Friday, July 19, 2013

சீதையும் ஹனுமனும் நமக்கு காட்டும் வழி . (பகுதி-2)

சீதையும்  ஹனுமனும்
நமக்கு  காட்டும்  வழி . (பகுதி-2)மனிதர்கள்  ஹனுமானை
குருவாக  நினைத்து
வணங்கவேண்டும் .

சம்சார  கடலில்  பல  துன்பங்களில்
சிக்கி  அல்லல்படும்  மக்கள்
அவனிடம்  அற்ப  உலக  வாழ்க்கைக்கான
பொருள்களையும் ,
சுகங்களையும்தான்
யாசிக்கிறார்கள் .

இது  மிகவும்  வருத்தப்பட  வேண்டிய  விஷயம் .

ஏனென்றால்  மற்ற
உலக  சுகங்களை  அளிக்க
ஏராளமான  தெய்வங்கள்  இருக்கின்றன .

ஹனுமானிடம் பிறவிக் கடலிலிருந்து
கரையேற்றும்  ஸ்ரீ  ராம  சந்திர  மூர்த்தியின்
திருவடிகளில்  பக்தி  வேண்டும்
என்று  மட்டும்தான்
பிரார்த்தனை  செய்ய  வேண்டும்
என்பதை  யாரும்  உணரவில்லை .)

என்ன ஆச்சரியம் பாருங்கள்.

மனித வடிவில் வந்த சீதையோ
மிருகவடிவில் வந்த
தங்க நிற மானின் மீது
மோகம் கொண்டாள்

விலங்கு  வடிவம்  கொண்ட
மாருதியான  ஹனுமானோ
மனித  வடிவில்  வந்த
தெய்வம்  ராமபிரான்
மீது  மோகம்  கொள்கிறான்

அவனை  பணிந்தேத்தினான்

அவன்  மீது  கொண்ட  அபரிமிதமான
பக்தியின்  துணையினால்
துணிவினால்  யாரும்  செய்ய  இயலா
செயற்கரிய  செயல்களை
செய்து  முடிக்கின்றான்

உள்ளத்தில்  அவன்  நாமம்
எப்போதும் இருந்தால்   நாம்
ஏன்  பள்ளத்தில்  விழப்  போகிறோம் ?

எண்ணத்தில்
கள்ளத்தனம்  எங்கிருந்துவரும் ?

ஹனுமானின்  வரவு  சீதைக்கு (ஜீவனுக்கு )
நம்பிக்கையூட்டுகிறது .

இறைவன்  வரும்  நாளை
ஒவ்வொரு  கணமும்  எண்ணி  தவிக்கிறது .

முடிவில்  இறைவன்  புலன்களின்
கட்டுப்பாட்டில்  (பத்து  தலை  ராவணனால் )
சிறை  வைக்கப்பட்டிருந்த  சீதையை (ஜீவனை )
இறைவனாகிய  ஸ்ரீராமன்
போரிட்டு  மீட்கிறான் .

அப்போதும்  இந்த  ஜீவனின்  பக்தி
உண்மையானதுதானா  அல்லது
இந்த  சிறையிலிருந்து
தப்பிப்பதற்காக நடத்தும்  நாடகமா
என்பதை  அறிய  பல  கடுமையான
சோதனைகளுக்கு
ஜீவனை  இறைவன் உட்படுத்துகிறான்

( சீதையின்  அக்னிப்ரவேசம் )
(பெரியபுராணம், மற்றும் மகா பாரதத்தில்
 பக்தர்களை பகவான் பல கடுமையான
சோதனைகளுக்கு உட்படுத்தியதை.
இங்கு கவனத்தில் கொள்ளவேண்டும்)

அதில்  வெற்றி  பெற்ற  ஜீவன்
மீண்டும்  இறைவன்  அருகில்
இருக்க  அனுமதி  பெறுகிறது (சாமீப்ய  முக்தி )

ஆனால்  இந்த  நிலை   முடிவல்ல

இன்னும்  சாலோக்கியம் ,
சாரூப்யம் , கைவல்யம்  என்று
முக்தி  நிலைகள்  உள்ளன .

pic.courtesy-http://santhipriyaspages.blogspot.in15 comments:

 1. ராம பானம் போல அதற்குள் அடுத்த பதிவு ... பாகம்-2 ;))))) !!!!! வியப்போ வியப்பு !!!!!

  >>>>>

  ReplyDelete
 2. கோதண்ட ராமர் படம் அழகோ அழகு !

  ஸீதையின் அக்னிப்பிரவேசப்படத்தில் ஸீதா தேவி டபுள் ஆக்டிங்கில் காட்டப்பட்டுள்ளதோ ?

  >>>>>

  ReplyDelete
  Replies
  1. சீதையின் டபுள் ஆக்டிங் பற்றி
   கதை தெரிந்துகொள்ள பதிவின்
   கீழ் குறிப்பிட்டுள்ள வலைபதிவிற்கு
   சென்று தெரிந்துகொள்ளலாம்

   Delete
 3. மனிதர்களுக்கு விலங்குகள் மேல் ஆசை

  விலங்குகளுக்கு தெய்வத்தின் மேல் ஆசை

  என்பதை ராமாயணத்தின் மூலம் தகுந்த உதாரணங்களுடன் சொல்லியுள்ளீர்கள்.

  இதைப்படித்ததும் என் சிறுவயதில், என் க்ளாஸ்மேட் பையன் [குறும்புப்பையன்] என்னிடம் சொன்னது நினைவுக்கு வந்தது.

  >>>>>

  ReplyDelete
 4. அந்தக்குறும்பன் சொன்னான்:

  ”வண்ணானுக்கு வண்ணாத்தி மீது ஆசை. ஆனால் வண்ணாத்திக்கு கழுதை மீது மட்டுமே ஆசை”

  என்று. ;)

  ReplyDelete
  Replies
  1. அந்தவண்ணான் கூறிய
   குற்றசாட்டினால்தான் சீதை
   மீண்டும் காட்டிற்கு செல்ல நேரிட்டது

   காட்டிற்கு சென்றவள் மீண்டும்
   நாட்டிற்கே வராமல் மண்ணுக்குள் போய்விட்டாள்

   அது தர்மத்தின் வடிவாம் ராமன் ஆண்ட காலம்

   ஆனால் இன்று அந்த குற்றச்சாட்டை கூறிய
   அந்த வண்ணானின் குடும்பமே
   மண்ணுக்குள் போயிருக்கும். .

   Delete
 5. அருமையான விஷயங்களை எளிமையாகச் சொல்லுகிறீர்கள். பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. ஏதோ என்னை ஒரு பொருட்டாக மதித்து
   என் வலைக்கு வந்துபோகும் உங்களை போன்ற ஒன்றிரண்டு நண்பர்களுகாகதான் விடாது எழுதிக்கொண்டிருக்கிறேன்.

   நான் ஏற்கெனவேஉங்களிடம் தெரிவித்ததுபோல் திருவள்ளுவரின் திருக்குறள் பிரபலமடைய 2000 வருடங்கள் பிடித்தது. இவன் எழுத்துக்கள் பிரபலமடைய எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆகுமோ நானறியேன்.

   Delete
  2. ராமரஸம் அருந்த எல்லோருக்கும் கொடுப்பிணை இருக்காது.

   காமரஸத்தில் மூழ்கியுள்ளவர்களை நாம் எப்படி நம் பக்கம் கொண்டுவர இயலும். அவரவர் தலையெழுத்துப்படியே நடக்கும்.

   பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் சொன்ன கீதையைக்கேட்கக் கொடுத்து வைத்தவன் அர்ஜுனன் ஒருவன் மட்டுமே.

   உங்களுக்காவது நாங்கள் 2-3 பேர்கள் உள்ளோம். ஸ்ரீ கிருஷ்ணரின் சொல்லைவிட, ஸ்ரீ பட்டாபிராமரின் எழுத்துக்கள் மிகவும் பிரபலமானவை என்பது என் அபிப்ராயம். ;)))))

   [இது ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா அவர்கள் வேடிக்கையாகச் சொன்ன ஓர் திருஷ்டாந்தம். மேலும் விபரங்களுக்கு என் பதிவினைப்பார்க்கவும். இணைப்பு இதோ: http://gopu1949.blogspot.in/2013/05/blog-post_19.html

   அன்புடன் கோபு

   Delete
  3. சுவற்றில் நம் படம் மாட்டப்படுவதர்க்குள்
   விழித்துக்கொண்டால் சரி.

   ஆனால் மக்கள் படம் பார்த்துக்கொண்டே
   உறங்கிவிடுகிரார்கள்

   மீண்டும் விழித்தவுடன்
   படம் பார்க்க

   Delete
  4. உங்களுக்காவது நாங்கள் 2-3 பேர்கள் உள்ளோம். ஸ்ரீ கிருஷ்ணரின் சொல்லைவிட, ஸ்ரீ பட்டாபிராமரின் எழுத்துக்கள் மிகவும் பிரபலமானவை என்பது என் அபிப்ராயம். ;)))))

   ஆஹா என்ன அருமையான ஒப்பீடு
   இது போதும் என் உடலில் இன்னும்
   சிறிது காலம் உயிர் தரிக்க

   Delete
 6. பெரியவர்களின் கருத்துக்களும் இன்று வாசிக்க வாய்ப்பு கிடைத்தது... நன்றி...

  ReplyDelete
  Replies
  1. [இது ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா அவர்கள் வேடிக்கையாகச் சொன்ன ஓர் திருஷ்டாந்தம். மேலும் விபரங்களுக்கு என் பதிவினைப்பார்க்கவும். இணைப்பு இதோ: http://gopu1949.blogspot.in/2013/05/blog-post_19.html

   இதை ஏற்கெனவே படித்திருக்கிறேன். நீங்களும் அதே கருத்தை வலியுறுத்துவது மனதிற்கு சற்று ஆறுதலாக இருக்கிறது

   Delete