Thursday, March 7, 2013

சிவ ராத்திரி சிந்தனைகள்(3)


சிவ ராத்திரி சிந்தனைகள்(3)

அன்ன பூரணி என்னை பாரு நீ
என்று ஒரு பாட்டு உண்டு.





ஆத்மாவாகிய நாம் தங்கியிருக்கும்
இந்த உடல் இவ்வுலகில்
தங்கியிருக்க அன்னம் தேவை

அன்னம் இல்லையென்றால்
இந்த உடல் அசைவற்று மண்ணில்
விழுந்துவிடும்

மண்ணில் விழுந்த நம் உடல்
பிற உயிர்களுக்கு அன்னமாகிவிடும்.

விண்ணில் ஆன்மாவாக உடலின்றி
சுற்றி திரிந்த நாம் இறைவன் அருளால்
மனித பிறவி பெற்று இப்பூவுலகில்
பிறந்திருக்கிறோம்.

பிறவி பெற்றதன் பயன்
நம்மை பிறக்க வைத்த பிரம்மன் ஆராதித்த
அந்த பேரருளாலனை வணங்கி மீண்டும்
பிறவா நிலையை அடையும் வழியை
தெரிந்துகொண்டு முக்தி அடையத்தான்

அதனால்தான் ஆதி சங்கரர்
அன்ன பூர்ணே சதா பூர்ணே
என்றார் முதலில்

அடுத்த அடியில் சங்கரனின்
பிராண  சக்தியாக விளங்கும்
வல்லமை படைத்தவளே
என்றார்

அடுத்து மற்ற எதையும் அவர் கேட்கவில்லை
ஞானம், வைராக்கியம் ஆகியவற்றை எனக்கு
பிச்சையாக கொடு என்று வேண்டுகிறார்.

ஏனென்றால் ஞானத்தை அடைய
சாதனமாய் இருப்பது இந்த சரீரம்

அந்த சரீரம் தளர்ந்துவிடாமல்தழைத்து
நிலைத்து நிற்க அன்னம் தேவை

அப்புறம் இந்த சரீரத்தை கொண்டு
உலக மாயையில் மூழ்கி
வீணாகி போய் விடக்கூடாது

அதைகொண்டு ஞானத்தை
 அடையவேண்டும்

அதற்க்கு மனஉறுதி எனப்படும்
வைராக்கியம் வேண்டும்.

அதை பிச்சையாக போடு என்று
அன்னபூரணியிடம் யாசிக்கிறார் ஆதி சங்கரர்.

அவருக்குதான் ஞானம் கிடைத்துவிட்டதே
அவர் எதற்கு ஞானத்தை யாசிக்க வேண்டும்
சிலர் யோசிக்கலாம்.

உண்மையில் நமக்காகத்தான்
அவர் இதுபோல் பிரார்த்தனை செய்கிறார்.

அன்னபூரணியிடம் எதை யாசித்தாலும்
முடிவில் இதையும் யாசித்து பெற்றுக்கொண்டு
நன்மை அடையுங்கள் என்று பிரார்த்தனை
செய்ய நமக்கு கற்றுகொடுக்கிறார்.
Picture -google images 

1 comment:

  1. சிவா என்ற மந்திரத்தை
    திருப்பி போடுங்கள்

    வாசி என்று வரும்

    வாசி என்பதை
    திருப்பிபோட்டால்
    சிவா என்று வரும்

    சிவா சிவா என்று
    சொல்லிகொண்டிருந்தால்
    வாசி கட்டுக்குள் வந்துவிடும்

    வாசி கட்டுக்குள் வந்துவிட்டால்
    நம்மை பிணித்துள்ள
    உலக பந்தங்கள் என்னும்
    கட்டுக்கள் தானே விலகிவிடும்.

    ஜீவன்
    சிவனாகிவிடும்.

    ஜீவன் சிவனாகிவிட்டால்
    துன்பமேது?

    எப்போதும்
    இன்பம்தான்.

    ReplyDelete