Thursday, July 4, 2013

தியாகராஜ சுவாமிகளின் சிந்தனைகள் (95)

தியாகராஜ  சுவாமிகளின்
சிந்தனைகள் (95)








இராமா !

நீ  இராமனாக அவதாரம்
எவ்வாறு  எடுத்தனையோ ?

அதற்கு  என்ன  காரணமோ ?

கீர்த்தனை (204)எலாவதார மெத்து
கொண்டிவி  ராகம் -முகாரி -தாளம் ஆதி -

நீ   இராமனாக  எவ்வாறு
அவதாரம்  எடுத்தனையோ ?
அதற்க்கு  என்ன  காரணமோ ?

ஒ!  இராகவா !

அரக்கருடன்  போர்  புரிவதர்க்காகவா ?
அல்லது  அயோத்தியை  பரிபாலனம்
செய்வதற்கா ?

யோகிகளை  தரிசிப்பதற்கா ?

சம்சாரமென்னும்  வியாதியால்
பீடிக்கப்பட்டவர்களை  காப்பதற்க்கா ?

அல்லது  நூற்றுக்கணக்கான
இராக  இரத்தினங்களில்
கீர்த்தனை  மாலைகளை  இயற்றிய
தியாக ராஜனுக்கு  வரம்  தருவதற்கா ?

நீ  ராமனாக  அவதாரம்
செய்த  காரணம்  என்னவோ ?


ஸ்வாமிகள்  பல  காரணங்களை  
கூறினாலும்  நம்மை  போன்ற  
அஞ்ஞாநிகளை   கரையேற்றவே 
இராமபிரான்  அவதரித்தான்  
என்பதே  உண்மை 

No comments:

Post a Comment