Thursday, December 26, 2013

அருட்பாவை தந்த திருப்பாவை (பாசுரம்(16)

அருட்பாவை தந்த திருப்பாவை (பாசுரம்(16)


பாடல் -16

நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய கோயில் காப்பானே
கொடித்தோன்றும் தோரண வாயில் காப்பானே  
மணிக்கதவம் தாள் திறவாய் 
ஆயர் சிறுமியரோமுக்கு அறைபறை மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்
தூயோமாய் வந்தோம் துயிலேழப்ப் பாடுவான் வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மா  நீ நேய நிலைக்கதவம் நீக்கேலோ ரெம்பாவாய். 

விளக்கம் 
ஆயர்குல மக்களின் தலைவனான நந்தகோபனின் மாளிகை காவலனே மணிகள் ஒலிக்கும் இந்த கதவைத் திறப்பாயாக மாயவனும் கார்மேகவண்ணனுமான கண்ணன் எங்களை இன்று சந்தித்து அருள் தருவதாக கூறியுள்ளான்.அவனை எழுப்புவதற்கு மனதையும் உடலையும் சுத்தமாக்கிகொண்டு வந்துள்ளோம்.  இந்த நோன்பு காலத்தில் 
முதன் முதலாக அவனைக் காண வந்துள்ள எங்களை தடுத்துவிடாதே .கதவைத் திறப்பாயாக. என்று ஆண்டாள் பாடுகிறாள். 


கரைப்பார் கரைத்தால்
 கல்லும் கரையும் என்பார்கள். 

ஆண்டாள் ஒரு வழியாக ஆயர்குல பெண்களை உறக்கத்திலிருந்து  எழுப்பி 
அறிதுயில் கொண்டுள்ள கண்ணனைக்  
காண அழைத்துச்  செல்கிறாள்.

சென்று கண்ணன் உறங்கும் மாளிகை
 காவல்காரனை கதவை திறக்க வேண்டுகிறாள்

.நாங்கள் மனதையும் உடலையும் 
சுத்தமாக்கிகொண்டு வந்துள்ளோம்
 எங்களைத் தடுக்காதே என்றும் வேண்டுகிறாள். 


மனம் ஒரு அதிசய சக்தி 
.அதில் எண்ணங்கள் தோன்றும் இடமும்
 இந்த உடலில் பிராணன் தோன்றுமிடமும் 
ஒன்றே என்கிறார் பகவான் ரமணர்.

அதனால்தான் மனமடங்கினால் 
  பிராணன் நம் வசப்படும்

பிராணனை கட்டுப்படுத்தினால்
 மனம் வசப்படும். 


ஆனால் இரண்டையும் வசப்படுத்துதல் 
என்பது மிகக் கடினமான செயல். 
அது யோகிகளுக்கே கைவரும். 

நம் போன்ற பாமரர்கள் தகுந்த ஆசானின்றி 
அதற்க்கு முயற்சி செய்தால் 
விபரீத  விளைவுகள் ஏற்படும் .
சில நேரங்களில் உயிருக்கு அபாயம் நேரிடும்.

உடல் தூய்மை நீரால் அமையும் 
உள்ள தூய்மை வாய்மையால் 
காணப்படும் என்று வள்ளுவர் தெரிவிக்கிறார். வாய்மையை கடைப்பிடிப்பது 
என்பது மிகவும் அரிதான பண்பு. 
அது மகாத்மா காந்தி போன்ற 
 யுக புருஷர்களுக்கே சாத்தியம்  

அதனால்தான் ஆண்டாள் 
மிக எளிய வழியை நமக்கு காட்டி தந்துள்ளாள்.

 நம் மனதை கண்ணனின் திருவடிகளில் 
ஒப்படைத்துவிட்டால்> தான் என்ற அகந்தையை விட்டுவிட்டு
 கண்ணன் விட்ட வழி என்று 
அவன் திருவடிகளில் சரணடைந்துவிட்டால் 
ஒரே நேரத்தில் மனமும் அடங்கும்
 பிராணனும் நம் வசப்படும். 

அவன் லீலைகளை பற்றிபேசுவதாலும் 
பாடுவதாலும்> சிந்திப்பதாலும்
 மனம் அமைதி அடைந்து எளிதாக
 அவன் திருவடிகளில் ஒடுங்கிவிடும். 
அதை அடக்கும் வேலை நமக்கு இல்லை.மாடுகளையும் கன்றுகளையும்
 மேய்த்தவன் மாடுபோல் அடங்கா திரியும்
 நம் மனதையும் மாற்றி 
அவன் வழிக்குக் கொண்டுவருவான் அதற்கு அவன் நாமத்தை இடைவிடாது 
உச்சரிக்கவும் வேண்டும்.

 நமக்குரிய  கடமைகளை தவறாது 
செய்யவும் வேண்டும் 

 அனைவரையும் 
அவன் வடிவாகக் காணவேண்டும்

பரோபகாரம் இதம் சரீரம் என்ற 
வாக்கியத்திற்கு உகந்த வகையில் 
பிறருக்கு நாம் ஏதாவது 
ஒரு வகையில் உதவிக்கொண்டிருந்தால்.
 மட்டுமே சர்வம் பிரம்மமயம்  என்ற
 மகா வாக்கியத்தின்
 உட்பொருளை உணர்ந்துகொள்ளமுடியும். 

முயற்சி செய்வோம் .
அந்த முகுந்தன் வழிகாட்டுவான்.  

படங்கள்-நன்றி-கூகுல்

2 comments:

  1. விளக்கம் மிகவும் அருமை ஐயா... வாழ்த்துக்கள்...

    4 நாட்களாக இணையம் வர முடியவில்லை.... இனி தொடர்கிறேன்...

    ReplyDelete
  2. மிகவும் எளிமையான விளக்கங்களுடன் + படங்களுடன் பதிவு அருமை.

    ReplyDelete