Monday, February 10, 2014

ஸ்ரீ ஹனுமான் துதி

ஸ்ரீ ஹனுமான் துதி 

ஹிந்தி மொழியில் உள்ள ஹனுமான் சாலிசா போல் தமிழிலும் 
ஒரு துதி அனுமனின் மேல் உள்ளது..
பக்தர்கள் துதித்து பயன் பெறலாம்.





ஸ்ரீ ஆஞ்சநேய கவசம்

அஞ்சனை மைந்தா ஆஞ்சநேயா
ஆற்றல் தேவா காற்றின் செல்வா
இசையில் மயங்கும் இங்கித வடிவா

ஈ டிணை யிலா ஈசன் புதல்வா
உத்தம சீலா உயர் வானரமே
ஊகம் நிறைந்த ஏகசுந்தரனே 
எதையும் முடிக்கும் கதை கொண்டவனே
ஏவும் கணை போல் தாவும் பரமே 
அயிராவதம்போல் வலிவானவனே
ஒன்றாய் பலவாய் உருவெடுப்பவனே

ஓயுதலின்றி உதவிடும் குணபா 
அவ்வியம் அகற்றி அருள் தரும் மகிபா
எக்கார் மனதில் இடம் கொள்பவனே
எளியேன் சரணம் சரணம் சரணம்

சரணம் சரணம் சத்திய விரதா
சங்கர ஸ்வரூபா சரணம் சரணம்

பேரறிவாளா பிரமச்சர்யா
ஆராவமுதன் அகம்சேர் அழகா 
தன் பலமஅறியாதவிப்ராகாசா

நன் மனத்துரையும் நல்ஹனுமானே
வந்தனைக்குரிய வளர்மணி தேவா
சுந்தர காண்ட சுடர்மணித்தேவா

சசிவோத்தமனே சஞ்சீவிராயா
வசீகராவடிவா வாயுகுமாரா
அடியேன் சரணம் சரணம் சரணம்

படியார் தமக்கு பாடம் புகட்டும்
துணிவே துணிவே துணிவே துணிவே
துணையே துணையே துணையே துணையே

கணமே கணமே கணமே கணமே
நினைவாய் நினைவாய் 
நினைவாய் வருவாய்
மரணமணுகா மந்திர விலாசா
கரணம் கடந்த கவிக்குலதிலகா

சீருபகாரா சிந்தனையாளா 
மாருதி செல்வா மன ரட்சகனே

வருவாய் வருவாய் வல்லமை வீரா
அருள்வாய் அருள்வாய் கவசம் கவசம்

கதிரவந்தன்னை கனியாய் கருதி
மதி மயங்கியவா 
மங்கள ரூபா
தோத்திரப் பிரியா சாத்திர தலைவா

நேத்திர மணியா நேர்மை நிலையா 
சுக்ரீவனுக்கு சூக்குமம் அருள 
பக்க துணையாய் பரிமளித்தவனே 

வாலி தன்னை வதம் புரிந்திடவே
சீலன்  ராமனை தேர்ந்தேடுத்தவனே

ஊகம் நிறைந்த யுக கீர்த்த்யனே
ஆகமம் அறிந்த அறிவாலயனே

கடல்கள் கடந்து கணியாழிதனை
தடமாய் சீதையிடம் சேர்த்தவனே

சிம்ஹிஹைதன்னை ஹிம்சித்தவனே
ஜம்புமாலியை சம்ஹரித்தவனே

இலங்கினி யாளை உறங்கிட வைத்து
இலங்கை நகரை வதம் புரிந்தவனே

கால்நேமியின் கதை முடித்தவே
காலமறிந்து வாலசைப்பவனே 

துன்முகந்தன்னை துண்டாடியவா
பன்முரையாக பலம் காட்டியவா

சுயம்ப்ரபை அபயம்தந்து 
மணம் முடித்தவனே

பவனகுமாரா மாலிநிதன்னை பாலித்தவனே
நீலவண்ணன் நிழல் போன்றவனே

அயிராவணனை அடக்கிய வீரா
மயில்ராவணனை மடக்கிய வீரா

இந்திரசித்தின் இரும்பு பிடியில்
தந்திரமாக தப்பித்தவனே 

விஞ்சிடும் புகழால் வீறு கொண்டவனே 
தஞ்சம் புகும் நன்நெஞ்சுறைவபவனே 

அட்சயன் உடலை அணு அணுவாக 
வெட்டி சாய்த்த வீரனுமானே

வருக வருக வரகுணசீலா
தருக தருக துணிவும் தருக

பார்த்தன் கொடியில் பாங்காய் மிளிர்ந்த
கூரரிவாளா குங்கும வதனா

இலக்குவந்தானும் பிழைத்திடவேண்டியே 
மலையோடு மூலிகைதனை கொணர்ந்தவனே

வீடணன்தனக்கு நாடளித்தவனே
கூடிவாழும் குணம் கொண்டவனே

த்வாபர பீமா துணிவே சரணம்
அவாவினை அகற்றும் ஹனுமான் சரணம்

ராம நாமம் ரட்சக மந்திரம் 
ஆமென்ருனுணர்த்திய அதிசய பாலா 
ஏழிசை நிதியே எதிர்வந்தருள்க 
ஆழியை கடந்தோய் அவசரம் வருக

நவகோள்களினால் நலிகள் வராமல் 
சிவபுத்திரனே  காத்திட வருக 

அரணை பூரான் அரவம் இவற்றால் 
சிரமம் பெறாமல் காத்திட வருக 

சிங்கம் கரடி புலிகள் போன்றவை
எங்களை கண்டு மிரண்டிட செய்வாய் 
ஏழ்மை நிலையால் இகழ்ச்சியுறாமல் 
வாழும் முறையை உணர்த்திட வைப்பாய்

நீரில் வானில் நிலத்தில் செல்லும் போதில்
துணையாய் வருவாய் தேவா( 2 )

ஒருமை மனத்தால் உன்றன்னை துதிக்க 
அருமை மனதை அளித்திடு தேவா
அகந்தை கிழங்கின் அடிவேரறுத்து 
பதமாய் வாழும் பான்மை அருள்வாய்

ஐம்புல வெறியால் அவதியுறாமல்
அய்யா  நீயும் அமைதி அருள்வாய்

உள்ளும் புறமும் கள்ளம் ஒழித்து 
வெல்லும் ஆற்றலை விரும்பி அருள்வாய் 

எப்ப்பிழை புரினும் என்பால் இறங்கி
அப்ப்பிழை மீண்டும் புரியா நெறியில் 
காத்திடு தேவா காற்றின் புதல்வா

மாத்திரம் வாய்ந்த மாருதி செல்வா

ஜெம் ஜெம் ஜெம் ஜெம் ஜெம் ஜெம்
ஜெம் ஜெம் ஜெம் ஜெம் ஜெச்ஸ்வாஹா 

ஓம் ஹ்ரீம் வசிய ஓம் ஹ்ரீம் வசிய
ஓம் ஹ்ரீம் வசிய ஒய்யார வீரா

கத்தி கேடயம் கதை பரசுவுடனே 
குத்தும் சூலம் கூர் வாளேந்தி 
பஞ்சமுகமாய் பளிச்சிடும் தேவா
அஞ்சேல் என்று அபயம் அருள(2)

சக்கரம் சுழற்றி சடுதியில் வருக
திக்கெல்லாம் நடுங்க திடுமென வருக

விண்ணில் நீந்தி விரைவாய் வருக
மண்ணில் இறங்கி மகிமையும் தருக
எங்கெங்கே நான் இருந்திடும்போதில் 
அங்கெங்கே நீ அருள் செய்ய வருக

உன்னை விட்டால் உலகமும் இல்லை 
உன்னை விட்டால் உறவெனக்கில்ல்லை
உடலும் மனமும் உறுதிபெறவே
தடமாய் அமைவாய் தாண்டவ செல்வா

 பிரமச்சர்யா பெருந்தகையாளா 
 பரமன் வடிவா பார்த்தன் துணைவா

சரணம் சரணம் சரணம் சரணம்
சஞ்சீவிராயா நீயே கவசம்
கவசம் கவசம் கவசம் கவசம்
காலம் தோறும் நீயே கவசம் 

சக்திதாசன் சொல்லிய கவசம்
சக்தி கவசம் சத்திய கவசம்

ஒருமனதாக இதனை ஜபிப்போர்
இருவினை தீரும் இன்பம் கொடுக்கும்
பிணிகள் விலகும் பெருமையும் சேர்க்கும் 
அணிகள் செல்வம் ஆயுளும் வளரும் 
கல்வி பெருகும் கருமம் தொலையும்
பலவகை வளமும் பாங்காய் சேரும்

துருவன்கோட்டை அருமை அனுமான் 
இருளை போக்கிஇதமும் அருள்வான் 
தசரத ராமன் தளிர் பத நிழலில்
அசையாவண்ணம் நிறுத்திட வைப்பான்

ஜெய ராம் ஜெய ராம் ஜெயஜெய ராம்
ஜெயஜெயராம் ராம் ஜெய மாருதியே

சரணம் சரணம் சத்திய விரதா
சரணம் சரணம் சரணம்சத்ரு சம்ஹரா
சரணம் சரணம் சங்கர ஸ்வரூபா
சரணம் சரணம் மலரடி சரணம்

ஓம் ஜெய ஹனுமான்
ஓம் ஜெய ஹனுமான்
ஓம் ஜெய ஹனுமான்
ஓம் ஜெய ஓம் 

ஓம் ஓம் ஓம்

4 comments:

  1. சேமித்துக் கொண்டேன் ஐயா... நன்றி...

    (இன்று 6 மணிக்கு சிறப்பு நிகழ்ச்சி விஜய் டிவியில்... இது ஒரு தகவல் மட்டுமே...)

    ReplyDelete
  2. சேமித்து வைத்துக் கொண்டேன். நன்றி.

    ReplyDelete