Sunday, November 20, 2011

பிற உயிருக்கு துன்பம் விளைவித்தால் எப்பிறவியில்தான் கடைத்தேறுவது?

அன்பே சிவம் என்கிறார்கள்
அன்பே சக்தி
அன்பே கடவுள் என்கிறார்கள்
சிவ பெருமானை வழிபடும் தெய்வமாக கொண்டவர்கள்
சைவர்கள் என்று சொல்லிகொள்ளுகிறார்கள்
சைவர்களில் இன்று அனேகம்பேர் அசைவ உணவு
உட்கொள்ளுபவர்களாக மாறிவிட்டனர்
அதேபோல்தான் சக்தி வழிபாடு செய்வவர்களும்
கடவுள் மீது மட்டும் அவர்கள் அன்பு செலுத்துவதாக நினைத்துகொண்டு
வழிபாடு செய்கிறார்கள்
ஆனால் கடவுள் படைத்த உயிர்கள் மீது அன்பில்லாமல் ஈவு இரக்கமின்றி
அவைகளை கொன்று அதன் மாமிசத்தைஉண்பது எந்தவிதத்தில்
அவர்களுக்கு கடவுளின் அருளை பெற்றுத்தரும் என்பதை
சிந்தித்து பார்த்தால் அவர்கள் செய்வது பெருந்தவறு என்பதை
உணர முடியும்
உயிரை கொடுக்க வக்கில்லாத மனித பிறவிகளுக்கு
மற்றொரு உயிரை போக்க எந்தவித நியாயமும் இருக்க வாய்ப்பில்லை
போதாத குறைக்கு அந்த மாமிசத்தை கடவுளுக்கு
படையல் வேறு செய்து அதை உண்கிறார்கள்
ஒரு உயிரை பலி என்ற பெயரில் கொல்வதால்
எப்படி நன்மைகள் கிடைக்கும் என்பதை அவர்கள்
சற்று சிந்தித்து பார்க்க வேண்டும்
புத்த பகவான் வலியுறுத்திய இந்த மதத்தை
சார்ந்தவர்களும் உயிர் கொலையையே தங்கள்
வாழ்க்கை கொள்கையாக கொண்டுள்ளனர்
இப்படி மதத்தின் உண்மையான கொள்கைகளை
கடைபிடிக்காமல் போலியாக உலகை ஏமாற்றி தங்களையும்
ஏமாற்றிக்கொண்டு மக்கள் வாழ்ந்துவருகின்றனர்
அதனால்தான் இன்று உலகில் எங்கும் அமைதியில்லை
மக்கள் மனதிலும் அமைதியில்லை
இவ்வுலகில் நமக்கு கிடைக்கும் நற்பலன்களும்
தீயபலன்களும் நாம் முற்பிறப்பில் செய்த நல்வினை,
தீயவினைகளை பொறுத்தே அமைகின்றன .
கிடைத்த இப்பிறவியிலும் பிற உயிருக்கு துன்பம் விளைவித்தால்
எப்பிறவியில்தான் கடைத்தேறுவது?
இந்த உண்மையை உணர்ந்துகொண்டு தங்களை
திருத்திகொளபவர்கள் இறைவனின் அருளுக்கு
விரைவில் பாத்திரமாக முடியும்

No comments:

Post a Comment