Saturday, July 20, 2013

மழைக்கடவுளே நீ வா!(பகுதி-1)

மழைக்கடவுளே நீ வா!(பகுதி-1)மந்தஹாச
இடிமுழக்கத்துடன் வா?

இன்னல்கள் தீர்க்கும்
மின்னல் போல் ஒளி வீசி வா !

நாங்கள் வாழும்
இந்த பூமி குளிர வா !

உயிர்கள் அனைத்தும் வாழ
உணவு பொருட்களைத் தா!

தாகம் தீர்க்கும் குடிநீரைத் தா !

என்றெல்லாம் அழைக்கும் இந்த 
மனித குலம் மாரியென நீ வந்துவிட்டால் 
என்ன சொல்கிறது தெரியுமா?

நீ மாலையில் பெய்தால் 
சாலையெல்லாம்
மழை கொட்டி தீர்த்து 
நீர் தேங்கிவிட்டதே 
எப்படி வீடு செல்வோம் 
என்று அங்கலாய்க்கிறது


காலையில் நீ கொட்டி தீர்த்தால்
மின்சாரம் போய் விட்டதே  
எப்படி குளிப்பேன், சமைப்பேன்,
 தொலைகாட்சி பார்ப்பேன்,
 பாட்டு கேட்பேன், துணி துவைப்பேன்,
கைபேசி மின்கலத்தில் சக்தி ஏத்துவேன் ,
முடிவாக எப்படி வேலைக்கு செல்வேன்,
பாழாய்ப் போன மழை எல்லாவற்றையும் 
கெடுத்துவிட்டதே என்று 
புலம்பி தவிக்கிறது மந்த புத்தி 
படைத்த இந்த மனித கூட்டம்

ஆனால் உயிர் காக்கும் பயிர் தொழில் 
செய்வோர் உன்னை வேண்டி விரும்பி 
பக்தியுடன் வரவேற்கின்றார் 
தங்கள் தொழிலை செய்ய அணைகட்டி நீர் தேக்கி மின் உற்பத்தி செய்வோர் 
உன் வரவை அன்புடன் எதிர்நோக்குகின்றார் 
அணையின் நீர்மட்ட அளவை ஒவ்வொரு 
கணமும் கவனத்துடன் காண்கிறார். 

ஆனால் யார் என்ன நினைத்தாலும் நீ
அதை புறந்தள்ளி உன் கடமையை செய்கின்றாய் 
கடமையை செய் பலனை எதிர்பாராதே 
என்று சொன்ன பாரதக் கண்ணன் போல். 

மழைக்கடவுளே
நீ வருக வருக 

நீ எப்படி வந்தாலும் சரி
நீ எந்த வழியில் வந்தாலும் சரி
அது எங்கள் நன்மைக்கே

நீ தனியாக வந்தாலும் சரி
புயலாய் ,வெள்ளமாய்
வந்து அனைத்தையும்
ஒரு கை பார்த்தாலும் சரிநின்று நிதானித்து பெய்தால்
நீர் நிலைகளெல்லாம் நிறையும்

இந்த மானுடம் வாழும்
உன்னை வாழ்த்தும் .

இன்னும் வரும்
6 comments:

 1. /// நின்று நிதானித்து பெய்தால்
  நீர் நிலைகளெல்லாம் நிறையும்... ///

  அவ்வாறே நடக்கட்டும்...

  நன்றி ஐயா... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 2. மழைக்கடவுளே நீ வருக வருக

  நீ எப்படி வந்தாலும் சரி, நீ எந்த வழியில் வந்தாலும் சரி, அது எங்கள் நன்மைக்கே

  நீ தனியாக வந்தாலும் சரி புயலாய், வெள்ளமாய் வந்து அனைத்தையும்
  ஒரு கை பார்த்தாலும் சரி//

  எப்படியாவது மழை கொட்டி, நீர் நிலைகள் நிரம்பினால் சரி. அதுவே நம் அனைவரின் எதிர்பார்ப்பும். பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. உங்களுக்காக இந்தமழை பற்றிய பதிவில் குழந்தையை இடுப்பில் தூக்கி கொண்டு கையில் குடையுடன் வெளியே கிளம்பும் ஒரு தாயின் படம் வரைந்துள்ளேன். குழந்தை தன் மேல் தூறல் விழாமல் தடுக்க தலைமேல் கையை வைத்திருக்கும் அழகு உங்கள் கண்களில் படவில்லையோ?

   எதோ இவன் நம்மை நம்பி ஒரு பதிவு போட்டுவிட்டானே கடனுக்கு ஒரு நன்றியை போட்டுவிட்டு நம் வேலையை பார்க்க போவோம் என்று இருப்பது தம்பிக்கு அழகா என்று அண்ணன் கேட்கிறான்

   நீர் நிலைகள் நிரம்பினால் சரி என்கிறீர்கள்.
   நீர் எங்கிருக்கிறது நிலை எங்கிருக்கிறது நிரம்ப

   எல்லாம் வீடுகளாகிவிட்டன.
   நதிகள் எல்லாம் சாலைகளாகிவிட்டன.
   தப்பிப் பிழைத்த சில நதிகளும்
   சாக்கடைகளாகிவிட்டன.

   Delete

 3. அருமை! என்னுடைய பேய்மழை கவிதையைப் படித்துப் பாருங்களேன்!
  http://esseshadri.blogspot.in/2011/12/blog-post_21.html

  நன்றி!

  ReplyDelete
  Replies
  1. குளம் குட்டை
   இருந்தாலல்லவோ தூர் வார

   நாங்கள் தங்கும் இடமாம்
   குளம் குட்டைகளில்
   வீட்டை கட்டிவிட்டீர்
   அதனால்தான் நாங்கள்
   (road) ரோடை எங்கள்
   சொந்தமாக்கி கொண்டோம்.

   ஆற்றங்கரையிலேல்லாம்
   அடுக்குமாடி குடியிருப்பு
   அதனால்தான் நாங்கள்
   அதனூடே பாய்கின்றோம்
   உங்களுக்கு அழிவைத் தருகின்றோம்
   எங்கள் மீது குற்றம் சுமத்தாதீர்
   உங்களிடம் குறைகளை
   வைத்துக்கொண்டு

   Delete