Thursday, January 26, 2012

மோகத்தை கொன்றுவிடு அல்லால் என் மூச்சை நிறுத்தி விடு என்றான் பாரதி

மோகத்தை கொன்றுவிடு 
அல்லால் என் மூச்சை நிறுத்தி விடு 
என்றான் பாரதி 

மோகம் முப்பதுநாள் 
ஆசை அறுபது நாள் என்பது பழமொழி

ஆனால் இன்றைய உலகில் 
பிறக்கும்போது தங்கத்தின் மீது 
தொடங்கிய மோகம்
இறக்கும்வரை முடிவதில்லை
ஆசைகளும் அப்படியே

முக்கியமாக தங்கத்தின் மீதான 
மோகம் குழந்தை பிறந்தவுடன் 
பெயர் சூட்டும்  விழா அன்று கழுத்தில் 
தங்க சங்கிலி,கையிலும் காலிலும் தங்க காப்பு
என உடலில் தவழ ஆரம்பித்துவிடுகிறது

இப்படியாக தங்கத்தின் மீதான மோகம்
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக 
வளர்ந்து கொண்டே போகிறது
அதேபோல் அதன் விலையும் 
பலநூறு மடங்கு உயர்ந்துவிட்டது 

நகை அணியாதவர்கள்  கூட
தங்கள் எதிர்கால பாதுகாப்பிற்கு 
என தங்க காசுகளை வாங்கி சேர்க்கின்றனர்

ஆனால் தங்கம் உண்மையிலேயே 
மனிதர்களுக்கு அழகு சேர்க்கிறதா
அல்லது பாதுகாப்பு அளிக்கிறதா
என்பது கேள்விக்குறியே

முக்கியமாக சமீப காலங்களில்
தங்க நகைகளை குறிவைத்து செயின்
திருடர்களும்,வீட்டில் தனியாக இருக்கும், 
வயதானவர்கள்,பெண்கள், குழந்தைகள்
ஆகியோரும் தாக்கபடுவதும் கொடூரமாக
கொலை செய்யப்படுவதும்
அன்றாட நிகழ்வுகளாக மாறிவிட்டன

வீட்டை பூட்டி சென்றால் வீட்டில் உள்ள 
அனைத்து நகைகளும் கொள்ளையிடப்படுவது
வாடிக்கையான  செயலாகிவிட்டது 

உலகத்தில் திருடர்கள்  சரிபாதி என்றான்
ஒரு கவிஞன் 
அந்த திருடர்களுக்கு மிக சுலபமாக 
பிழைக்க வழி காட்டுகிறது தங்கத்தின் மீது
மக்கள் கொண்டுள்ள மோகம் 
இவைகளை கண்ணுற்ற பின்பும் பெண்களும்
வயதானவர்களும் தங்கத்தின் மீது 
மோகம் கொண்டு அலைவது 
அவர்கள் உயிருக்கு உலை வைக்கும் செயல் என்பதை 
ஏன்தான் உணராது இருக்கின்றனர் என்று புரியவில்லை?
உயிர் போய்விட்டால் தங்கத்தை வைத்துகொண்டு 
என்ன செய்வது என்பதை யாரும் சிந்தித்து பார்ப்பதில்லை  

இனிமேலாவது தனியாக இருக்கும் பெண்கள், வயதானவர்கள் 
தங்கத்தின் மீது மோகம்  கொள்வதை விட்டு விட்டு 
அதற்காக செலவு செய்யும் தொகையை வங்கியில் 
பாதுகாப்பாக வைத்து தங்கள் வாழ்க்கையை 
நோயில்லாமல் மற்றவர்களை அனுசரித்துக்கொண்டு 
அமைதியான மகிழ்ச்சியாக வாழ கற்று கொள்வது நல்லது

இல்லாவிடில் தங்கத்தின் மீது கொண்ட மோகம் 
அவர்களுக்கும் அவர்களை சார்ந்தவர்களுக்கும் 
சோகம் வருவிக்கும் பொருளாகத்தான் ஆகிவிடும் 
தவறின் அது அவர்கள் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் 
என்பதை இனிமேலாவது உணர்ந்துகொள்ள வேண்டும்

இறைவனின் மீது மோகம் கொண்டால் 
சோகமில்லாமல் வாழலாம்  

4 comments:

  1. நல்ல பதிவு.
    நன்றி.

    ReplyDelete
  2. ஆஹா ! நல்ல கருத்துக்கள் ! நன்றி சார் !

    ReplyDelete
  3. நன்றி திண்டுக்கல் தனபாலன் அவர்களே.
    மோகத்தை நாம் கொல்லவில்லைஎன்றால்
    அது நம் மதியை அதன் கட்டுபாட்டுக்குள் கொண்டு சென்று
    ஒரு நாள் நம்மை எதிர்பார்க்காமல் கொன்றுவிடும்.
    அதற்குள் நாம் விழித்துக்கொள்ள வேண்டும்

    ReplyDelete
  4. வருகைக்கும் கருத்துக்கும்
    நன்றி திரு.ரத்னவேல் அவர்களே
    அழகு ஆபரணங்களில் இல்லை
    பண்புதான் உயர்ந்த ஆபரணம் என்பதை
    உணர்ந்தோரே பாக்கியசாலிகள்

    ReplyDelete