Wednesday, December 14, 2011

சிந்தனைக்கு சில வரிகள்

சிந்தனைக்கு சில வரிகள்

அனைத்தையும் அவனிடம் விட்டுவிடு
உன் உள்ளிருக்கும் அவன் ஆணைப்படி செயல்படு

உள்ளிருந்து உன்னை இயக்குபவன் அவனன்றோ
எல்லாம் உன்னால்தான் என் நீ நினைப்பது தவறன்றோ

அன்போடு அனைவரின் நலம் நாடு
அதுவே அவனுக்கு நீ செய்யும் வழிபாடு

கண்ணால் காண்பதனைத்தும் அவன் வடிவே
உன் கண்ணில் காணும் ஒளியாய் இருப்பதும் அவனருளே

ஒன்றை ஆக்குவதும் அழிப்பதும் அவன் லீலை
அது ஏன் என்று நீ ஆராய்வது வீண் வேலை 

சாத்திரங்கள் எல்லாம் அவன் புகழ் பாடும்
நீ அவனை தோத்திரம் செய்தால் அருள் கூடும்

நல்லோரின் கூட்டுறவை நாடிடுவாய்
தீயோரின் கூட்டுறவை விட்டு ஓடிடுவாய்

பசித்தோருக்கு உணவிட்டால் அவன் மகிழ்ந்திடுவான்
உன்னை பாசத்தோடு பக்கத்தில் நின்று காத்திடுவான்

அரிதாய் கிடைத்த மனித பிறவி
அவனை அறியாது போனால் கிடைக்கும் இழிபிறவி
உலக பற்றுகளை ஒதுக்கி இதை அறிந்தே
தவம் செய்வான்  துறவி

கடமைகளை தவறாமல் காலத்தோடு செய்திடுவாய்
கண நேரமும் கடவுளை மறவாமல் வாழ்ந்திடுவாய்
காலமெல்லாம் கவலையற்று வாழ
அவன் அருள் செய்திடுவான் 



2 comments:

  1. "கடமைகளை தவறாமல் காலத்தோடு செய்திடுவாய்"
    அருமையான வரிகள் நண்பரே!
    பகிர்விற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  2. நன்றி நண்பரே

    கடமைகளை காலத்தோடு செய்தல் முக்கியம்
    ஆனால் இந்த உலகில் என்ன நடக்கிறது?
    தாய் தந்தை இருக்கும்வரை அவர்களுக்கு கஞ்சி கூட ஊற்றுவது கிடையாது
    இன்று மனநிலை பாதிக்கப்பட்டு பல முதியவர்கள்
    வீதிகளில் அலைவது பரிதாபத்திற்கு உரிய ஒன்றாகும்
    சமீபத்தில் ஒரு குறும்படம் இந்த அவலத்தை வெளிச்சம் போட்டு காட்டியதை எத்தனை பேர் அறிவார்களோ?

    ஆனால்இன்று பெரும்பாலானோர் ஊரார் மெச்ச அவர்களுக்குஅதிக பண சிலவில் சவ ஊர்வலம் அவர்கள் பெயரில் ஆயிரகணக்கான செலவில் நினைவு மண்டபம், கட்டுகிறான் அன்ன தானம் கருமாதிகள் செய்கிறான்

    இவைகள் எல்லாம் யாரை ஏமாற்ற?

    இந்த போக்கினால்தான் பல குடும்பங்களில் நடக்கும்
    தீர்வு காண இயலா துன்பங்களும் பிரச்சினைகளும்

    இதைதான் சாத்திரங்கள் பித்ரு சாபங்கள் என்று கூறுகின்றன

    ReplyDelete