Sunday, December 18, 2011

உண்பதும் உறங்குவதும்தான் உன் வாழ்க்கையின் லட்சியமோ?

உண்பதும் ஊர் சுற்றுவதும் உறவு கொள்வதும் 
உறங்குவதும் பிற உயிர்களை 
துன்புறுத்தி இன்பம் காண நினைப்பதுவும்தான் 
உன் வாழ்க்கையின் லட்சியமோ?

ஓரறறிவு முதல் ஐந்தறிவு 
படைத்த உயிர்கள் செய்யும் 
வேலையை நீ செய்வதற்கு 
உனக்கு ஆறறிவு எதற்கு?

சிந்தனை செய்வாய் மனமே 
சிந்தனை செய்வாய் 
சிந்தனை செய்யும் மனதை அளித்த
அந்த மாதவன் கேட்கின்றான் 
பதில் சொல் மனமே சொல் 
பதில் சொல் மனமே சொல்

தாமரை பூவில அமர்ந்தருள் செய்யும் இலக்குமியை 
வணங்கி  மகிழாது கண் விழித்தெழுந்தது 
முதல் உறங்கும் வரை தறி கெட்டலைந்து  
உன் மனமென்னும் பொறியில் 
அகப்பட்ட பூச்சிகள் போல் துடிப்பது ஏனோ?

வீணை ஏந்தி கானம் செய்யும் கலைமகளை வணங்காது 
வீண் கதைகள் பேசி சுற்றி திரிந்து வாழ்வை 
வீணாக்கலாகுமோ சொல் மனமே சொல்

மாலவனை அடைய மாதவம் 
செய்திடவே அளித்த இந்த 
கிடைத்தற்கரிய இப்பிறவியை 
வீணடிப்பது முறைதானோ சொல் 
முறைதானோ சொல் மனமே
முறைதானோ சொல் மனமே சொல்

ஊரெங்கும் கோயில் கொண்டு 
உனக்கு உணர்த்த நான் சிலையாய் 
நின்றிடினும் உலக போகம் என்னும்
மாய வலையில் நீ சிக்கி 
வீணே மடிவது சரிதானோ
சரிதானோ சொல் சரிதானோ 

எச்செயலுக்கும் கால அட்டவணை போடும் மனிதா
காலன் உனக்கு போட்டு வைத்த அட்டவனையை 
நீ அறிய மறுப்பதேனோ? 
அறிய மறுப்பதேனோ சொல்?

அனைத்துமாய் நான் இருந்தாலும் 
மாதத்தில் நான் மார்கழியானேன் 
உன் பாவங்கள் கழிந்து நீ புனிதமடைய 
இப்புவியில் நலமாய் வாழ

இன்றே என்னை அடைக்கலம் புகுவாய்
துன்பமற்ற இன்ப வாழ்வை பெற
ஆலயம் வந்திடுவாய் 
கண் குளிர கண்டிடுவாய் என் வடிவம் 
இனிய இசையுடன் என்னை துதித்திடுவாய்
ஆனந்தமுடன் அன்றாடம் 
பணிகளை ஆற்றிடுவாய்

கவசம் போல் உன்னை நான் காப்பேன் 
காலமெல்லாம் என் கண்ணுக்குள் வைத்து 


No comments:

Post a Comment