Friday, December 30, 2011

உண்மை என்பது கடவுள்

உள்ளம் சொல்வதை உதடு சொல்லாமல்
உண்மை பிறப்பதில்லை
உள்ளிருந்தே நீ அருள் செய்யாமல்
ஒன்றும் நடப்பதில்லை

என்ற வரிகளை சீர்காழி கோவிந்தராஜன்
பாடியதை அந்த கால ரசிகர்கள்
மறந்திருக்க மாட்டார்கள்

ஆனால் இன்று உலகில் என்ன நடக்கிறது?

உள்ளம் ஒன்று நினைக்கிறது
உதடு ஒன்று சொல்கிறது

வீட்டிற்குள்ளும் அதே நிலைமை
வெளியிலேயும் அதே நிலைமை

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் பொய் சொல்லுகிறார்கள்
பல நேரங்களில் உண்மை பேசும் குழந்தைகளை பொய் சொல்ல சொல்லி
கட்டாயபடுத்துகிரார்கள் இல்லை கட்டாயபடுத்தபடுகிரார்கள்

இதனால் தூய மனதுடன் இவ்வுலகிற்கு வந்த குழந்தையின் உள்ளம்
கெடுகிறது

பிறகு அது பொய் சொல்லுவதை தன இயல்பாக கொண்டு விடுகிறது

பெற்றோர்களின் இந்த கொடுஞ்செயல் அவர்களுக்கு எதிராகவே
பிற்காலத்தில் முடிகிறது

இதனால் வீட்டிற்குள்ளும் வீட்டிற்கு வெளியேயும் பொய்தான் ஆட்சி செலுத்துகிறது

உண்மைக்காக வாழ்ந்த ஹரிச்சந்திரன் இருந்த இந்நாட்டில் அவன் வாழ்ந்த நெறியை கடைபிடிக்க சமீப காலத்தில் முயற்சி செய்தவர் மகாத்மா காந்தி

அது அவரோடு போய்விட்டது

உண்மை என்பது கடவுள் 
கடவுள் என்றால் உண்மை 
இரண்டையும் பிரிக்கமுடியாது

அவ்வாறிருக்க உண்மை பேசாமல்,
உண்மை நெறியை கடைபிடிக்காமல்
கடவுளை அடைவது என்பது
சாத்தியமற்றது என்பதை
கடவுளை நோக்கி
வழிபாடு செய்யும் மனிதர்கள்
உணரவேண்டியது அவசியம்

வரும் புத்தாண்டிலாவது
உண்மை நெறியை இயன்றவரை
கடைபிடிக்க முயற்சி செய்தால்
உள்ளத்தில் அமைதி பிறக்கும்

அமைதியை நாடி எங்கும்
செல்லவேண்டிய அவசியமும்
இருக்காது 

  

Sunday, December 25, 2011

காக்கும் கடவுளான நாராயணா இந்த மனித குலத்தை நீதான் காப்பாற்றவேண்டும்


காக்கும் கடவுளான நாராயணா இந்த மனித குலத்தை நீதான் காப்பாற்றவேண்டும் 

புராண காலத்தில் காக்கும் கடவுளான நாராயணன் மது,கைடபன் என்ற
அரக்கர்களை அழித்ததாக கூறப்பட்டுள்ளது

மக்களின் மதியை மயக்கி உடல்நலனை சீரழித்து வாழ்வை அழிக்கும் மதுவை
மதுவை உற்பத்தி செய்பவர்கள்,விற்பவர்கள் ஆகியவர்களை அழித்து தன படைப்புகளை காக்க இறைவன் அவதாரம் எடுதுள்ளதாகதான் இதை கருத வேண்டும்

இன்றும் அதே சூழ்நிலை தான் நீடிக்கின்றது

மதுவினால் இன்று கோடிகணக்கில் மக்களின் மதி மயங்கி
உடல் நோயுற்று துன்புறுகின்றனர்

கொள்ளை கொலை போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்
குடும்பத்தில் மனைவி குழந்தைகள், பெற்றோர் ஆகியோரை துன்புறுத்தி
அமைதியையும் ஆனந்தத்தையும் கெடுப்பதுடன்  குறைந்த ஆயுளிலேயே மாண்டு போகின்றனர்

இதனால் நாட்டில் ஆதரவற்ற,குழந்தைகள்,பெண்கள்,முதியோர் என சமுதாயத்தில் எண்ணிக்கை பெருகிவருகிறது

இந்த தீய செயலிலிருந்து மக்களை காக்க வேண்டிய அரசுகளே அதை தடுக்காமல் அவைகளே மதுவை தயாரித்து மக்களை குடிக்க வைத்து
தங்கள் சுயநல் நோக்கங்களுக்காக மக்களை பகடைகாய்களாக பயன்படுத்தி (கொள் )கொல்கின்றனர்

கடந்த காலத்தில் மகாத்மா காந்தி மதுவிற்கு எதிராக போராடிமக்களை
காப்பாற்றினார்.

தற்போது மீண்டும் இறைவன் நாராயணன் அனைவரின் வாழ்வை சிதைக்கும் மது என்ற அரக்கனை கொன்று மக்களை காக்க அவதாரம் எடுக்கவேண்டும் என்று முழுமனதுடன்பிரார்த்திப்போமாக 

யாருக்கு அடிமை செய்ய வேண்டும் ?

யாருக்கு அடிமை செய்ய வேண்டும் ?
பரிபூரணனுக்குதான் அடிமை செய்ய வேண்டும் 
என்றான் மகாகவி பாரதி 

ஆனால் இன்று என்ன நடக்கிறது?

சிலர் பெண்களிடம் அடிமைப்பட்டு கிடக்கிறார்கள்
பலர் பிறரை ஆட்டுவிக்கும் அதிகார போதைக்கு 
அடிமைப்பட்டு கிடக்கிறார்கள்
கோடிகணக்கான மனிதர்கள் மதுவுக்கும்,
போதை பொருளுக்கும் ,பலவிதமான சூதாட்டங்களுக்க்கும் 
அடிமைப்பட்டு பொருளை இழந்து, தன்னை இழந்து,அதிலிருந்து
வெளி வர முடியாமல் மூழ்கிகொண்டிருக்கிரார்கள் 
 
பலர் புகழுக்கு அடிமைப்பட்டு 
இகழ்ச்சியைவலிய தேடிகொள்ளுகிரார்கள்

வலிமையான நாட்டிற்கு வலிமை குறைந்த
 நாடுகள் அடிமைப்பட்டு சிறுமைபட்டுகொண்டிருக்கின்றன

இப்படியாக இன்று யாருக்கும்
உண்மையான விடுதலை இல்லை 
விடுதலை வேண்டும் என்று 
தறுதலையாக தாறுமாறாக நடந்துகொண்டு
சூழ்ச்சி வலையில் சிக்கி கூண்டோடு 
அழிந்து போய்கொண்டிருக்கிறார்கள் 
என்பதை வரலாறு சொல்லும்
 
நம்மை சுரண்டி நம்மை பூண்டோடு அழிக்கும் 
மனிதர்களிடம் நாம் உதவி தேடி சென்றால் 
மேற்கொண்டவாறுதான் நிகழும்

நம்மை நாம் காப்பற்றிகொள்ளமுடியாத
நிலை வரும் போது நம் நிலையை புரிந்துகொண்ட
நம்மை காப்பாற்றக்கூடிய 
நல்லவர்களிடம்,வல்லவர்களிடம்தான் 
நம்மை ஒப்புவிக்கவேண்டும் 

அதற்க்கு தகுதியானவர் இறைவன் ஒருவன் மட்டுமே
அவனிடம் முழுவதுமாகநம்மை ஒப்புவித்தால் 
அனைத்து துன்பங்களிலும் இருந்து 
விடுபடுவோம் என்பதில் ஐய்யமில்லை 

Thursday, December 22, 2011

கடவுள் எல்லா இடத்திலும் நிறைந்திருந்தும் நம்மால் ஏன் அவரை காண முடியவில்லை?

கடவுள் எல்லா இடத்திலும் நிறைந்திருந்தும் 
நம்மால் ஏன் அவரை காண முடியவில்லை?

அதற்க்கு காரணம் நம் மனம்தான்
நம் மனதில் கடவுளை பற்றிய பலவிதமான
கற்பனைகள் நிறைந்துள்ளன
பொதுவாக நாம் கடவுளை பல வடிவங்களில் இருப்பதாக 
கற்பனை செய்து வைத்துகொண்டு 
அதை கடவுள் என்று வழிபடுகின்றோம் 
இந்த எண்ணம் எல்லோரின் மனதிலும் 
ஆழமாக பதிந்துவிட்டது

பிறந்ததிலிருந்தே நாம் அப்படிதான் வழிபாடு 
செய்ய கற்பிக்கபட்டிருக்கிறோம்
அந்த எண்ணத்தை தாண்டி நம் சிந்தனை செல்வதில்லை 
அப்படி செல்லவும் நம்மை சுற்றியுள்ளவர்களும் 
நம்மை விடுவதில்லை
கோடிகணக்கான மனிதர்களில் பகவான் ரமணர் 
போன்றவர்கள்தான் இந்த எண்ணத்திலிருந்து 
வெளியே வந்து சில உண்மைகளை 
வெளிப்படுத்தி அதன்படி வாழ்ந்தும் காட்டினர்

ஆனால் அவர் வெளிபடுத்திய உண்மைகளை இந்த உலகம் 
இன்னும் புரிந்துகொள்ளவில்லை 
மாறாக அவரையே கடவுளாக்கி சிலை வைத்து
கோயில் கட்டி வழிபாடு செய்ய ஆரம்பித்துவிட்டனர்

எத்தனையோ மகான்கள் புற வழி பாடுகளை 
மேற்கொண்டாலும் அவர்கள் எழுதிய நூல்களில்
தெளிவாக இறைவன் நமக்குள்ளேதான் இருக்கின்றான் 
என்று எழுதி வைத்துள்ளதை யாரும் கவனிப்பது கிடையாது
அக வழிபாட்டிற்கு முக்கியத்வம் அளிக்காமல் புற வழிபாட்டிலேயே 
தங்கள் வாழ்நாள் முழுவதையும் வீணடித்து இறைவனை 
அறியாமலேயே மீண்டும் பிறப்பு இறப்பு சுழலில் 
சிக்கிக்கொண்டு அவதி பட்டுகொண்டிருக்கின்றனர். 

Sunday, December 18, 2011

உண்பதும் உறங்குவதும்தான் உன் வாழ்க்கையின் லட்சியமோ?

உண்பதும் ஊர் சுற்றுவதும் உறவு கொள்வதும் 
உறங்குவதும் பிற உயிர்களை 
துன்புறுத்தி இன்பம் காண நினைப்பதுவும்தான் 
உன் வாழ்க்கையின் லட்சியமோ?

ஓரறறிவு முதல் ஐந்தறிவு 
படைத்த உயிர்கள் செய்யும் 
வேலையை நீ செய்வதற்கு 
உனக்கு ஆறறிவு எதற்கு?

சிந்தனை செய்வாய் மனமே 
சிந்தனை செய்வாய் 
சிந்தனை செய்யும் மனதை அளித்த
அந்த மாதவன் கேட்கின்றான் 
பதில் சொல் மனமே சொல் 
பதில் சொல் மனமே சொல்

தாமரை பூவில அமர்ந்தருள் செய்யும் இலக்குமியை 
வணங்கி  மகிழாது கண் விழித்தெழுந்தது 
முதல் உறங்கும் வரை தறி கெட்டலைந்து  
உன் மனமென்னும் பொறியில் 
அகப்பட்ட பூச்சிகள் போல் துடிப்பது ஏனோ?

வீணை ஏந்தி கானம் செய்யும் கலைமகளை வணங்காது 
வீண் கதைகள் பேசி சுற்றி திரிந்து வாழ்வை 
வீணாக்கலாகுமோ சொல் மனமே சொல்

மாலவனை அடைய மாதவம் 
செய்திடவே அளித்த இந்த 
கிடைத்தற்கரிய இப்பிறவியை 
வீணடிப்பது முறைதானோ சொல் 
முறைதானோ சொல் மனமே
முறைதானோ சொல் மனமே சொல்

ஊரெங்கும் கோயில் கொண்டு 
உனக்கு உணர்த்த நான் சிலையாய் 
நின்றிடினும் உலக போகம் என்னும்
மாய வலையில் நீ சிக்கி 
வீணே மடிவது சரிதானோ
சரிதானோ சொல் சரிதானோ 

எச்செயலுக்கும் கால அட்டவணை போடும் மனிதா
காலன் உனக்கு போட்டு வைத்த அட்டவனையை 
நீ அறிய மறுப்பதேனோ? 
அறிய மறுப்பதேனோ சொல்?

அனைத்துமாய் நான் இருந்தாலும் 
மாதத்தில் நான் மார்கழியானேன் 
உன் பாவங்கள் கழிந்து நீ புனிதமடைய 
இப்புவியில் நலமாய் வாழ

இன்றே என்னை அடைக்கலம் புகுவாய்
துன்பமற்ற இன்ப வாழ்வை பெற
ஆலயம் வந்திடுவாய் 
கண் குளிர கண்டிடுவாய் என் வடிவம் 
இனிய இசையுடன் என்னை துதித்திடுவாய்
ஆனந்தமுடன் அன்றாடம் 
பணிகளை ஆற்றிடுவாய்

கவசம் போல் உன்னை நான் காப்பேன் 
காலமெல்லாம் என் கண்ணுக்குள் வைத்து 


தண்ணீருக்காக கண்ணீருடன் அலையும் மக்களே

சிந்தனைக்கு சில வரிகள்

எந்த பிரச்சினைக்கும் கூட்டம் சேர்த்து 
கூப்பாடு போடாதீர்கள் 
கூப்பாடு போட்டு முடிந்த பின்
கூட்டம் கலைந்து விடும் 
எந்த பிரச்சினையும் தீராது 

கூட்டமாக இணைந்து இறைவனை 
நோக்கி வழிபாடு செய்யுங்கள்
உங்கள் பாடும் தீரும் 
பிரச்சினைகளும் முடிவுக்கு வரும் 

ஒவ்வொரு ஆண்டும் காவிரி நீர் 
பிரச்சினையை தீர்த்துவைப்பது
அரசியல்வாதிகளோ நீதிமன்ற தீர்ப்புகளோ அல்ல
வருண பகவான்தான் தீர்த்துவைக்கிறான் 
என்பதை புரிந்து கொள்ளுங்கள்

தண்ணீருக்காக கண்ணீருடன் அலையும் மக்களே 
இறைவன் ஆண்டுதோறும் வெள்ளமென மழையை 
அளவின்றி அளிக்கிறான்
அதை சேமித்து வைத்துகொள்ள வழியின்றி 
கடலில் விட்டுவிட்டு அண்டை மாநிலங்களுடன் 
சண்டையிடுவதால் யாருக்கு பயன்?

இறைவனிடம் தூய உள்ளத்துடன்  மன்றாடுங்கள் 
அவன் எல்லா பிரச்சினைகளையும் நிரந்தரமாக 
தீர்த்து வைப்பான்
 .
மனிதர்களை நம்பாதீர்கள்
அவர்களின் உள்ளம் சுயலமும் உள்நோக்கமும் 
கொண்டு மாசடைந்துள்ளது
நம் அரசுகள் அதேபோன்ற உள்ளங்களை கொண்ட
மனிதர்களால் ஆக்கப்பட்டுள்ளது
அதனால்தான் எந்த பிரச்சினைக்கும் அவர்களால் தீர்வு
காணமுடியவில்லை
.
அனைவருக்கும் நல்லஉள்ளம் அமைய வேண்டும் என்று 
தினமும் இறைவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள்

தூய உள்ளம் கொண்டவர்களால்தான் அனைவருக்கும்
நன்மை பயக்கும் செயல்களை செய்ய முடியும்  


  

Wednesday, December 14, 2011

மனம் என்பது ஒரு கட்டுபாடற்ற சக்தி அதை ஒருமைபடுத்தி அதிக சக்தியை பெறலாம்

நாம் காண்பதனைத்தும் உண்மையா?

நம்முடைய கண் என்னும் கருவி மூலம்
காண்பது உண்மையின் பிரதிபலிப்பா?

கண்ணால் கண்ட காட்சியை மனம் ஒருவாறு பார்க்கிறது
புத்தி ஒருவாறு புரிந்து கொள்கிறது

ஆனால் உண்மை என்ன என்பதை எப்படி அறிந்துகொள்வது?
மனம் என்பது கடந்த கால பதிவுகளின் தொகுப்பு
எந்த காட்சியை கண்டாலும் ஏற்கெனவே அக்காட்சி தொடர்பாக
மனதில் உள்ள காட்சி பதிவுகளுடன் ஒப்பிட்டு பார்த்து
முடிவுக்கு வரும்
அது சரியா தவறா என்பதை புத்திதான் முடிவு செய்யும்

மனதில் எந்த விதமான எண்ணங்கள் நிறைந்திருக்கிறதோ
அதை பொறுத்துதான் அதன் செயல்பாடு இருக்கும்
தீயவர்களோடு அது தொடர்பு கொள்ளும்போது பிறரை பாதிக்கும் தீய முடிவுகளையும் நல்லவர்களோடு தொடர்புகொள்ளும்போது பிறருக்கு நன்மை பயக்கும் முடிவுகளையும் எடுக்கும் .
இதில் குழப்பம் ஏற்படாமல் தடுக்க புத்தியினால்தான் முடியும்

மனம் தன்னிச்சையாக தவறாக முடிவுக்கு வரும்போதுதான் மற்றவர்கள் உனக்கு புத்தி இருக்கிறதா என்று கேள்வி கேட்பதை அனைவரும் கவனித்திருப்பீர்கள்

மனம் என்பது ஒரு கட்டுபாடற்ற சக்தி
அதை ஒருமைபடுத்தி அதிக சக்தியை பெறலாம்
அதை கொண்டு இந்த உலகில் சாதிக்க முடியாதது எதுவும் இல்லை

இறைவனை அடையவும் மன ஒருமைப்பாடு  தேவை
மன ஒருமைப்பாடுடன் இறைவனை தியானித்தால் இறைவனை அடையலாம்
அதற்க்கு தியானம் செய்யவேண்டும்

அதற்க்கு நல்ல புத்தியை இறைவனிடம் வேண்டி பெறவேண்டும்
அதனால்தான் திருமூலரும் இறைவனை புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேன் என்று கூறியுள்ளார்
.
தொண்டரடிபொடி ஆழ்வாரும் தான் இவ்வுலகில் பட்ட துன்பங்களிலிருந்து
இறைவன் தன்னை விடுவிக்க 'போதரே என்று என் புந்தியுள்புகுந்தே  'என்று
திருமாலையில் கூறியுள்ளார்
.
இறைவன் நம் புத்தியில் புகுந்து நம்மை நல்வழியில்  அழைத்து செல்லுமாறு வேண்டுவோம்.


சிந்தனைக்கு சில வரிகள்

சிந்தனைக்கு சில வரிகள்

அனைத்தையும் அவனிடம் விட்டுவிடு
உன் உள்ளிருக்கும் அவன் ஆணைப்படி செயல்படு

உள்ளிருந்து உன்னை இயக்குபவன் அவனன்றோ
எல்லாம் உன்னால்தான் என் நீ நினைப்பது தவறன்றோ

அன்போடு அனைவரின் நலம் நாடு
அதுவே அவனுக்கு நீ செய்யும் வழிபாடு

கண்ணால் காண்பதனைத்தும் அவன் வடிவே
உன் கண்ணில் காணும் ஒளியாய் இருப்பதும் அவனருளே

ஒன்றை ஆக்குவதும் அழிப்பதும் அவன் லீலை
அது ஏன் என்று நீ ஆராய்வது வீண் வேலை 

சாத்திரங்கள் எல்லாம் அவன் புகழ் பாடும்
நீ அவனை தோத்திரம் செய்தால் அருள் கூடும்

நல்லோரின் கூட்டுறவை நாடிடுவாய்
தீயோரின் கூட்டுறவை விட்டு ஓடிடுவாய்

பசித்தோருக்கு உணவிட்டால் அவன் மகிழ்ந்திடுவான்
உன்னை பாசத்தோடு பக்கத்தில் நின்று காத்திடுவான்

அரிதாய் கிடைத்த மனித பிறவி
அவனை அறியாது போனால் கிடைக்கும் இழிபிறவி
உலக பற்றுகளை ஒதுக்கி இதை அறிந்தே
தவம் செய்வான்  துறவி

கடமைகளை தவறாமல் காலத்தோடு செய்திடுவாய்
கண நேரமும் கடவுளை மறவாமல் வாழ்ந்திடுவாய்
காலமெல்லாம் கவலையற்று வாழ
அவன் அருள் செய்திடுவான் 



Tuesday, December 13, 2011

நாம் செய்யும் அனைத்து செயல்களிலும் நான் என்ற அகந்தையின் சாயம் ஒட்டிக்கொண்டு உண்மையை அறியவிடாமல் அது தடுத்துகொண்டிருக்கும்

மனம் என்று ஒன்றிருக்கும்வரை
எண்ணங்கள் இருக்கும்
எண்ணங்கள் இருக்கும்வரை
செயல்கள் இருக்கும்
செயல்கள் இருக்கும்வரை
விளைவுகள் இருக்கும்
விளைவுகள் இருக்கும்வரை வாழ்க்கையில்
இன்ப துன்பங்கள் இருந்துகொண்டே இருக்கும்
இன்பதுன்பங்கள் இருக்கும்வரை
மனதில் அமைதி இருக்காது

நமக்கு இன்பமும் துன்பத்தை தருகிறது
துன்பமும் இன்பத்தை தருகிறது
இன்பமும் துன்பமும் நிலையானதாக இல்லை
இரண்டும் மாறி மாறி வந்து நம்மை
ஆட்டி வைக்கின்றன
இதனால் மனித உறவுகளில் உரசல்கள்,
விரிசல்கள் ஏற்படுகின்றன

இன்பத்திற்கும் துன்பத்திற்கும்
அப்பாற்பட்ட ஒரு இன்பம் இருக்கிறது
அது எங்கே கிடைக்கும்?
அதை எப்படி அடைவது?
அந்த நிலையான இன்பத்தை நாடிதான்
ஒவ்வொரு மனித உயிரும் வாழ்நாள்
முழுவதும் அலைந்து கொண்டிருக்கின்றன
அதை நாம் அடையும் வரை
நம் தேடல் தொடர்ந்துகொண்டே இருக்கும்

எதை தேடுவது?
எங்கே தேடுவது?
யாரிடம் தேடுவது?
எப்படி தேடுவது?
அந்த தேடலில்தான் எவ்வளவு குறுக்கீடுகள்
எவ்வளவு ஏமாற்றங்கள்
எவ்வளவு இழப்புக்கள்
புற உலகில் அதை தேடி அலைந்து
மனிதர்கள் வாழ்நாள் வீணாகிவிடுகிறது
உண்மையில் அது, அந்த நிலையானஇன்பம்
நமக்குள் ஒளிந்துகொண்டிருக்கிறது
என்பதை அறியும்போதுதான்
நமக்கு உண்மை விளங்குகிறது
அப்போதுதான் நமக்குள் இருப்பதுதான்
அனைத்திற்குள்ளும் இருக்கிறது
என்ற அறிவு ஏற்படுகிறது
அப்போதுதான் இந்த உலகத்தின் மீதும்
அனைத்து உயிரினங்களின் மீதும்
உண்மையான அன்பு ஏற்படுகிறது

அன்பிருக்கும் இடத்தில எதிர்பார்ப்புகள் இல்லை
எதிர்பார்ப்புகள் இல்லாமையால் ஏமாற்றங்கள் இல்லை
ஏமாற்றம்  இல்லையேல் மன அழுத்தம் இல்லை
மனம் எப்போதும் அமைதி நிலையில் இருக்கிறது
இவ்வுலக வாழ்வே இனிக்கிறது
மரணத்திற்கு பிறகும் நம்மை தொடர்ந்து வரும்
உயிரின் உண்மை நிலை அதுவே
அதை அடைந்த பிறகு மனது அமைதியடைந்து
வேறு எதையும் நாடுவதில்லை

அந்நிலையை அடையும் வரைக்கும்
நாம் செய்யும் அனைத்து செயல்களிலும்
நான் என்ற அகந்தையின் சாயம் ஒட்டிக்கொண்டு
உண்மையை அறியவிடாமல் அது தடுத்துகொண்டிருக்கும்

நமக்கு இறைவன் அனைத்தையும் அளித்திருந்தாலும்
அனைத்தையும் அவன்தான் நம் உள்ளிருந்து  இயக்குகிறான்
என்ற தெளிவு வரும்வரை இந்த நான் என்ற எண்ணம்
நம்மை விட்டு நீங்க வாய்ப்பில்லை  

மிக குறுகிய காலமே இந்த உலகில் வாழ போகும் நாம் இருக்கும் காலம் வரை பிறருடன் அன்பாக, நல்ல உறவை பேணி திருப்தியாக மன அமைதியுடன் வாழ முயற்சி செய்ய வேண்டும்

என் உள்ளம் வெள்ளை என்றால் என்ன பொருள்?
சிலர் சொல்வார்கள்
உண்மையை உள்ளபடி உரைப்பவர்கள்
அப்படி உரைப்பதால் ஏற்படும் விளைவுகளை பற்றி
சிந்திக்காமலே
 
சிலர் பொருள் கொள்ளுவார்கள்
குழந்தை போன்ற உள்ளம் கொண்டவர்கள்
குழந்தைகள் உடனே அனைத்தையும் மறந்துவிட்டு
உடனே நடப்பதை ஏற்றுகொள்ளும்

அது குழந்தையாக இருக்கும்போது சரியாக வரலாம்
வளர்ந்த பிறகு அந்த குணம் சரிப்படுமா?
நமக்கு கெடுதலை செய்தவர்களை பழி
வாங்காமல் எப்படி இருக்க முடியும் ?
நம்மை வெறுத்து ஒதுக்கியவர்கள் மீது
அவர்கள் செயலை மறந்து எப்படி நாம் அன்பு
காட்ட முடியும்?

இப்படியாக சிந்தித்து கொண்டு
போனால் வாழ்வில் போராட்டங்களுக்கும்
துன்பங்களுக்கும்
நம் முடிவு வரை முடிவில்லை

பழி வாங்கும் எண்ணம் நீங்க வில்லை என்றால்
அது அடுத்த தலைமுறைக்கும் தொடர்ந்து
போய்கொண்டிருக்கும்

சரி. இனி தலைப்புக்கு வருவோம்

திரைப்படம் காட்டப்படும் திரை வெண்மையாக இருக்கிறது
படம் காட்டப்படும்போது பல வண்ணங்களில்
அது ஜொலித்தாலும் படம் காட்டி முடிந்த பிறகு
அது வெண்மையாகவே காட்சியளிக்கிறது

ஒவ்வொருமுறை காட்டப்பட்ட படங்களின் வண்ணங்களை
அது அப்படியே வைத்திருந்தால் மீண்டும் மீண்டும் படம்
அதில் பார்க்க முடியுமா?
அல்லது படங்கள் நன்றாகதான் தெரியுமா?

அதைபோல்தான் நம்முடைய மனமும் ஒரு வெள்ளை திரை
நாம் ஒவ்வொருமுறை கண் விழித்து படம் பார்க்கிறோம்
தூங்கும்வரை அப்போது நடைபெறும் அனைத்து உணர்ச்சிகளும் திரையிலேயே பசை போல் ஒட்டிகொள்கின்றன 
அவை கோபமோ,தாபமோ , துக்கமோ,
மகிழ்ச்சியோ நம் மனத்திரையில் தங்கிவிடுவதால் நம்மால்
நம் வாழ்க்கை படங்களை சரியாக காண விடாமல் அமைதியின்றி தவிக்கின்றோம்

எனவே அடுத்த முறை படம் கண்டு மகிழ வேண்டுமென்றால்
நம் மனத்திரையை வெள்ளையாக  வைத்துகொள்வோம்.
ஏற்கெனவே கண்ட காட்சிகளை மறந்துவிட்டு
தினமும் புதிய புதிய காட்சிகளை கண்டு மகிழ்வோம்

இரவு உறங்கியவுடன் நாம் இறந்து மீண்டும் விழிக்கும்போது
புதிய பிறவி எடுப்பதால் முக்கியமாக பழைய தீய  நினைவுகளை மறந்து
தினமும் புதிய சிந்தனைகளுடன் இன்பமான வாழ்வை எதிர்கொள்வோம்

அதற்க்கு மிக எளிய வழி நாம் யாரை சந்தித்தாலும்
அவர்களை பற்றிய எண்ணங்கள் நம் மனதில் எழாது
அவரை அப்போதுதான் முதல்முதலாக சந்திப்பதாக கருதி
அவருடன் நல்லுறவை பேண முயற்சிக்கவேண்டும்
.
மிக குறுகிய காலமே இந்த உலகில் வாழ போகும் நாம்
இருக்கும் காலம் வரை பிறருடன் அன்பாக,
நல்ல உறவை பேணி திருப்தியாக மன அமைதியுடன்
வாழ முயற்சி செய்ய வேண்டும்
இந்த அணுகுமுறை நிச்சயம் பலன் தரும்



Sunday, December 11, 2011

பிறந்தால் இறந்துதான் ஆகவேண்டும் இறந்தால் பிறந்துதான் ஆகவேண்டும்

ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாய்?
இல்லை ஒரு  பிள்ளை என்று ஏங்குவோர் பலரிருக்க
இங்கு வந்து ஏன் பிறந்தாய் செல்ல மகனே?
நான் பிறந்த காரணத்தை நானே அறியுமுன்னே
இங்கு வந்து ஏன் பிறந்தாய் மகனே
என்ற வரிகளை முந்தைய தலைமுறை மக்களுக்கு
தெரியாமலிருக்க முடியாது

அதே நேரத்தில் கண்ணன் பிறந்தான்
எங்கள் மன்னன் பிறந்தான் என்று
உலகமே கொண்டாடும் பிறப்பும் இவ்வுலகில் உண்டு

பெண் சிசு என தெரிந்தால் சுற்றதிர்ற்கு அஞ்சி
கருவிலேயே அழிக்கும் பெண்கள் ஏராளம்
இன்று உலகெங்கும் அங்கு இங்கு எனாதபடி
பெண்களை கொடுமைபடுத்தி அவர்கள் வாழ்வை
கேள்விக்குறியாக்கும் நவீன காம காம கொடூரன்களின்
பார்வையிலிருந்து தப்பி நல்லதோர் வாழ்க்கை
பெண்ணினத்திற்கு அமைவது இன்றைக்கு கேள்விக்குறி

வறுமையினால் வாழ்க்கையை தொலைக்கும்
 பெண்கள் ஒருபுறமிருக்க
வளமான வாழ்க்கையினால் மோகம் தலைக்கேறி
வாழ்க்கையை தொலைக்கும் பெண்கள் ஏராளம்

இவ்வளவு புதை குழிகள் இருந்தும் கடவுளை தேடி
அலைகின்ற மக்களும்  இவ்வுலகில் இருக்கத்தான்
செய்கின்றனர்

உண்மையை தேடி பொய்களிடம் அடைக்கலம்
புகும் கூட்டம் தன இன்று அதிகம்
உண்மை எது பொய் எது என்று பகுத்தறிவது
மிக கடினம்

எல்லாவற்றிற்கும் ஒரு காரணம் உண்டு
காரணமில்லாமல் எந்த செயலும் இல்லை
நம் பிறப்புக்கும் நாம் முற்பிறப்பில் செய்த
நல்வினை,தீவினைகளே காரணம்

இப்பிறப்பிலாவது நல்லவர்களோடு சேர்ந்து
நல்லதை எண்ணி,நல்லவைகளை செய்து
நலம் பெறுவோம்
.
பிறந்தால் இறந்துதான் ஆகவேண்டும்
இறந்தால் பிறந்துதான் ஆகவேண்டும்

இந்த வட்டத்திலிருந்து விடுபட வேண்டுமானால்
இறைவனிடம் எந்த நிலையிலும் அசைக்கமுடியாத
நம்பிக்கையும் முயற்சியும் வேண்டும்
அதை அந்த இறைவன்தான் நமக்கு தரவேண்டும்.



திருந்திய வாழ்க்கை அமிழ்தினும் இனிது என்றார்

இன்று உலகத்தில் தீய செயல் புரிபவர்களின்
எண்ணிக்கை பெருகிவிட்ட்டது

பிறரை துன்புறுத்தும்,வஞ்சிக்கும்,சுரண்டும்,
ஏமாற்றும் குணங்கள் ஒரு தனி மனிதனின் மனதில் தொடங்கி
,குடும்பத்தில் பரவி ,இன்று உலக அளவில் தீரா வியாதியாய்
மனித குலத்தை நிம்மதியாக வாழ முடியாமல் செய்துகொண்டிருக்கிறது
.
அவ்வப்போது தீயவர்கள்  அழிக்கபட்டாலும் அவர்கள் விட்டு சென்ற பணிகள்
தயவில்லாமல் நடந்துகொண்டே இருக்கின்றன என்ன சிகிச்சை அளித்தாலும்
சாகா வரம் பெற்ற முற்றிய  புற்று நோய் செல்கள் போல
.
நாளுக்கு நாள் விதவிதமான தீய செயல்கள் இவர்கள் மூலம் அரங்கேறிகொண்டிருக்கின்றன
.மக்களை ஆட்சி செய்யும் கூடாரத்திலும்
தீயவர்கள் நிறைந்திருப்பதால் அவர்கள் ஆளும் நாட்டு மக்களுக்கும் நிம்மதியில்லை,பாதுகாப்பில்லை,வசதியான வாழ்க்கையுமில்லை
.
வளம் கொழிக்கும் நாடுகள் வளம் குறைந்த நாடு மக்களிடையே சண்டைகளை மூட்டி அவைகளை ஒருவொருக்கொருவர் அழித்துக்கொண்டு சாவதை கண்டு ஆனந்தப்படும் வக்கிர புத்தியே மேலோங்கிகொண்டிருக்கிறது

இதற்க்கு மூல காரணம் இன்று மக்களிடையே ஒழுக்கம் இல்லை,நேர்மை இல்லை,அன்பில்லை,நல்லொதொரு பண்பு எதுவும் இல்லை
.
சுயநலமும்,பொறாமையும்,போட்டி மனப்பான்மையும்,பெருகிவிட்டதால்
மனித நேயமே அற்றுபோயவிட்டது

எண்ணங்கள் நல்லவையோ அல்லது தீயவையோ அவைகள் அழிவதில்லை
.
ஒரு கொடியவன் அழிக்கபட்டால் அவன் உடல்தான் அழிகிறதே தவிர அவன் மனதில் உள்ள தீய எண்ணங்கள் அழிவதில்லை

அதனால்தான் அவன் மீண்டும் இவ்வுலகில் வேறொரு உருவில் தோன்றி மக்களை துன்புறுத்துகிறான்.

எனவேதான் ஒரு மனிதன் இறப்பதற்கு முன் தன்னிடம் உள்ள தீய குணங்களை விட்டுவிடவேண்டும் திருந்தி வாழ வேண்டும்.
 .
இறக்கும்போது தூய மனதுடன் இந்த உடலை விட்டால் அவனால் இந்த உலகத்திற்கு மீண்டும் துன்பங்கள் நிகழ வாய்ப்பில்லை
தவறுகள் செய்வது மனித இயல்பு

அதனால்தான் திருந்திய  வாழ்க்கை
அமிழ்தினும் இனிது என்றார் நம் முன்னோர். .
.  

Saturday, December 10, 2011

வாழ்க்கை வாழ்வதற்கே! ஆம் அதுவும் இன்பமாக வாழ்வதற்கே

வாழ்க்கை வாழ்வதற்கே!
ஆம் அதுவும் இன்பமாக வாழ்வதற்கே

இன்பமாக இருப்பதுதான் நம் ஆன்மாவின் இயல்பு
ஆனால் நடப்பது என்ன?

இறைவன் நாம் அனைவரும் இவ்வுலகத்தில் இருக்கும் வரை
சுகமாக,மகிழ்ச்சியாக வாழவே அனைத்து வசதிகளையும்
இலவசமாகவே வழங்கியுள்ளான்

ஆனால் இன்று உலகில் பெரும்பாலானோர் இறைவன்
அனைவருக்கும் வழங்கிய வசதிகளை தங்களுக்கு
மட்டும்தான் என கருதி சுயநல எண்ணத்துடன் பிறருக்கு
சேரவேண்டிய தனைத்தையும் தங்கள் ஆதிக்கத்தை
செலுத்தி அபகரித்துகொண்டுவிட்டனர்

அதனால் கோடிகணக்கான மக்கள்
அடிப்படை வசதிகள்,சுகங்கள் உரிமைகளின்றி துன்பபட்டுகொண்டிருக்கின்றனர்
.
தன சுகம்,சுயனலதிர்க்காக பிறரை துன்புறுத்தும்
குணம் கொண்டவர்கள் அரக்கர்கள்

ஆனால் எந்த காரணமும் இல்லாமல்
 பிறரை துன்புறுத்தி கொடுமை செய்து
கொலை செய்பவர்கள் ராஷதர்கள்

இவர்களை எதிர்த்து அழிக்க வேண்டுமென்றால்
 மக்களிடையே ஒற்றுமை வேண்டும்

ஜாதி,மதம்,மொழி,இனம்,நிறம்,ஏழை,பணக்காரன்,
என பல பிரிவுகளாக பிரிந்து,அறியாமைக்கும்,
மூட நம்பிக்கைகளில்,மது போதை,சிந்திக்கும்  திறமையின்மை ,அவநம்பிக்கை போன்ற தீய  குணங்களால் ஆட்பட்டு
மதி மயங்கி உள்ளவர்களால் என்ன செய்ய முடியும்?

உலகெங்கும் அவர்களின் போராட்டங்கள் நசுக்கபடுகின்றன.ஒடுக்கபடுகின்றன

இந்நிலையில் அனைவருக்கும் தங்களை
 காப்பாற்றிக்கொள்ள இருக்கும் ஒரே வழி
இறைவனின் பாதங்களை முழுமையாக சரணடைவதுதான்
.
பாற்கடலில்,பள்ளி கொண்ட அரங்கன்,குரங்கனோடு சேர்ந்துகொண்டு
ராம பிரானாக அவதரித்து அரக்கர்களை அழித்து நல்ல நிர்வாகத்தை மக்கள்
வாழ அளித்தான்

அவன் பதங்களை சரணடைந்தால்
 நம் அனைத்து துன்பங்களும் முடிவுக்கு வரும்.
ராமன் பரப்ரம்ம ஸ்வரூபம்.
அனைத்து கடவுள்களும் அவனின்
வெவேறு வடிவங்களே என்பதை உணர வேண்டும்.


பற்றுதான் அனைத்து துன்பங்களுக்கும் மூல காரணம்

கடவுள் நம்பிக்கையுள்ளவர்கள்
பல வழிகளில் கடவுளை தேடுகிறார்கள்
பலர் தாம் வாழும் இந்த உலகில்  தேடுகிறார்கள்.
சிலர் புத்தகங்களில் ,சிலர் தம் உள்ளத்தில்,
சிலர் மனிதர்களிடத்தில் என தேடல் பலவாறாக உள்ளது.
ஆனால் வெற்றியடைவது கோடியில் ஒருவரே.
அப்படிப்பட்ட சிலர் அந்த இன்பத்தில் மூழ்கி
அமைதியாக இருந்து விடுகின்றனர்.
ஒரு சிலர் அந்த அனுபவத்தை
மற்றவருக்கு சொல்ல முற்படுகின்றனர்.
ஆனால் உலக மாயையில் மூழ்கியிருக்கும் மக்கள்
அவர்கள் கூறுவதை செவி மடுப்பது கிடையாது.
தங்களின் கோரிக்கைகள் நிறைவேற
ஏதாவது மார்க்கம் கோரி அவர்களை
துன்புறுத்துவதால் அவர்கள் வெறுப்படைந்து
மக்கள் முன் தோன்றாமல் தங்களை
மறைத்துக்கொண்டு வாழுகின்றனர்.
உலக வாழ்வோடு ஒட்டாமல்
உலக கடமைகளை பற்றில்லாமல் செய்து 
இறைவனை தேடுவது பகவத் கீதையில்
பகவான் காட்டிய சுலபமான வழி.
பற்றுதான் அனைத்து துன்பங்களுக்கும்
மூல காரணம் .
ஒரு பொருள்,ஒரு மனிதர் மீது
பற்று வைக்கும்போதுதான்
,விருப்பு வெறுப்புகள்,ஏமாற்றங்கள்,
துன்பங்கள் ஏற்படுகின்றன
அதனால்தான் பாவ புண்ணியங்கள்
விளைகின்றன
அவைகள் சேர சேர பிறவிகளின்
எண்ணிக்கை கூடி கொண்டே போகிறது
இதை உணர்ந்து கொண்டு
ஆன்மாவை தேடும்  பயணத்தில்
எச்சரிக்கையாக இருக்க வேண்டும் 

Friday, December 9, 2011

சுத்தம்தான் தான் கடவுள்

கடவுள் பற்றிய இலக்கியங்களின் உண்மை பொருளுணராது 
அவைகளை பழித்தும்,திரித்தும் ,இழிவு படுத்தியும் 
மக்களின் மனதில் கடவுளை பற்றிய காலம் காலமாக 
இருந்த நம்பிக்கைகளை அகற்ற கடும் முயற்சிகளை 
செய்தனர் நாத்திகவாதிகள் .
ஆனால் இன்று ஆன்மிகம் கரை புரண்டோடுகிறது
லட்சகணக்கான மக்கள் விரதம் இருக்கின்றனர்,
ஆலயங்களுக்கு செல்கின்றனர்.
வழிபாடுகள் செய்கின்றனர்.
நாத்திகம் பேசும் பகுதறிவாதிகளின் குடும்பத்தினரே அவர்களின் 
பேச்சை கேட்காமல் ஆன்மீகத்தை நாடுகின்றனர்.
ஒரு மனிதன் மற்றொரு மனிதன் மீது ஆதிக்கம் 
செலுத்துவதும்,பிறரை இழிவுபடுத்துவதும் 
ஆன்மீகவாதிகளை விட இந்த பகுத்தறிவு பேசும்
கூட்டத்தினரிடையே அதிகம் என்பதை சாமானிய
மக்கள் நன்கு  அறிவர்
இன்று அவர்கள் கையில் அதிகாரம் இருப்பதால் 
அவர்களிடம் பிழைப்புக்காக நாத்திக வேஷம் 
போடுகின்றனரே  தவிர 
உண்மையில் அல்ல. 
கடந்த காலங்களில் கடவுள் மீது பய உணர்வு இருந்ததால்தான்
நதிகள்,நீர் நிலைகள்,ஆலயங்கள் ,பொது  இடங்கள் சுத்தமாக 
இருந்தன
.நாத்திகம் பேசிய நயவஞ்சகர்களால் இன்று 
தெய்வமாக போற்றி வணங்கப்பட்ட நதிகளில்,
இறைச்சி கழிவுகள்,சாய கழிவுகள்,மனித மிருக கழிவுகள் ,
ரசாயன கழிவுகள் அனைத்தையும் விட்டு நாசமாக்கிவிட்டனர்
.
தங்கள் நதிகளிளிருந்துதான் குடி நீரை பெற்று வாழ்கிறோம் என்பதை 
சிந்தித்து பார்ப்பதேயில்லை .
ஏரிக்கரைகள்,குளக்கரைகள் நதிகரைகள்.கடற்கரைகள் 
,காலியாக உள்ள இடங்கள் கட்டிடங்கள்,
சுற்றுலாதலங்கள்,ஆலய சுற்றுபுரங்கள் 
 என ஒரு இடம்கூட மிச்சம் வைப்பதே இல்லை 
எல்லாவற்றிலும், சிறுநீர்கழித்தும் ,மலம் கழித்தும்,
குப்பைகளை கொட்டியும் அசுத்தம் செய்வதையே
தங்கள் இயல்பாக கொண்டுவிட்டனர்.
அரசுகள் கழிப்பிடங்கள் கட்டி தந்தாலும்
முறையாக  பயன்படுத்துவதில்லை.
மேலும் அரசும் அவைகளை தொடர்ந்து பராமரிப்பதில்லை. 
சுத்தம்தான் தான் கடவுள் 
அதை புறக்கணித்துவிட்டு மற்ற புற வழிபாடுகள் 
அனைத்தும் அனுசரிப்பது நம்மை நாமே 
ஏமாற்றி கொள்ளும் செயலாகும் 
இயற்கையை அசிங்கபடுத்தும் இந்த மூடர்களுக்கு
இறைவன் அருள் கிடைக்கும் என்பது கானல் நீரே .

Thursday, December 8, 2011

நிலையற்ற உடலின் துணை கொண்டு நிலையான இறைஇன்பத்தை அடையத்தான் இந்த உடல் நமக்கு அளிக்கப்பட்டுள்ளது

நமக்கு முடிவு நெருங்கிவிட்டது என 
உணர்த்த தலை முடி நரைக்கும்
ஆனால் அதை உணராது இன்று மக்கள்
நரை மயிருக்கு சாயம் பூசி 
முதுமைகோலத்தை மறைக்க 
பார்க்கிறார்கள் 
hair will die at any moment 
அழியபோகும் அந்த மயிருக்கு 
hair dye பூசுவதிலேயே பெரும் பணத்தை 
செலவழிக்கிறார்கள் 
இருந்தாலும் சில நாட்களுக்கு பிறகு சாயம் வெளுத்துவிடுகிறது 
ஒரு கால கட்டத்தில் ஒரு சாயமும் பயன்படுவதில்லை 
இன்னும் சிலர் தலை முழுவதும் வழுக்கை ஆகிய பின்னும்
விக் வைத்துகொண்டு திரிகின்றனர்
பணம் படைத்தவர்கள் மண்டையில் மயிர் முளைக்க 
பலவிதமான சிகிச்சைகளை மேற்கொள்ளுகின்றனர்
மயிரை அறுவை சிகிச்சை மூலம் தலையில் நடும்
படலமும் அரங்கேறிகொண்டிருக்கிறது 
இப்படியாக உடலின் பழுதடைந்த ஒவ்வொரு 
பகுதியையும் சீர்படுத்த காலத்தையும் பணத்தையும் 
வாழ்நாள் முழுவதையும் வீணடிக்கின்றனர்
இவர்களை என்னவென்று சொல்வது?
பிறர் தம்மை மெச்ச வேண்டும் என்று இவர்கள்
இவ்வாறு செய்கின்றனர்
நிலையற்ற  உடலின் துணை கொண்டு நிலையான 
இறைஇன்பத்தை  அடையத்தான் 
இந்த உடல் நமக்கு அளிக்கப்பட்டுள்ளது
என்று இவர்களிடம் ஆன்மிகம் பற்றி பேசினால்
நம்மை பயித்தியக்காரர்கள் என்றும் ,
இவ்வுலக வாழ்க்கை எல்லா சுகங்களையும் 
அனுபவிப்பதற்கே என்றும் திமிராக பேசுகின்றனர்
ஆனால் வாழ்க்கையில் எதிர்பாராத துன்பங்களோ,
தீர்க்க முடியாத நோய்களோ,இழப்புகளோ 
ஏற்பட்ட பின்புதான் இவர்களுக்கு கடவுளை 
பற்றிய நினைப்பே வரும்
ஆனால் அப்போதும்கூட திருந்தாதவர் 
பலர் உண்டு. இவ்வுலகில் 


உயிரை ஏன் வளர்க்க வேண்டும் ?




கிடைத்தற்க்கரிய இந்த மனித பிறவி கிடைத்தும்
இந்த மனித குலம் பிறவியின் நோக்கத்தை மறந்து
வாழ்நாள் முழுவதும் கிடைத்ததைஎல்லாம்
வயிற்றுக்குள் தள்ளுவதுதான் தன கடமையாக
நினைத்துக்கொண்டு மடமையுடன்
செயல்பட்டுகொண்டிருப்பது
வேதனைக்குரிய விஷயம்

ஒருநாள் பிணமாக போகும் மனிதன் பிற உயிர்களை கொன்று
அவைகளை விதவிதமாக சமைத்து தன உடலை கொழுக்க வைக்கின்றான்.
கொழுத்த உடல் பருத்து நோய்களின் இருப்பிடமாகி மடிந்து போய்
பருந்துகளுக்கும்,நரிகளுக்கும்,நாய்களுக்கும்,நெருப்புக்கும்  இரையாகி
போவதை தினம் தினம் கண்ணுற்றும் அவன் மனதில் எந்த சலனமும் ஏற்படுவதில்லை

உடம்பார் அழியின் உயிரார் அழிவர் .
உடலை வளர்த்தேன் உயிரை வளர்த்தேனே
என்றார் திருமூலர்

உயிர் அழியாமலிருக்க உடலை வளர்க்கத்தானே சொன்னார்
காண்பதனைத்தையும் தின்று கொழுக்க அல்லவே

உடலை வளர்த்தால் மட்டும் போதாது
உயிரையும் வளர்க்க வேண்டும் என்று சொன்னதை
மனிதர்கள் ஏன் மறந்தனர்?

உயிரை ஏன் வளர்க்க வேண்டும் ?

இந்த ஊனுடலில் உத்தமன் கோயில் கொண்டுள்ளான்
என்பதை அறிந்து தெளிந்ததை நமக்கெல்லாம்
புரியும்படி  விளக்கியுள்ளார்

அந்த உயிரின் துணை கொண்டு இந்த உடலில் உறைந்து நம்மையும்
இந்த உலகனைத்தையும் இயக்குகின்ற ஒலி மற்றும்  ஒளி வடிவான
இறைவனை அறிந்து கொள்ளவேண்டும் என்பதற்காக
புற இருள் நீங்க உலகில் தீபம் ஏற்றி வழிபடுதலும்
அக ஒளியான இறைவனை காண சத்தியத்தையும்
கடைபிடிக்க சொன்னார்கள் ஆன்றோர்

கார்த்திகை தீப திருநாளில் இந்த சிந்தனையை மனதில் நிறுத்தி
கிடைத்தற்கரிய இப்பிறவியை பயனுள்ளதாக ஆக்குவோம்

வயிற்றை மட்டும் நிரப்பும் பணியை மட்டும் எந்நேரமும் செய்யாமல்
மணிவயிறு வாய்த்த கோசலை மகனான ராம நாமத்தை
உச்சரித்து உய்வடைவோமாக 


Sunday, December 4, 2011

என்று மறையும் இந்த விரோத போக்கு?


என்று மறையும்  இந்த விரோத போக்கு?
முஸ்லிம்கள் கிறிஸ்துவர்கள் மீது பகைமை கொண்டு 
அவர்களை பழி தீர்ப்பதும் அதற்க்கு பதிலாக கிறிஸ்துவர்கள் முஸ்லிம்கள் மீது பழி தீர்ப்பதும்
பல நூற்றாண்டுகளாக நடைபெறும் இந்த மோதல் போக்கில் அழிவது ஒன்றும் அறியாத அப்பாவி மக்களும் அந்த நாட்டு வளங்களும்
 போரினால் பெரிதும் பாதிக்கபடுபவர்கள் பெண்களும் குழந்தைகளுமே 

இரு மதத்தினரும் இந்து மதத்தை இழிவுபடுத்துவதையும் மக்களின்
அறியாமையையும் ஏழ்மையையும்,ஒரு சிலரின் சுயநலத்தையும் 
பயன்படுத்தி மதம் மாற்றம் செய்வதையும் சமீப காலமாக 
அதிகரித்து வருவதும் அதனால் இந்திய நாட்டில் பல இடங்களில் 
சமூக  அமைதி குறைந்து வருவதையும் நாம் பார்க்கின்றோம் 

மதத்தின் பெயரால் இன்று மக்களிடையே ஒருவர் மீது ஒருவர் அவநம்பிக்கையும் ,அவர்களின் மனதில் மிருக உணர்ச்சியை தூண்டிவரும் 
ஒரு சில விஷமிகள் ஒற்றுமையாய் வாழும் மக்கள் ஒருவொருக்கொருவர் 
அடித்துக்கொண்டு அழிவதற்கு வழி வகுப்பதும்  தினசரி நிகழ்வாகிவிட்டது 

கடவுள் நம்பிக்கையில்லா சீன அரசும் அஹிம்சையை போதிக்கும் புத்த மதத்தை சார்ந்த திபெத்தை ஆக்கிரமித்து அங்குள்ள மக்களை கொடுமைபடுத்தியதால்  லட்சகணக்கில் அகதிகளாக வேறு நாடுகளில் அந்நாட்டு மக்கள் தஞ்சம் புகுந்துள்ளனர் 

இன்று அநேகமாக உலகில் எல்லா நாடுகளிலும் உள்ள வெவ்வேறு இனங்களை சேர்ந்த தலைவர்கள் மற்ற இனங்களை கொன்று துன்புறுத்தி அழித்து இன்பம் காண்பது தொடர்கதையாகிவிட்டது 

விலங்குகளை போல் அறிவில்லாமல் ,ஒருவொருகொருவர் அன்பு 
பாராட்டாமல் சுயநலத்துடன் பிறரை கொடுமைபடுத்தி,பிறரை வஞ்சித்து 
வாழ்க்கை நடத்தவா இந்த உலகை இறைவன் படைத்தான்?

நாம் கேட்காமலேயே கோடிகணக்கான இன்பங்களை இறைவன் அள்ளி அள்ளி தந்தது மானிடம் முழுவதும் அன்போடு ஒருவொருகொருவர் உதவி செய்துகொண்டு மகிழ்வோடு வாழவே 

ஆனால் இங்கு நடப்பதை நினைத்தால் நெஞ்சம் பதறுகிறது
மனதில் இரக்கமுள்ளவன் உறங்கமுடியவில்லை 
உருக்கமுள்ளவன் இறைவன் திருவடிகளிடம் இந்நிலை மாற பிரார்த்தனை செய்வதை தவிர வேறு வழியில்லை 

அன்பர்களே அனைவரும் இந்நிலை மாற தினமும் காலையில் எழும்போது 
தீய சக்திகளின் மனதில் நல்ல எண்ணங்கள் தோன்றி பகைமையற்ற  பொழுதாக தினம் விடிய வேண்டும் என்று ஒரு கணம் இறைவனிடம் இந்த உலகிற்காக மன்றாடுங்கள்

அதில்தான் அனைவரும் நலமும் அடங்கியுள்ளது. 

பாசம் என்பது சுயநலம் கொண்டது அன்பு சுயநலமற்றது

பாசம்தான் நம்மை பந்தத்தில் சிக்க வைக்கிறது 
பாசம்தான் நம்மை பாவம் செய்ய தூண்டுகிறது
பாசம்தான் நம் கண்களை மறைக்கிறது 
அப்படியானால் பாசம் இல்லாவிடில் இந்த உலகம் இயங்க முடியுமா?
ஒரு குழந்தைக்கு தாயின் பாசம் இல்லாவிடில் அது ஆரோக்கியமான 
மனநிலையில் வளரமுடியுமா என்றால் நிச்சயம் முடியாது
பாசம் தேவைதான்
ஆனால் அளவுக்கு மீறிய பாசம் பாசம் காட்டுபவரையும்
பாசத்திற்குஆளானவரையும் ஒரு சேர அழித்துவிடும் 
மகாபாரதத்தில் திருதராஷ்ட்ரன் தன் மகன் துரியோதன் மீது வைத்த 
அளவுகடந்த பாசத்தால் அவன் செய்த தீய செயல்கள் அனைத்தையும் கண்டும் காணாமல் இருந்ததால் அவன் தீயவனாகி தீய  செயல்களை செய்து 
அவனும் அவன் வம்சமும் அழிய காரணமாகிவிட்டான்
ராமாயணத்தில் கைகேயி தன் மகன் பரதனிடம் வைத்த 
பாசத்தால் தன் கணவனை இழந்தாள்,தன் மகனின் அன்பையும் இழந்தாள்
இப்படியாக ஒவ்வொரு குடும்பத்திலும்  இதுபோன்ற சம்பவங்கள்  
அரங்கேறிக்கொண்டுதான் இருக்கின்றன
ஆனால் யாரும் தங்களை திருத்திகொள்ளவில்லை என்பது வேதனைக்குரியது 
எல்லோரிடம் அன்பு காட்ட வேண்டும் 
பாசம் என்பது சுயநலம் கொண்டது 
அன்பு சுயநலமற்றது
இரண்டிற்கும் உள்ள வேறுபாட்டை புரிந்துகொண்டால் வாழ்க்கை இனிக்கும் 


Saturday, December 3, 2011

பொறுப்புகளுக்கு பயந்து ஓடிபோனால் பலபிறவிகளுக்கு பந்தம் நம்மை துரத்தும்

ஒரு கவிஞன் எழுதினான்
தந்தை தவறு செய்தான்
தாயும் இடம் கொடுத்தாள்
வந்து பிறந்து விட்டோம்
பந்தம் வளர்த்துவிட்டோம் என்று
பத்து மாத பந்தம் தாயுடன்
பிறக்கும்போதே பூர்வ ஜன்ம பந்தம்
பிறந்தவுடன் ஏற்ப்படும் பந்தங்கள் கணக்கற்றவை
உடலோடு தோன்றும் பந்தங்கள் மரணத்தோடு முடிவடைந்துவிடும்
ஆனால் மனதோடு தோன்றும் பந்தங்கள் என்றும் அழிவதில்லை
அவைகள் பிறவிதோறும் நம்மை தொடர்கின்றன
இதிலிருந்து எப்படி விடுபடுவது ?
உயிருடன் இருக்கும்போதே பந்தங்களை
உரிய முறையில் நீக்கிகொள்ள வேண்டும்
நம் கடமைகளை சரியாக செய்துவிட்டால்
ஒவ்வொரு பந்தமாக நம்மை விட்டு நீங்கிவிடும்
உதாரணத்திற்கு ஒரு தாய் தன் குழந்தையை
நன்றாக,ஒழுக்கமுள்ளவனாக வளர்க்க வேண்டும்
அதுபோல் ஒவ்வொருவரும் அவரவர்களின்
கடமைகளை சரியாக செய்து முடிக்க வேண்டும்
தவறினால் அதனால் ஏற்ப்படும் விளைவுகள்
மிகவும் மோசமாக இருக்கும் என்பதை
இன்றைய சமுதாயத்தில் பெருகிவிட்ட
ஒழுக்க சீர்கேடுகளும் குற்றங்களுமே இதற்க்கு சான்று
என்பதை அனைவரும் அறிந்ததே
அவ்வாறு செய்யாமல் பந்தங்களிலிருந்து
நம்மை விடுவித்துக்கொள்ள முடியாது
பொறுப்புகளுக்கு பயந்து ஓடிபோனால்
பலபிறவிகளுக்கு பந்தம் நம்மை துரத்தும்
நம்மிடமிருந்து பிரிக்கமுடியாத பந்தம் ஒன்று உண்டென்றால்
அது இறைவனுக்கும் நமக்கும் உள்ள உறவு
மற்ற பந்தங்கள் அனைத்தும் தற்காலிகமே
நாம் இறைவனை நினைத்துகொண்டே இருந்தால்
மற்ற பந்தங்களெல்லாம் தானே விலகிவிடும்.
இல்லாவிடில் இறைவன் நீக்கிடுவான்

அதிகம் படிக்க படிக்க வீண் கர்வமும் படிக்காதவர்களை அவமதிக்கும் குணமும் அதிகரிக்கும்

கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள் தம்மையும்
இந்த உலகையும் படைத்த ஒருவனை
இறைவன்என்று நம்புகிறார்கள்
இறை நம்பிக்கை இல்லாதவர்கள் என்று தங்களை
கூறிகொள்ளும் நாத்திகர்கள் கூட தங்களுக்கு
புரியாமல் இருக்கும் விஷயங்களை இயற்க்கை என்று
பெயர் சூட்டி மக்களை குழப்புகின்றனர்
அறிவுடையவன் அவனை பற்றி
அறிந்து கொள்ள பல சாத்திரங்களை
படித்து பல வழிகளில் இறைவனை புரிந்து
கொள்ள கடும் முயற்சிமேற்கொள்ளுகிறான்
அவனுக்கு குழப்பம்தான் முடிவில் மிஞ்சுகிறது
ஏனென்றால் ஒவ்வொன்றும்
ஒவ்வொரு வழியை கூறுகின்றன
ஒரு சாத்திரம் கூறும் வழியை மற்றொரு
சாத்திர ஆசிரியர் ஏற்றுகொள்ளமறுப்பதுடன்
கண்டிக்கவும் செய்கின்றார்
அதனால் ஒவ்வொரு முறையையும்
பரிசீலித்து பார்ப்பதிலேயே அவன் வாழ்க்கை முடிந்துவிடுகிறது
பலபுராணங்களை இயற்றிய வியாச பகவானே
மன அமைதியின்றி பகவான் கண்ணனின் லீலைகளை
விவரிக்கும் பக்தி இலக்கியத்தை இயற்றி
மன அமைதி அடைந்தார்.என்பது உண்மை
சாத்திரங்களை வாழ்நாள் முழுவதும் படித்துகொண்டிருப்பதில்
யாதொரு பயனும் இல்லை
அதிகம் படிக்க படிக்க வீண் கர்வமும்
படிக்காதவர்களை அவமதிக்கும் குணமும்
அதிகரிக்கும் அதனால் ஆன்மீகத்தில்
எந்த முன்னேற்றமும் ஏற்ப்படாது
ஏதாவதொரு வழியை பின்பற்றி நம்பிக்கையுடன்
மன உறுதியுடன் இறைவனை அடைவதற்கு
முயற்சி செய்பவனே வெற்றி காண்கிறான்
பாமரர்கள் அவன் மீது கள்ளமற்ற உள்ளத்துடன் பக்தி செய்து
மிக சுலபமாக அவன் அருளை பெற்றுவிடுகின்றனர்
என்பதற்கு ஏராளமான சான்றுகள் இருக்கின்றன

இந்த உலகத்தில் எதற்காக பிறக்கிறோம்?

இந்த உலகத்தில் எதற்காக பிறக்கிறோம்?
ஒரு குறிப்பிட்ட காலம் வாழ்ந்து மரிக்கிறோம்
இந்த இடைப்பட்ட காலத்தில்தான் எத்தனை குழப்பங்கள்
இறைவன் நாம் கேட்காமலேயே நமக்கு வேண்டியதனைதையும்
நாம் இன்பமாக வாழ அளித்துள்ளான்
ஆனால் நம் ஏன் அவன் தந்தஇன்பங்களை அனுபவிக்காமல்
துன்ப கடலில் மூழ்கி கிடக்கிறோம் ?
எல்லாம் இருந்தும் அதை முழு திருப்தியுடன்
அனுபவிக்காமல் இல்லாததை நினைத்து
ஏங்குகிறோம்?
நம்மால் ஒரு அளவிற்குமேல் எதையும்
அனுபவிக்கமுடியாது என்று தெரிந்தும்
பிறரின் சொத்துக்களை அபகரித்து ஏன்
மற்றவர்களின் மகிழ்ச்சியை கெடுக்கிறோம்?
எல்லாவற்றிற்கும் காரணம் நம்முடைய சுயநலம்தான்
அந்த தீய அக்குணம் நம்மை விட்டு போகும்வரை
நாமும் நிம்மதியாக இருக்கமுடியாது
மற்றவர்களும் நிம்மதியாக இருக்க முடியாது
இறைவா நீதான் உன் படைப்புகளுக்கு
நல்ல குணத்தை அருள வேண்டும்

Friday, December 2, 2011

உன் வேதனைக்கு பிறரை நிந்தனை செய்வதை நிறுத்து

இறைவா உன்னை நினைக்க முடியாமல்
துன்பங்களை அடுத்தடுத்து தருகிறாயே
துன்பங்களை மறக்க முடியவில்லை
துன்பங்களை பொறுத்துகொள்ளும் உடல் உறுதியோ
மன உறுதியோ இல்லை
ஒரு துன்பம் நீங்கினால் அடுத்த துன்பம்
வாசலில் தயாராக நிற்கிறது
உடலில் நோய் என்ற நிலை மாறி
உடலே நோயாக மாறிவிட்டதே
எல்லாம் இந்த உடல் மீது வைத்த
பற்றினால் விளைந்தது
இந்த உடலுக்குள் உள்ளத்திற்குள்
உறைந்து என்னை இயக்கும் உன் மீது
பற்று வைக்காமல் வந்த வினைதான் இது
மனமே இனியாவது உன் கவனத்தை
இறைவன் மீது செலுத்து
உன் துன்பங்கள் குறையும்
அவன் நாமத்தை உச்சரி
அந்த நாமத்தின் நாதத்தின் மீது
சிந்தனையை செலுத்து
உன் வேதனைக்கு பிறரை நிந்தனை
செய்வதை நிறுத்து
வேதனைகள் குறையும்
வாதனைகள் நீங்கும்
பயிரை காக்கும் மழை போல்
உயிருக்குயிரான இறைவன்
உண்மையான பக்தனை காப்பான். .

இறைவனிடம் அசைக்கமுடியாத மன உறுதி வேண்டும்

இறைவன் தன்னை அறிய முயற்சிப்பவர்களுக்கு
உதவ தயாராக காத்துகொண்டிருக்கிறான்
ஆனால் யாரும் அவனை கேட்பதுமில்லை,விரும்புவதுமில்லை
அவனிடம் செல்பவர்கள் எல்லாம் தங்கள் கோரிக்கைகளை
நிறைவேற்றித்தருமாறு மட்டுமே கேட்கின்றனர்
அதற்காக எத்தனை துன்பங்களை வேண்டுமானாலும்
அனுபவிக்க தயாராக இருக்கின்றனர்
அங்க பிரதத்ஷனம் செய்ய வேண்டுமா?
மொட்டை போட வேண்டுமா?
பல நூறு கிலோமீட்டர் நடந்து பாதயாத்திரை செல்ல வேண்டுமா?
ஆடு கோழி பலி கொடுக்க வேண்டுமா?
இல்லை நர பலி கொடுக்க வேண்டுமா?
தங்க தேர் இழுக்க வேண்டுமா?
யாகம்,ஹோமம் பண்ண வேண்டுமா?
கிரி வலம் வர வேண்டுமா?
இல்லை தீ மிதிக்க வேண்டுமா?
இல்லை உடல் முழுவதும் அலகு குத்திக்கொள்ள வேண்டுமா?
மண்டையில் தேங்காயை உடைத்துக்கொள்ள வேண்டுமா?
இன்னும் எத்தனையோ பிரார்த்தனைகள்
கணக்கே இல்லை
இவையெல்லாம் எதற்கு செய்ய வேண்டும்
நாம் செய்த பாவ புண்ணியத்திற்கு தகுந்தாற்போல்
நாம் ஏழையாகவோ,செல்வந்தனாகவோ இருக்கபோகிறோம்
நமக்கு நல்ல வாழ்க்கை அமைவதும் அதை பொறுத்ததே
பின் எதற்காக இத்தனை துன்பங்களை வேண்டி விரும்பி
ஏற்றுக்கொண்டு துன்பப்படவேண்டும்
நம் விருப்பம் நிறைவேறிவிட்டால்
அத்தோடு முடிவடைந்துவிடுமா நம் கோரிக்கைகள்?
ஒரு ஆசை முடியும் முன்பே அடுக்கடுக்காக ஏராளமான
ஆசைகள் வரிசையில் நிற்கின்றனவே?
ஆனால் இதையெல்லாம் யாரும் எண்ணி பார்ப்பதில்லை
அவர்களை சுற்றி இருப்பவர்களும் அவர்களை சிந்திக்க விடுவதில்லை
பொறுமையாக சிந்தித்தால் இவையெல்லாம் தேவையா என்று புரியும்
இந்த மாயையிலிருந்து விடுபடுவது மிக கடினம்
அதற்க்கு இறைவனிடம் அசைக்கமுடியாத மன உறுதி வேண்டும்
அப்போதுதான் வெற்றி கிடைக்கும்

புத்தகங்களில் இறைவனை தேடினால் கிடைப்பானா?

புத்தகங்களில் இறைவனை தேடினால் கிடைப்பானா?
நிச்சயம் கிடைக்க போவதில்லை
எவ்வளவு காலம்தான் புராணங்களையும் பக்தி நூல்களையும் படித்து கொண்டிருப்பது?
எவ்வளவு காலம்தான் சித்தர்களையும் சாமியார்களையும்
கடவுளை காட்டுவார்கள் என்று நம்பி வாழ்நாளை வீணாக்கி கொண்டிருப்பது?
யாரும் எதுவும் காட்டபோவதில்லை
எவ்வளவுதான் சாத்திரங்களை கற்றாலும்
ஒன்றும் கடவுளை பற்றி அறிந்துகொள்ளமுடியாது
மனம் அடங்காமல் ஒன்றும் தெளிவாகாது
சினம் அடங்காமல் உள்ளத்தில் அமைதி பிறக்காது
ஆசைகள் இருக்கும்வரை மனம் ஓடிக்கொண்டுதான் இருக்கும்
ஆசைகளை அழிக்கமுடியாது. முதலில் அதன் எண்ணிக்கையை குறைத்து
இறைவனிடம் மட்டும் ஆசையை வளர்த்துகொள்ளவேண்டும்
அந்த ஆசை பலன் கருதா பக்தியாக கனிய செய்ய வேண்டும்
இறைவனிடம் பக்தி ஒன்றினால் மட்டுமே
அவனை அடைய முடியும்
ஒன்பது விதமான பக்தியில் நண்பனாக,குழந்தையாக தந்தையாக என
அவரவருக்கு ஏற்ற ஒன்றை தேர்ந்தெடுத்து
இவ்வுலக கடமைகளை அந்த பாவனையுடன் ஆற்ற பழக வேண்டும்
அதை விடுத்து மலருக்கு மலர் தாவும் வண்டு போல்
எந்த முறையிலும் நிலைத்து நிற்காமல் போய்கொண்டிருந்தால்
எதுவும் சித்திக்காது
வாழ்நாளும் முடிந்துவிடும்

Thursday, December 1, 2011


இன்று யோகி ராம்சுரத்குமார் பிறந்தநாள்
காசியில் பிறந்து அண்ணாமலையில் சுற்றி திரிந்து
அங்கேயே அயிக்கியமான மகான்
ராம நாமத்தை ஜபித்தால் உயர்ந்த நிலையை அடையலாம்
என்று நம் கண் முன்னே நிரூபித்து காட்டியவர்
அவர் காட்டிய வழியில் சென்று நாமும் உய்வோம்