Saturday, November 26, 2011

மூட நம்பிக்கைகளுடன் ஆன்மீகம் என்ற பெயரில் உயிர்பலி, அர்த்தமற்ற சடங்குகள்

உலகத்தின் ஆதி குரு தஷிணாமூர்த்தி
அவர் மௌன குரு
அவர் பிரம்ம ஞானத்தை நான்கு சனகாதி
முனிவர்களுக்கு உபதேசித்தார்
அந்த உபதேசம் அவர்களோடு நின்றுவிட்டது.
உலகத்தின் அனைத்து மக்களுக்கும் போய் சேரவில்லை
மக்கள் அறியாமையிலேயே உழன்று கொண்டிருந்தனர்
அடுத்து பகவான் கிருஷ்ணன் அவதரித்தான்
அவன் பிரம்ம ஞானத்தை அர்ஜுனனுக்கு உபதேசித்தான்
பகவான் திருமுகத்திலிருந்து உபதேசம் வந்ததால் அவன்
ஜகத் குரு என்று அழைக்கபட்டான்
அந்த உபதேசத்தை பகவத் கீதையாக வியாசர் மகாபாரத காவியத்தில்
இடம்பெற செய்தார் அந்த மகாபாரதத்தை விநாயக பெருமான் தன்
தந்தத்தை ஒடித்து எழுதினர்.
அப்படி இருந்தும் பிரம்ம ஞானம் பாமர மக்களுக்கு புரிந்து கொள்ளும்
வகையில் இல்லை.
எனவே அவர்கள் வாழ்வில் எந்த ஆன்மீக முன்னேற்றமும் இல்லாமல்
ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக்கொண்டு மடிந்து கொண்டிருந்தனர்.
பகவான் நாராயணன் மூன்றடியால் மூவுலகையும் அளந்தான்
பிரம்ம லோகத்தில் பகவானின் காலடி வைத்தபோது அதற்க்கு
பிரம்மா அபிஷேகம் செய்த நீர் நாம் வாழும் பூவுலகத்திற்கு
சிவபெருமான் உறையும் கைலாய மலையில் விழுந்து கங்கையாக
பெருக்கெடுத்து ஓடி யுகம் யுகமாக நம் பாவங்களை கழுவி ஆன்மாக்களை
கரைஏற்றி கொண்டிருக்கிறது
எனவே மீண்டும் சிவபெருமான் காலடியில் ஆதி சங்கரராக அவதாரம் செய்து
இந்தியா முழுவதும் தன் காலடிகளால் நடந்து பகவத் கீதைக்கு உரையெழுதியும்
பிரம்ம ஞானத்திற்கு விளக்கங்கள் எழுதியும் அவைகளை மக்களிடையே
பரப்ப மடங்களையும் நிர்மாணித்தார்.
மனிதர்களில் ஜாதி, உயர்வு தாழ்வு பாராட்டுதல் போன்ற விரும்பத்தகாத
குணங்களினால் இறைவனின் எண்ணம் நிறைவேறவில்லை
பகவான் நாராயணன் ராமானுஜராக அவதரித்து
மக்களிடையே உயர்வு தாழ்வு கூடாது
இறைவனிடம் பக்தி செலுத்துபவர்கள் அனைவரும் ஒரேகுலம்,
இறைவன் அனைவருக்கும் உரியவன்,
இறைவனிடம் தன்னை முழுவதுமாக சரணடைவதின் மூலம் அவன் அருளை பெற்று உய்யலாம் என்றும்
வைணவருக்கே உரியதென கருதப்பட்ட நாராயண மந்திரத்தை அனைவருக்கும் அளித்து பிரம்ம ஞானம் பெறுவதை எளிமையாக்கினார்
இருந்தும் மக்களுக்கு பிரம்ம ஞானம் போய் சேரவில்லை .
அவருடைய உபதேசம் ஒரு குறுகிய வட்டத்திற்குள்ளேயே நின்றுவிட்டது
சிறு தெய்வ வழிபாடு கூடாது என்று வலியுறுத்திய ராமனுஜரின் அறிவுரைகள் இன்று காற்றில் பறக்க விடப்பட்டுள்ளது
எங்கு பார்த்தாலும் சிறுதெய்வ வழிபாடுகளதான்
மூட நம்பிக்கைகளுடன் ஆன்மீகம் என்ற பெயரில் உயிர்பலி,
அர்த்தமற்ற சடங்குகள் போன்றவைகளுடன் நடந்துகொண்டிருக்கின்றது.
அதனால் அன்பே இறைவான் இறைவனை உள்ள சுத்தியுடன் வணங்காமல்
அமைதியான,மகிழ்ச்சியான வாழ்க்கை வாழாமல்
அதர்ம வழியில் பொருள் சேர்த்து பிறரை வஞ்சித்து துன்புறுத்தி
மதத்தின் பெயரால் ஒருவொருக்கொருவர்
சண்டையிட்டு மடிந்துகொண்டிருக்கின்றனர்.
உண்மையான இறைவழிபாடு என்பதை
மக்களுக்கு உணர்த்த தொடர்ந்து இறைவனிடமிருந்து
அவனின் தூதர்கள் இவ்வுலகில் அவதரித்து
மீண்டும் மீண்டும் காலத்திற்கு ஏற்றாற்போல் பகவானின் உபதேசங்களை
பரப்பி வந்துகொண்டிருக்கின்றனர். அவைகளை தொடர்ந்து சிந்திப்போம்

No comments:

Post a Comment