடவுள் ஏன்தான்
      உங்களை இப்படி சோதிக்கிறாரோ
      என்று அவன் மேல் பழியை
      போட்டுவிட்டு அங்கிருந்து
      துணியை காணோம்
      துண்டை காணோம்
      என்று ஓடிவிடிட்டால்
      அடிபடாமல் தப்பிக்கலாம்

      இந்த பேச்சை கேட்காதவர்கள்
      அவர்களையும் அவர்கள் குடும்பத்தையும் அழித்துக்கொள்ளுகிரார்கள்

      என்ன செய்ய?

      உலகம் இவ்வளவுதான்
      நாமும் உலகத்தோடு
      ஓட்ட ஒழுக வேண்டும்
      இல்லையேல் உதைபடுவோம்
      ஓரங்கட்டப்படுவோம்.


      Delete