Tuesday, November 29, 2011

யாரை வேண்டுமானாலும் ஏமாற்றலாம் ஆனால் இறைவனை ஏமாற்றமுடியாது

யாரை வேண்டுமானாலும் ஏமாற்றலாம் ஆனால் இறைவனை ஏமாற்றமுடியாது

இன்று ஆலயங்களுக்கு மக்கள் அதிகம் செல்லுகிறார்கள் ஆலய விழாக்களுக்கு மக்கள் லட்சக்கணக்கில் கூடுகிறார்கள்
விரதம் இருந்து மாநிலம் விட்டு மாநிலம் ஆலயங்களுக்கு செல்லுகிறார்கள்
இருந்தும் நாட்டில் கொள்ளை,திருட்டு,பிறரை ஏமாற்றுதல் ,பெண்களை கொடுமைபடுத்துதல் கொலைசெய்தல், போன்ற குற்றங்கள் அதிகமாகிக்கொண்டே வருகின்றன.
விரதம் இருக்கும் காலத்தில் மட்டும் மாமிச உணவை,குடியை,போதை பொருளை தவிர்க்கிறார்கள்
எதற்காக செல்லுகிறீர்கள் என்று கேட்டால் ஒரு மன நிம்மதி கிடைக்கிறது
நினைத்த காரியம் நிறைவேறுகிறது என்றெல்லாம் சொல்லுகிறார்கள்

விரதம் முடிந்த பிறகு சில நாட்கள் விட்டிருந்த கெட்ட பழக்கங்களை எல்லாம் வருடம் முழுவதும் ஒழுங்காக கடைபிடித்து ,தீய வழியில் வாழ்க்கை வாழ்ந்து தானும் அழிந்து தங்கள் குடும்பம் மற்றும் சமூகத்திற்கும் தீங்கு விளைவிக்கிறார்கள்
இதனால் இன்று சிறைசாலைகளில் கூட்டம் பெருகிக்கொண்டே போகிறது.
நீதிமன்றங்களில் வழக்குகள் லட்சகணக்கில் தேங்கி கிடக்கின்றன
மக்களிடம் ஒழுக்கம் இல்லை மாறாக ஒழுக்க கேடுகள் பெருகிவிட்டன
ஒவ்வொரு ஆண்டும் இதே கதைதான்
இதனால் யாருக்கு நன்மை?
இந்த ஆன்மீகத்தை வைத்து பிழைப்பு நடத்துபவர்களுக்குதான் நன்மை
ஒரு மனிதன் எதை செய்தாலும் அதன் பதிவுகள் அவன் மனதில் நிலைத்துவிடும்
நன்மையோ அல்லது தீமையோ இரண்டும் பதிவாகும்
ஒரு மாதம் அல்லது ஒரு குறிப்பிட்ட காலம் வரை நாள் நல்ல வாழ்க்கை வாழ்ந்துவிட்டு பிறகு அதற்க்கு நேர்மாறான வாழ்க்கை வாழ்வதால் எந்த பயனும் இல்லை
தீயவை தீய பயத்தலால் தீயினும் அஞ்சப்படும் என்று திருவள்ளுவர் கூறியிருப்பதை நினைவில் கொள்ள வேண்டும்
தீ என்ற சொல் நெருப்பு .
நெருப்பு எல்லாவற்றையும் எரித்து சாம்பலாகிவிடும்
அதைபோல் தீய எண்ணங்கள் அதன் விளைவால் தீய செயல்கள்,தன்னையும், தன் குடும்பத்தையும் அழித்துவிடும்.
உண்மையான் பக்தி இறைவனிடம் இருந்தால்தான்
மனதில் நல்ல எண்ணங்கள் தோன்றும்,அன்பு தோன்றும்,பண்பு தோன்றும்
அதை விடுத்தது வெளிதோற்றத்தில் மட்டும் பக்தனாக வேஷம் போடுவதால்
போடுபவனுக்கும் பயனில்லை இந்த சமூகத்திற்கும் பயனில்லை.

யாரை வேண்டுமானாலும் ஏமாற்றலாம் ஆனால் இறைவனை ஏமாற்றமுடியாது

2 comments:

  1. வணக்கம்...! இந்த பதிவுலகில் புதியவன். அருமையான பதிவு...வாழ்த்துக்கள். நன்றி நண்பரே!
    நம்ம தளத்தில்:
    "மனிதனுக்கு மிகப் பெரிய தண்டனை எது?"

    ReplyDelete
  2. அருமையான பதிவு.
    நன்றி.

    ReplyDelete