புத்தாண்டு 2014 வருக வருக
இந்த புத்தாண்டு முதல் அனு தினமும்
ஏழுமலையானை நினையுங்கள்
ஏழுமலையானை நினைக்க நினைக்க
வாழ்வில் ஏற்றம்தான் எப்போதும்
(வலை நண்பர்களுக்காக திருவேங்கடவனின் படத்தை விசேஷமாய் வரைந்தேன் )
அனைவருக்கும் அவன் இந்த ஆண்டு முழுவதும் மகிழ்ச்சியான வாழ்வும், வாழ்வில் முன்னேற்றங்களும், அவன் திருவடிகளில் மாறாத பக்தியும் அருள பிரார்த்திக்கிறேன் )
புத்தாண்டே வருக
புதிய சிந்தனைகளைத் தருக
இரவு முழுதும் கூத்தடித்து
இறைவனை மறந்து
கும்மாளம் போடும்
மேலை நாட்டு
கலாச்சாரம் தவிர்த்திடுவோம்
காலமெல்லாம் நம்மை
கண்ணிமை போல் காக்கும் கற்பகக் களிறை
நினைவில் வைத்து வணங்கி
புத்தாண்டை தொடங்குவோம்
நம்மை வாட்டிவரும்
வினையெல்லாம்
மீண்டும் வாராமல் செய்யும்
வேலனை துதிப்போம்
ஆண்டின் தொடக்கத்தை
நம்மை எல்லாம் ஆட வைத்து
அருள் செய்யும் ஆடல்வல்லானின்
புகழை அதிகாலையில் பாடி
மன நிறைவுடன் புத்தாண்டை
வரவேற்போம்
வாழ்வைதந்து வளம் தந்து வல்லபம் கூட்டும்
முக்கண்ணி நம் முன்னே இருந்து எப்போதும் நம்மை எல்லாம் நம்மையெல்லாம் காக்கட்டும்
மார்கழி மாதத்தை
புனித மாதமாய் அறிவித்த
மாலவனின் புகழைப் பாடி
மகிழ்ச்சியோடு வரவேற்போம்
ஆண்டின் கூட்டு தொகையோ 7
நல்லிசையின் சுரங்களோ 7
ஆதார சக்திகளாய்
விளங்கும் சப்த மாதாக்களோ 7
இறைவனின் ஆணைப்படி
இவ்வுலகை ஆளும் ரிஷிகளோ 7
உயிர்கள் வினைப்படி பிறந்து
இன்ப துன்பங்களை
அனுபவிக்கும் பிறவிகளோ 7
கண்ணனின் லீலைகளை
விவரிக்கும் சப்தாகமோ 7
வைகுண்ட வாசன்
வாசம் செய்யும் மலைகளோ 7
ஏழுமலை இருக்க நமக்கு
எதற்கு மனக்கவலை ?
திருப்பதி வாசன்
திருவோடு விளங்கும் ஈசன்
அடியவர்களின் நேசன்
புத்தாண்டு நாளின் தொடக்கத்திலிருந்தே
அவன்நாமம் சொல்லுவோம்.
அவன் புகழைப் பாடுவோம்.
ஆண்டு முழுவதும் அல்லல் இல்லா வாழ்வை
பெற்று ஆனந்தமாய் வாழ்வோம்.
இந்த புத்தாண்டு முதல் அனு தினமும்
ஏழுமலையானை நினையுங்கள்
ஏழுமலையானை நினைக்க நினைக்க
வாழ்வில் ஏற்றம்தான் எப்போதும்
(வலை நண்பர்களுக்காக திருவேங்கடவனின் படத்தை விசேஷமாய் வரைந்தேன் )
அனைவருக்கும் அவன் இந்த ஆண்டு முழுவதும் மகிழ்ச்சியான வாழ்வும், வாழ்வில் முன்னேற்றங்களும், அவன் திருவடிகளில் மாறாத பக்தியும் அருள பிரார்த்திக்கிறேன் )
புத்தாண்டே வருக
புதிய சிந்தனைகளைத் தருக
இரவு முழுதும் கூத்தடித்து
இறைவனை மறந்து
கும்மாளம் போடும்
மேலை நாட்டு
கலாச்சாரம் தவிர்த்திடுவோம்
காலமெல்லாம் நம்மை
கண்ணிமை போல் காக்கும் கற்பகக் களிறை
நினைவில் வைத்து வணங்கி
புத்தாண்டை தொடங்குவோம்
நம்மை வாட்டிவரும்
வினையெல்லாம்
மீண்டும் வாராமல் செய்யும்
வேலனை துதிப்போம்
ஆண்டின் தொடக்கத்தை
நம்மை எல்லாம் ஆட வைத்து
அருள் செய்யும் ஆடல்வல்லானின்
புகழை அதிகாலையில் பாடி
மன நிறைவுடன் புத்தாண்டை
வரவேற்போம்
வாழ்வைதந்து வளம் தந்து வல்லபம் கூட்டும்
முக்கண்ணி நம் முன்னே இருந்து எப்போதும் நம்மை எல்லாம் நம்மையெல்லாம் காக்கட்டும்
மார்கழி மாதத்தை
புனித மாதமாய் அறிவித்த
மாலவனின் புகழைப் பாடி
மகிழ்ச்சியோடு வரவேற்போம்
ஆண்டின் கூட்டு தொகையோ 7
நல்லிசையின் சுரங்களோ 7
ஆதார சக்திகளாய்
விளங்கும் சப்த மாதாக்களோ 7
இறைவனின் ஆணைப்படி
இவ்வுலகை ஆளும் ரிஷிகளோ 7
உயிர்கள் வினைப்படி பிறந்து
இன்ப துன்பங்களை
அனுபவிக்கும் பிறவிகளோ 7
கண்ணனின் லீலைகளை
விவரிக்கும் சப்தாகமோ 7
வைகுண்ட வாசன்
வாசம் செய்யும் மலைகளோ 7
ஏழுமலை இருக்க நமக்கு
எதற்கு மனக்கவலை ?
திருப்பதி வாசன்
திருவோடு விளங்கும் ஈசன்
அடியவர்களின் நேசன்
புத்தாண்டு நாளின் தொடக்கத்திலிருந்தே
அவன்நாமம் சொல்லுவோம்.
அவன் புகழைப் பாடுவோம்.
ஆண்டு முழுவதும் அல்லல் இல்லா வாழ்வை
பெற்று ஆனந்தமாய் வாழ்வோம்.