Monday, February 10, 2014

சொன்னதை செய்பவன் யார்?(பகுதி-3)


சொன்னதை செய்பவன் யார்?(பகுதி-3)



சொன்னதை செய்பவனும் 
சொன்னதை செய்தவனும் 
அவன் ஒருவனே 

கதைகளைக் கேட்பதற்கு
பொதுவாக அனைவருக்கும் பிடிக்கும்.

கதைகள் என்றாலே 
அது கடந்தகால சம்பவங்களின் தொகுப்பு.

சிலருக்கு கதை சொல்வது பிடிக்கும் .
அதை சுவைபட ,முகபாவங்களோடு  
நடித்து காட்டுபவர்களை அனைவருக்கும் பிடிக்கும். 

சிலருக்கு கதை சொல்வதை விட
கதை விடுவது பிடிக்கும்.

எப்படி  இருந்தாலும் கதைகள் 
பல உண்மைகளை வெளிப்படுத்துகின்றன. 

பலர் கதையைக் கேட்டுவிட்டுப் போய்விடுகின்றனர். 
அந்தக் கதையின் மைய்யக் கருத்தை 
யாரும் புரிந்து கொள்வதில் 
அக்கறை காட்டுவதில்லை.

ஏதோ நேரத்தை கடத்துவதற்கு 
ஒரு கருவியாக அதை நினைக்கின்றனர். 

உதாரணத்திற்கு எடுத்துகொண்டால்
உண்மை பேசுவதையே உயிர் மூச்சாகக் கொண்ட 
ராஜா ஹரிச்சந்திரனின் கதை 
ஒரு மகாத்மா காந்தியை உருவாக்கியது. 

பல லட்சம் பேர்கள் இந்த கதையை 
பல்லாயிரம் ஆண்டுகளாகக் கேட்டும் 
அந்த கதையில் உயிர் நாடியை உணர்ந்து கொள்ள வில்லை.
ஹரிச்சந்திரனைப் போல் 
துன்பப்படத் தயாராகவும் இல்லை. 

அதெல்லாம் நமக்கு சரிப்பட்டு வராதப்பா 
என்று அலறி ஓடியவர்கள்தான் அனைவரும். 

தாயுமானவரின் தேவாரத்தை 
பாராயணம் செய்பவர்கள் ஏராளம்.
அதற்க்கு விளக்க வுரை எழுதுவதும், 
விரிவுரை செய்பவர்களும் ஏராளம்.
ஆனால் அவர் கூறியதை வாழ்வில் 
நடைமுறைப்படுத்துவதற்கு யாரும் தயாராக இல்லை.

கோடிக்கணக்கான மனிதர்களில் 
ஏதோ ஓரிருவர் அவரின் அறிவுரைகளைப் 



புரிந்துகொண்டு முயற்சி செய்து தெய்வீக நிலையை அடைந்தார்கள்.


ஆனால் இந்த மனிதர்கள் அவர்களைப் போல் 
முயற்சி செய்து உயர்ந்த நிலையை அடையாமல் 
வெறும் அவர்களைப் பற்றி வெட்டிக் கதைகள் பேசியும், 
அவர்களையே வழிபாட்டு கடவுளாகவும் ஆக்கி 
வீணே மடிந்து போய்க் கொண்டிருக்கின்றனர். 

கண்ண பரமாத்மா 
அர்ஜுனனுக்கு கீதையை உபதேசித்தான் 


அதுவும் ஒரு குரு தனியாக சீடன் காதில் பிறர் அறியாமல்உபதேசிப்பதுபோல் அல்லாது 
பல்லாயிரம் வீரர்கள் போருக்கு தயாராக நிற்கும்போது 
அவர்கள் நடுவே உபதேசித்தான்.
இதை சஞ்சயன் மட்டும் ஓட்டுகேட்டு 
திருதிராஷ்டிரனுக்கு சொன்னான். 
பிறகு வியாசர் மூலம் உலகிற்கு 
தெரியப்படுத்தப்பட்டது 

இதற்க்கு பல மகான்கள் 
விளக்கவுரை எழுதியுள்ளார்கள். 
இன்னும் எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.
காசு பார்க்கிறார்கள். 

ஆனால் படிப்பவர்களும் சரி 
சொல்பவர்களும் சரி. 
பகவான் நமக்கு தெரிவித்த உயர்ந்த நிலையை 
அடைந்தவர்கள் மிகச் சிலரே. 

பலர் உண்மைப் பொருளை உணராமல் 
அவரவர்களின் அறிவிற்குத் தகுந்தாற்போல் 
தவறான விளக்கங்களை அளித்து மக்களைக் குழப்பி வருகின்றனர். 

பாரதி இரண்டே வரிகளில்
பகவத் கீதையின் சாரத்தை நமக்கு பிழிந்து தந்தான் 

கண்ணன் பக்தி பண்ணி பிழைக்கச் சொன்னான்,
பலனை எண்ணாமல் உழைக்க சொன்னான் என்பதுதான். அது 

இன்னும் வரும்  




4 comments:

  1. உணர்பவர்கள் தானே உயர்ந்த நிலையை அடைவார்கள்...?

    தொடர்கிறேன் ஐயா...

    ReplyDelete
    Replies
    1. உணர்பவர்கள்
      தானே உயர்ந்த நிலையை
      அடைவார்கள்.

      Delete
  2. இரண்டு வரிகளில் பாரதியின் வரிகள் அருமை.

    ReplyDelete