Thursday, November 10, 2011

பிறவி பெரும்கடலை கடக்கும் உபாயம்

ஏன் இந்த மனித பிறவிக்கு இவ்வளவு முக்கியத்வம் கொடுக்கப்பட்டிருகிறது?
மனித பிறவியை விட அதிக சக்தி வாய்ந்த அரக்கர்கள், தேவர்கள். தெய்வங்கள் போன்ற
பிறவிகளைவிட மனித பிறவி எவ்வாறு உயர்ந்தது?
இதை ஒவ்வொரு மனிதனும் சிந்திக்கவேண்டும்
நாம் வாழும் இந்த பூமி இந்த அண்ட சராசரத்தில் உள்ள அனைத்து உலகங்களை விட
உயர்ந்தது
இங்குதான் மனிதரோ,தேவர்களோ,தெய்வங்களோ தங்கள் வினைகள் தீர
பிறவிஎடுத்து வினைகளை அனுபவித்து தீர்ப்பது மட்டுமல்லாமல் இறைவனை பூஜித்து
இறைவனை அடையமுடியும்
மற்ற உலகங்கள் எல்லாம் மாயையால் நிரம்பியது.
அங்கிருப்பவர்கள் அகந்தையால் தான் பெற்றிருக்கும் சக்திகளை கொண்டு
இறைவனை மறந்து வாழ்பவர்கள்
இதிஹாச புராணங்களை ஆராய்ந்து பார்த்தால் இந்த உண்மை புலப்படும்
மனிதர்களை ஆட்டி வைக்கும் நவக்ரகங்கள் இந்த பூமியில் வந்து
தவம் செய்து தங்கள் வினைகள் தீர இறைவனை வழிபட்டிருக்கின்றன
எனவே பல பிறவிகளில் செய்த புண்ணியங்களின்
பயனாக அரிதாக கிடைத்த இந்த மானிட பிறவியை
உலக மாயையில் மூழ்கி வீணடிப்பவர்கள்
துன்ப கடலில் மூழ்குவதை தவிர வேறு வழியில்லை
பிறவி பெரும்கடலை கடக்கும் உபாயம்
இறைவனின் திருவடியினை முழுவதுமாக சரணடைவதுதான்.
நம் மனதை திசை திருப்பும் புரட்டர்களின் வார்த்தைக்கு
செவிமடுக்காமல் நாளை என்று தள்ளி போடாமல்
இந்த நிமிடம் முதலே இறைவனை நோக்கி மனதை திருப்ப வேண்டும்.
அனேக வழிகள் இருந்தாலும் எளிய வழி ராம நாமத்தை உச்சரிப்பதுதான்.

2 comments:

  1. வினையறுக்க வந்ததே இப்பிறவி -- வினைகள் பிராரத்துவம், சஞ்சிதம், ஆகாமியம் என மூன்று வகை படும்.பிறப்போடு வருவது பிராரத்துவம், விதிக்கப்பட்டு வந்து பிறக்கிறோம்.
    நல்லோரை சார்ந்து ஒழுக்கமாக வாழ்ந்து சத்தியமாக நேர்மையாக வாழ்ந்தால் இறைவன் அருளால் சற்குரு கிடைக்கும்.
    http://sagakalvi.blogspot.com/2012/04/blog-post_03.html

    ReplyDelete
  2. நன்றி வருகைக்கும் கருத்துக்கும்
    சிவம்ஜோதி அவர்களே
    வள்ளலாரின் கருத்துக்கள் மக்களை போய் சேரவில்லை ஏன்?
    வள்ளலாரின் கொல்லா விரதத்தை கடைபிடிக்கக சொன்னார். மூட பழக்க வழக்கங்களை விட்டொழிக்க சொன்னார். உருவ வழிபாடு கூடாது என்றா. செத்தவர்களை புதைக்க சொன்னார். ஆனால் இன்று மனித உயிர்களும்,மற்ற உயிர்களும் சர்வ சாதரணமாக கொல்லப்படுகின்றன. உருவ வழிபாடுகள் பெருகிவிட்டனா/ மூட நம்பிக்கைகளை அதி நவீன மின் சாதனங்களின் துணையோடு பரப்பி மக்களை மேலும் மூடர்களாகவும் சிந்திக்கும் திரனற்றவர்கலாகவும் ஆக்கபடுகிரார்கள். எனவே மக்கள் போகும் வழியில் சென்றுதான் அவர்களை .வள்ளலாரின் கொள்கைகளை உணர்ந்து பயனுறும் வகையில் செயல்பாடுகள் அமையவேண்டும்.கசப்பான மருந்தை சிறிது இனிப்போடு அல்லது ஒரு உறையிலிட்டு கலந்து கொடுத்தால்தான் .மக்களிடம் போய் சேரும்.

    ReplyDelete