Sunday, November 27, 2011

கடமைகளை சரியாக செய்து அதன் பலனை இறைவனிடம் விட்டுவிடவேண்டும்

பொதுவாக பகவத் கீதையில் மூன்று யோகங்கள்
முக்கியமாக வலியுறுத்தப்படுகின்றன
அவை கர்ம யோகம், பக்தி யோகம் ,ஞானயோகம்
கர்மயோகம் என்பது அவரவருக்கு விதிக்கப்பட்ட கடமைகளை
ஆத்மா சுத்தியுடன்,பலன் எதிர்பாராமல் செய்யவேண்டும்
ஏனெனில் பலனில் மனதை வைத்தால் செய்ய வேண்டிய
கர்மம் சரிவர செய்ய முடியாமல் போகும்
கர்மத்தை ஒழுங்காக முறைப்படி செய்தால் அதன் பலன்
தானே நமக்கு வந்து சேரும்
எனினும் அதன் பலன் நமக்கு சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ
அமைவது நம்முடைய வினைபயனையும் இறைவனின் சித்தத்தையும்
பொறுத்துதான் அமையும்
உதாரணத்திற்கு ஒரு விவசாயி அனைத்து பணிகளையும் முறையாக செய்தாலும்
விளைச்சல் பல காரணிகளை பொறுத்தது. வெயிலானால் பயிர்,காய்ந்து போகலாம்,மழை,வெள்ளம் ஆகியவற்றால் சேதமாகலாம்.பறவைகள்,
மிருகங்களால் மகசூல் பாதிக்கப்படலாம்.
அதனால்தான் நம்முடைய கருமங்களை,கடமைகளை சரியாக செய்து அதன் பலனை இறைவனிடம் விட்டுவிடவேண்டும் என்று பகவான் கண்ணன் கூறுகிறான்.
அவனிடம் விட்டுவிட்டால் எது வந்தாலும்
அது அவனின் பிரசாதமாக ஏற்றுகொள்ளும் மனநிலை நமக்கு கிடைக்கும்
எது நடந்தாலும் நம் மனநிலை பாதிக்காது
மனம் பாதிக்கபடாமல் இருந்தால் உடல்நலம் பாதிக்காது
இதை நன்றாக உணர்ந்துகொள்வதே ஞானயோகம்
நம் கடமைகளை சரியாக செய்வதுடன் அவன் மீது பக்தியும் செலுத்துவோம்
இறைவனை முழுவதுமாக நம்புவோம்
நம் வாழ்க்கை அமைதியாக மகிழ்ச்சியாக போய்கொண்டிருக்கும்
.

1 comment: