Tuesday, November 22, 2011

துஷ்டர்களை அழித்து நல்லவர்களை காக்க வேண்டியே

ராமன் எதற்காக தன் அரசாளும் உரிமையை
விட்டுவிட்டு காட்டுக்கு போனான் ?
ராமன் பரம்பொருள்
அவன் இவ்வுலகிற்கு வரும்போதே
பல திட்டங்களுடந்தான் வந்தான்
அவன் தந்தை தசரதன் போல்
பல மனைவிகளை மணந்து கொண்டு
போக வாழ்க்கை நடத்த அல்ல
அவன் நினைத்த திட்டங்களைஎல்லாம்
அவன் நிறைவேற்ற வேண்டுமென்றால்
அவன் அயோத்தியை விட்டு கிளம்பவேண்டும்.
அதற்காகத்தான் இந்த நாடகம்.
ஏனென்றால் அவனை காண்பதற்காக தரிசனம் பெறுவதற்காக
ஏராளமான மக்கள்,முனிவர்கள் ,ரிஷிகள்,தவசிகள்,
பக்தர்கள் மிருகங்கள் வழி மீது விழி வைத்து
காத்து கிடந்தனர்.
எனவே திருமணம் செய்துகொண்டு
அயோத்தியில் உட்கார்ந்துகொண்டு
அயோத்தியை மட்டும் நிர்வாகம் செய்துகொண்டிருந்தால் போதுமா?
அரக்கர்களாலும்,ராட்சதர்களாலும் சொல்லொணா துன்பங்களை அனுபவித்து கொண்டிருக்கும்,தேவர்களும்,
மனிதர்களும்,தவசிகளும், மனமுருகி விடுத்த
பிரார்த்தனையினால் அல்லவோ அவன் வானுலகிலிருந்து
இப்பூவுலகிற்கு இறங்கி வந்துள்ளான்.
துஷ்டர்களை அழித்து நல்லவர்களை காக்க வேண்டியே
அவன் அயோத்தியை விட்டு புறப்பட்டான்
அனைவரையும் சந்திக்க நடந்தே நாடு முழுவதும் சென்று
தன் அவதார நோக்கத்தை நிறைவேற்றிய ராமன்
அவன் நினைத்த காரியங்களை முடித்தவுடன் விமானத்தில்
அயோத்தி திரும்பி அனைவரும் போற்றும் வண்ணம்
அரசை நிர்வாகம் செய்தான்.
நம்மை போன்ற பாமர மக்களுக்காக இப்பூவுலகில்
அவதாரம் செய்துநமக்கு நல்வழி காட்டி
நம்மை ஆட்கொண்ட அந்த பரம்பொருளை நினைத்து
மனம் உருகி வழிபட்டால் நம் துன்பமும் தீரும்
நம் நாட்டை பிடித்த பீடைகளும் விலகும்

No comments:

Post a Comment