Thursday, November 24, 2011

ராமாயணத்தில் என்ன இருக்கிறது?

ராமாயணத்தில் என்ன இருக்கிறது?
வாழ்க்கையை எப்படி எதிர்கொள்ளவேண்டும்
என்பதை அது கற்றுகொடுக்கிறது?
ராமா உனக்கு நாளைக்கு மணிமகுடம் என்றார்கள்
ஆனால் அடுத்த நாள் காலை
காலை வாரிவிட்டார்கள் காட்டிற்கு போ என்று
ஆனால் பதவி மோகம் அற்ற
ராமன் அமைதியாக அதை எதிர்கொண்டான்
புதிய இடங்களை பார்க்கலாம்,கானக வாழ்கை எப்படி இருக்கும்
அதையும் நேரில் பார்த்து தெரிந்துகொள்ளலாம்
,எல்லாவிதமான மக்களுடன் பழகலாம்,
பல புதிய விஷயங்களை அறிந்துகொள்ளலாம்
தவம் செய்யும் முனிவர்கள்,தவசிகள் ஆகியோரை சந்தித்து அவர்களிடம் ஆசியை பெறலாம் என்றெல்லாம் நினைத்து அதை மகிழ்வுடன் ஏற்றுகொண்டான்
எல்லோரும் இல்லற வாழ்க்கை நிறைவு செய்தபின் துறவு வாழ்க்கை மேற்கொள்ளுவார்கள்
ஆனால் ராமனுக்கு இல்லற வாழ்க்கையின் துவக்கத்திலேயே துறவு வாழ்க்கை அமைந்தது.
ராமன் இருக்குமிடம்தான் அயோத்தி என்று சீதை அரண்மனை போக வாழ்க்கையை துறந்து ராமனுடம் கானகம் செல்ல தீர்மானித்தாள்
.உண்மையான அன்பு அப்படிதான் எண்ண வைக்கும்
ஆனால் பெண்கள் இக்காலத்தில் தன்னிடம் காசிருந்தால் கணவனையும் மதிக்கமாட்டார்கள் காத்து வளர்த்த பெற்றோரையும் மதிக்கமாட்டார்கள். எல்லாம் சுயநலம்.
வாழ்க்கையை அதன் போக்கில் ஏற்று வாழ பழகிகொண்டால் மனம் அமைதியடையும், புதிய அனுபவங்கள் கிடைக்கும்.எவ்வளவு கடினமான பிரச்சினைகளையும் சமாளிக்கும் மனஉறுதியும் கிடைக்கும்.
ஆனால் இன்று என்ன நடக்கிறது?
சாதரணமான பிரச்சினைகளை கூட சமாளிக்கும் மன உறுதி இல்லை,மன தெளிவு இல்லை
யாரை பார்த்தாலும் மது,போதை ,கஞ்சா என பலவிதமான போதை பழக்கத்திர்க்கு ஆளாகி நோய் தாக்கி அழிந்து போகின்றனர்.
ஒருவொருக்கொருவர் அன்பில்லை .அதனால் மன இறுக்கம் ஏற்பட்டு குற்றங்கள் பல்கி பெருகிவிட்டன
அதனால் இன்று பல்லாயிரக்கணக்கான மக்கள் மன நோய்க்கு ஆளாகி மனநல காப்பகங்களும், சிறைச்சாலைகளும் நிரம்பி வழிகின்றன
எதற்கெடுத்தாலும் போராட்டம் வன்முறை. அவர்களுக்கும் நிம்மதியில்லை, அவர்களை சுற்றி இருப்பவர்களுக்கும் நிம்மதியில்லை அதனால் ஆள்பவர்களும்,நிம்மதியில்லாமல் இருக்கிறார்கள்
பிறர் சொத்திற்கு ஆசைப்பட்டு பிறரை ஏமாற்றி ,வஞ்சித்து வாழ்க்கை நடத்துகின்றனர்
தினமும் பல்லாயிரக்கணக்கான மக்களின் பேராசையை ஒரு சிலர் பயன்படுத்திக்கொண்டு கோடி கோடியாய்ஏமாற்றுகிறார்கள்
எதற்கெடுத்தாலும், உரிமை கோரி எதிர்த்துகொண்டிருந்தால்
வாழ்க்கை முழுவதும் போராட்டம்தான்.
வாழ்க்கையில் எந்த சுகத்தையோ மகிழ்ச்சியையோ அனுபவிக்கமுடியாது
நர்சரியில் வளர்க்கப்படும் மர கன்றுகள் அங்கேயே நடப்படுவது கிடையாது
வேறு இடங்களில் எடுத்து நடபட்டால்தான் நல்ல மகசூல் கொடுக்கும்
அதைபோல்தான் வாழ்க்கையும் .இதை புரிந்துகொண்டால்போதும்
எந்த பிரச்சினையும் நம்மை பாதிக்காது.
பிரச்சினைகள் நம்மை மனதளவில் உறுதியாக்கி
நம்மை வலுப்படுத்தும் காரணிகளாக அறிந்துகொள்ளவேண்டும்
இந்நிலை மாறவேண்டுமென்றால் வாழ்க்கையை புரிந்துகொண்டு
சகிப்புதன்மையுடன் பிரசினைகளை அணுக கற்றுக்கொள்ளவேண்டும்
இறைவனிடம் நம்பிக்கை வேண்டும் அவனிடம் பக்தி வேண்டும்
பக்தியுடையார் காரியத்தில் பதறார் என்றான் மகா கவி பார்ரதி
இறைவனிடம் நம்பிக்கை வைத்தால் அவன் வழி காட்டுவான் நல்வழியை

No comments:

Post a Comment