Saturday, November 26, 2011

இறைவா உன்னை நான் எதற்காக சரணடையவேண்டும்?

இறைவா உன்னை நான்
எதற்காக சரணடையவேண்டும்?
தாயும்மானவர் கூறுகிறார்
வன்பிறவி வேதனைக்கும் வஞ்ச நமன் வாதனைக்கும்
அஞ்சி அஞ்சி உன்னை சரணடைந்தேன் பராபரமே என்று.
பிறப்பதற்கு முன் நாம் நம் தாயின் வயிற்றில் மல மூத்திரம்
கலந்த துர்நீரில் மிதந்துகொண்டு வயிற்றில் உணவை
செரிப்பதர்க்காக உள்ள ஜடராகினியின் அனலில்
புழுபோல் துடித்து கொண்டு வேதனையில் தவிக்கும்போது
எப்போது இந்த சிறையை விட்டு வெளிஉலகத்திற்கு
செல்லபோகிறோம் .இனிமேல் இந்த கற்ப வாசத்தில்
மாட்டிக்கொள்ளகூடாது என்றுநினைக்கிறோம்.
ஆனால் பிறந்தவுடன் நம் வினைப்பயனால் வந்த விதி வசத்தால்
உலக மாயையில் மூழ்கிவிடுகிறோம்.
பிறகு உலகில் கணக்கற்ற ஆசைகளில் சிக்குண்டு
அழியும் பொருட்கள்,மனிதர்கள் மீது மோகம் கொண்டு
கண நேரத்தில் தோன்றி மறையும் இன்பங்களுக்காக
வாழ்நாள் முழுவதும் நம் உடலை,மனதை வருத்திகொள்ளுகிறோம்
இந்த உடல் மீது வைத்த அபரிமிதமான பற்றினால் நம் மனம்
மரணத்தின் போது இவ்வுலக பொருட்களை பிரியமனமில்லாமல்
மரணவஸ்தை(வாதனை)படுகிறோம்
ஆனால் ஒவ்வொரு பிறவி எடுக்கும்போதும்
,மரணத்தின்போதும் கணக்கற்ற முறை
துன்பத்தை அனுபவித்தும் நாம் திருந்துவதில்லை.
எனவே இந்த புதைகுழியிலிருந்து வெளியேற வேண்டுமானால்
இறைவனை சரணடைவதை தவிர வேறு வழியில்லை,
ராம நாமத்தை உச்சரித்துகொண்டிருந்தால் நம்மை
மீண்டும் இந்த உலகில் தள்ளும் மனதின்
நச்சரிப்பிலிருந்து விடுபட்டு
நம் ஆத்மாவிற்கு விடுதலை கிடைக்கும்.

1 comment:

  1. அருமையான பதிவு.வாழ்த்துக்கள். நன்றி.

    ReplyDelete