Wednesday, November 9, 2011

அரிது அரிது மானிடராய் பிறத்தல்

அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது என்று
அவ்வை மூதாட்டி அன்றே சொன்னாள்
இன்றைய விஞ்ஞானமும் அதைதான் சொல்கிறது
பல லக்ஷம் விந்தணுக்களில் ஒன்றுதான்
பெண்ணின் கருமுட்டைக்குள் நுழைந்து கருவாக மாறுகிறது.
அதுவும் கருப்பையில் வளர்ந்து குழந்தையாக உருபெற்று
இவ்வுலகிற்கு வருவதற்குள் படும் துன்பங்கள்,ஆபத்துக்கள் ஏராளம்.
தாய் கருவை கலைத்துவிடலாம்
நோய் கிருமிகள் தாக்கி கருவை அழித்துவிடலாம்.
இன்னும் எத்தனையோ ஆபத்துக்கள்
அப்படி பிறந்து வந்தாலும் அதன் ஆயுள் 100 வயது
என்று வைத்துக்கொண்டால் அதில் 50
ஆண்டுகளுக்குமேல் தூங்கியே கழித்துவிடும்.
மீதி 15 ஆண்டுகள் ஒன்றும் அறியா இளமை பருவம்
மீதம் 35 ஆண்டுகளில் நோய்கள்,பசி,முதுமை ,துன்பங்கள் ஆகியவை வாட்டி வதைத்து விடும்
ஆனால் இதை தவிர கவலைகள்,தானே ஏற்படுத்திகொண்ட
தீய பழக்கங்கள் என இறைவன் அளித்த பிறவியை
யாரும் நல்ல வகையில் பயன்படுத்துவது கிடையாது.
இறைவனுக்கு அடிமையாகாமல் போதைக்கும்,பேதைக்கும் அடிமையாகி
வாழ்வை தொலைப்பவர்கள் ஏராளம்
ஆன்மீக விழிப்புவருவதற்குள் மரணம் ஆடகொண்டுவிடும்.
எனவேதான் இறைவன் அளித்த இந்த பிறவியை வீணடிக்காமல்
ராம நாமத்தை ஜபம் செய்யவேண்டும்.
கடவுள் இல்லை என்பவர்களின்
மாய வலையில் சிக்கி மோசம் போககூடாது.

No comments:

Post a Comment