Friday, February 28, 2014

குறை ஒன்று (ம் ) இல்லை மறை மூர்த்தி கண்ணா !(part-5)


குறை ஒன்று (ம் ) இல்லை

மறை மூர்த்தி கண்ணா !(part-5)



தொடர்ந்து தன் குடும்பத்தில் 
நிகழ்ந்த சம்பவங்கள் 
அவர் மனதில் நிச்சயமாக 
தாங்க முடியாத சோக 
நினைவுகளை ஏற்படுத்தி இருந்தது 

என்னதான் அவைகளை ஒதுக்கி தள்ளினாலும்
அவர் மனதை அந்த துன்பங்கள் 
அரித்து வாட்டியதும் உண்டு. 

இருந்த போதும் அவர் மனதில்
குறை ஒன்றும் இல்லை என்பதையே அவர்
இந்த பாடலின் மூலம் உலகத்திற்கு 
வெளிப்படுத்தினார் என்பதை மறுக்க முடியாது. 
இருந்தும் அவர் ஒரு விசித்திரமான 
கலவை கொண்ட மனிதராகத்தான் திகழ்ந்தார். 


பிறந்ததோ ஆச்சாரமான வைணவ 
பின்னணி கொண்ட குடும்பம் 
ஆனால் பூனூலை துறந்தவர் 

அவர் தீவிர சைவ உணவை உண்பதை கடைபிடித்தவர்
இருந்தும் மேலைநாட்டு உணவு பழக்கவழக்கங்களை நன்றாக அறிந்தவர் 


மதுவிலக்கை முழுமையாக ஆதரித்தவர்.

ஆங்கில தினசரியான"பஞ்ச் "பத்திரிக்கையின் 

கேலி சித்திரங்களை ரசித்தவர். 


பாலகங்காதர திலகரின் கொள்கைகளை  நேசித்தவர் 

ஆனால் காந்தியுடன் சுதந்திர போராட்டத்தில் 
தன்னை இணைத்துக்கொண்டவர். 

அதே சமயம் பல கொள்கைகளில் 
மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டவர். 

கட்டுப்பாடற்ற பொருளாதாரக் 
கொள்கைகளை  ஆதரிப்பவர்.

தேவைக்குமேல் தன்னிடம் ஒரு ரூபாய் கூட
வைத்துக்கொள்ளாதவர் .

இதிஹாச நாயகன் , இராமனின் பக்தனாக இருந்தும் 
அவன் வாலியை மறைந்திருந்து கொன்ற 
செயலை  ஏற்றுக்கொள்ளாதவர். 

இப்படிப்பட்ட முரண்பாடுகள் கொண்ட ராஜாஜிதான் 
தன்  வாழ்வில் நிகழ்ந்த அடுத்தடுத்து நிகழ்ந்த 
துயர சம்பவங்களை  எல்லாம் ஜீரணித்து 
அவற்றிலிருந்து மீளும்  வழியை நமக்கு காட்டினார் 
.
இறைவனிடம் சரணடைந்தால்,
எல்லா குறைகளும் மறைந்துவிடும் என்பதை 
குறை ஒன்றும் இல்லை என்ற பாடலின்
மூலம் வெளிப்படுத்தியுள்ளார் 
என்றால் அது மிகையாகாது. 

இன்னும் வரும் 

படங்கள்-நன்றி-கூகிள் 

3 comments:

  1. /// தேவைக்கு மேல் தன்னிடம் ஒரு ரூபாய் கூட வைத்துக் கொள்ளாதவர்... ///

    அவரின் சிறப்புகளுக்கு இதுவும் ஒரு முக்கிய காரணம் ஐயா...

    ReplyDelete
  2. மாறுபாடான கருத்து கொண்டவர்களை அவர் பகைவர்களாகப் பார்க்கவில்லை!

    ReplyDelete