Sunday, December 4, 2011

பாசம் என்பது சுயநலம் கொண்டது அன்பு சுயநலமற்றது

பாசம்தான் நம்மை பந்தத்தில் சிக்க வைக்கிறது 
பாசம்தான் நம்மை பாவம் செய்ய தூண்டுகிறது
பாசம்தான் நம் கண்களை மறைக்கிறது 
அப்படியானால் பாசம் இல்லாவிடில் இந்த உலகம் இயங்க முடியுமா?
ஒரு குழந்தைக்கு தாயின் பாசம் இல்லாவிடில் அது ஆரோக்கியமான 
மனநிலையில் வளரமுடியுமா என்றால் நிச்சயம் முடியாது
பாசம் தேவைதான்
ஆனால் அளவுக்கு மீறிய பாசம் பாசம் காட்டுபவரையும்
பாசத்திற்குஆளானவரையும் ஒரு சேர அழித்துவிடும் 
மகாபாரதத்தில் திருதராஷ்ட்ரன் தன் மகன் துரியோதன் மீது வைத்த 
அளவுகடந்த பாசத்தால் அவன் செய்த தீய செயல்கள் அனைத்தையும் கண்டும் காணாமல் இருந்ததால் அவன் தீயவனாகி தீய  செயல்களை செய்து 
அவனும் அவன் வம்சமும் அழிய காரணமாகிவிட்டான்
ராமாயணத்தில் கைகேயி தன் மகன் பரதனிடம் வைத்த 
பாசத்தால் தன் கணவனை இழந்தாள்,தன் மகனின் அன்பையும் இழந்தாள்
இப்படியாக ஒவ்வொரு குடும்பத்திலும்  இதுபோன்ற சம்பவங்கள்  
அரங்கேறிக்கொண்டுதான் இருக்கின்றன
ஆனால் யாரும் தங்களை திருத்திகொள்ளவில்லை என்பது வேதனைக்குரியது 
எல்லோரிடம் அன்பு காட்ட வேண்டும் 
பாசம் என்பது சுயநலம் கொண்டது 
அன்பு சுயநலமற்றது
இரண்டிற்கும் உள்ள வேறுபாட்டை புரிந்துகொண்டால் வாழ்க்கை இனிக்கும் 


No comments:

Post a Comment