Thursday, December 19, 2013

பட்டினத்தாரின் சிந்தனைகள். (1)


பட்டினத்தாரின் சிந்தனைகள். (1)எல்லோரும் இறைவனை பூஜை செய்கிறார்கள்.
ஒவ்வொருவரும் வித விதமாக  செய்கிறார்கள் 
சிலர் ஆகம விதிப்படி செய்கிறார்கள் 

சிலர் அவரவருக்கு தோன்றிய விதத்தில்
பூஜையை செய்கிறார்கள்.
சிலர் வெறும் கும்பிடு போடுவதோடு சரி.

சிலர் ஊதுவத்தியை  காட்டிவிட்டு 
டாடா காட்டிவிட்டு சென்று விடுவார்கள்.

சிலர் எதுவுமே செய்வதில்லை.

சிலருக்கு கடவுள் இருக்கிறார் 
என்ற எண்ணமே வருவதில்லை.

சிலர்துன்பம் வரும்போது 
கோயில் குளம்,ஆறு தீர்த்தம் ,விரதம் 
 என்று அலைவார்கள். துன்பம் தீர்ந்ததும் 
அனைத்தையும் விட்டுவிடுவார்கள்.

சிலர் கடவுளே இல்லை என்று
பிதற்றிகொண்டிருப்பார்கள். 

கடவுளை வணங்குபவர்களை 
எள்ளி நகையாடுவார்கள்.
இப்படியாக மனிதர்களில் 
பல ரகம்   உண்டு.

சிலர் நாள் தவறாமல் கோயிலுக்கு செல்வார்கள்.
வருடம்தோறும் தீர்த்த யாத்திரை செல்வார்கள் 
நாள்தவறாமல் பூஜை செய்வார்கள்.

ஆனால் வள்ளலார் என்ன சொல்கிறார் 
பூஜை என்பது மனது ஒருமைப்பாட்டுடன்
இறைவனைப் பற்றிய சிந்தனையுடந்தான் 
நினைக்க வேண்டும் என்று சொல்கிறார். 

அப்படிப்பட்ட பூஜைதான் இறைவனின் 
அருளை பெற்றுதரும் என்கிறார்.

ஆனால் பூஜை செய்யும்போதுதான் 
ஒவ்வொருவரின் உண்மையான ஸ்வரூபம் வெளிப்படும்.
அவர்களின் பொறுமையின்மை, சகிப்புத்தன்மை இன்மை. 
அன்பில்லா தன்மை  அனைத்தும் வெளிப்படும். 

அதனால் அவர்கள் பல ஆண்டுகள் பூஜை செய்தும் 
எந்த முன்னேற்றமும் மனதளவில் 
அவர்களுக்கு ஏற்படுவதில்லை. 

அவர்களின் புற தோற்றத்தில்தான் மாறுதலே ஒழிய 
அவர்கள் உள்ளத்தில் இறைவனிடம் ஒரு சரணாகதியோ 
 மனதில் கவலையற்ற தன்மையோ அல்லது 
அனைவரிடமும் அன்போ, உண்டாவதில்லை. 

நாம் செய்யும் பூஜை எப்படி இருக்கிறது 
என்பதை பட்டினத்தடிகள் பட்டியலிட்டு காட்டுகிறார். படியுங்கள்.

கை மலர்களை எடுத்து இறைவடிவம்மேல் போடுகிறது 
ஆனால் கண் சுற்றுமுற்றும்  எதையோ எதிர்பார்த்து சுழன்று கொண்டிருக்கிறது. உதாரணத்திற்கு அலுவலகம் செல்பவர்  கைகடிகாரத்தில் நேரத்தை பார்த்துக்கொண்டிருப்பார் 
நம்மை ஏமாற்றும் நாக்கு பொய்யை பேசிக்கொண்டிருக்க
மலம் மூத்திரம் நிறைந்த இந்த மாமிசத்தினால் ஆகிய இந்த உடலும் குடலும் எதன் மீதாவது நாட்டம் கொண்டிருக்க காது எதையையோ கேட்டுக்கொண்டிருக்க இப்படி ஒவ்வொரு புலனும் ஒவ்வொரு திக்கில் சென்று கொண்டிருக்க ஒருமைப்பாடு இல்லால் நாம் செய்யும் பூ ஜையை நீ எவ்வாறு ஏற்பாய் ,வினைகளை தீர்க்கும் ஈசனே என்கிறார். 

கையொன்று செய்ய, விழியொன்று நாடக் கருத்தொன்று எண்ண
பொய்யொன்று வஞ்சக நாவொன்று பேசப் புலால் கமழும்
மெய்யொன்று சாரச் செவியொன்று கேட்க விரும்பும் யான்
செய்கின்ற பூசை எவ்வாறு கொள்வாய் வினைதீர்த்தவனே! 1.

8 comments:

 1. அடுத்தடுத்து மணிக்கொன்றாக வெளியிடும் அருமையான பதிவுகளுக்கும் பகிர்வுக்கும் பாராட்டுக்கள். வாழ்த்துகள். நன்றிகள். ஒன்றைப்படித்து முடிப்பதற்கு மற்றொன்று. கடும் உழைப்பு தான். ;) வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. உறங்கும் நேரம் போக மீதி நேரம் முழுவதும் உழைப்பதுதான் நாம் உயிரோடு இருப்பதின் அடையாளம் அதிலும் அவ்வப்போது நம்மை படைத்த பரமனைப் பற்றி சிந்திப்பது அவன் அருளாகும்
   பாராட்டிற்கு நன்றி VGK

   நான் ஆற்றும் பல பணிகளில்
   இந்த எழுத்துப் பணியும் ஒன்று

   Delete
 2. அற்புதமான பாடல்
  அருமையான விளக்கம்
  பகிர்வுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. பட்டினத்தடிகளின் சிறப்பான பாடலோடு விளக்கமும் அருமை ஐயா...

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 4. யதார்த்தமான உலகோரின் இயல்பை பட்டினத்தாரின் பாடலும், அதனை மனதினில் பதியும் வண்ணம் பதிந்த பதிவும் போற்றத்தக்கது! சீரியதொரு பகிர்வு! பகிர்விற்கு நன்றி அய்யா!

  ReplyDelete
  Replies
  1. உண்மை கசக்கத்தான் செய்யும்
   வாழ்க்கை கசந்தால்தான்
   வசந்தத்தின் இனிமை புரியும்.

   Delete