Thursday, July 4, 2013

இராம நாமம் சொல்லுங்கோ!

இராம நாமம் சொல்லுங்கோ!

இதைதான் இவன் சந்திக்கின்ற
அனைவரிடமும்
விடுக்கின்ற வேண்டுகோள்

இதை இவன் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக
இராமனின் தோளில் உள்ள அம்புரா துணியிலிருந்து
அம்புகள் புறப்படுவதுபோல் இந்த வேண்டுகோளை விட்டுக்கொண்டிருக்கிறான்.

ஆனால் யாரும் கேட்பதுதான் கிடையாது.

ஆனால் இவன் ராம ஜபம் செய்பவன்
என்ற பெயர் மட்டும் வந்து விட்டது.

அதுவும் சொல்வது ஒரு சிலர் மட்டுமே.

இதை இவன் பெருமைக்காகவோ
விளம்பரதிர்க்காகவோ இங்கு எழுதவில்லை.

எதற்க்காக இதை சொல்கிறேன் என்றால்
இந்த உலகில் எல்லோரும் எல்லாவற்றையும்
அனுபவிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள்

அனுபவிக்கவேண்டும்  என்பதற்காகத்தான்
இறைவன் இந்த உடல் மற்றும்,பல வசதிகளை
இறைவன் அளித்திருக்கிறான்.

மனிதர்கள் இன்பங்களையும்
அனுபவிக்கிறார்கள்.
துன்பங்களையும் அனுபவிக்கிறார்கள்
உண்மையில் இரண்டும் ஒன்றுதான் .

ஏனென்றால் இரண்டும்
அவர்களுக்கு அனுபவங்களை
தருகின்றன.

அது போதாது என்று மனதில்
 நினைவுகளாக வேறு தங்கி
அந்த அனுபவங்களை மீண்டும்
அவனுக்கு நினைவு
 படுத்திக்கொண்டு இருக்கின்றன.

இதில் இன்ப நினைவுகளை விட
துன்பநினைவுகளும், மனகசப்பு, அவமானம்,
துரோகம்,பழிச்சொல், இழி சொல், ஏமாற்றம்,
இழப்பு போன்ற நினைவுகள் பலமாக
 நம் மனதில் அடித்தளம் அமைத்துக்கொண்டு
நாம் வாழும் காலம் வரையில் நம்மை
கொடுமைபடுத்திகொண்டிருக்கின்றன.


ஒருவரை சந்தித்தேன்.
அவருக்கு 70 வயது ஆகிவிட்டது.

 வாழ்நாள் முழுவதும் பல தலங்கள்,
இடங்களுக்கு சென்று  இறைவன் மீது
பஜனை பாடல்களை பாடி அனுபவம்பெற்றவர்

கடந்த சில ஆண்டுகளாக உடல் நலம் கெட்டு
வெளியில் எங்கும் செல்ல இயலாமல்
அதை நினைத்தே மனம் புழுங்கி கொண்டிருப்பவர்.

அவரிடம் சொன்னேன்,எங்கும் செல்ல முடியாத
இந்த நிலையில் ராம நாம் ஜபம் செய்யுங்கள்.
என்று பலமுறை சொன்னேன்.

அதற்க்கு அவர் மீண்டும் தன் நிலைமை
இப்படிஆகிவிட்டதே என்று
புலம்புகிறாரே ஒழிய ராம நாமம்  சொல்ல
அவருக்கு விருப்பமில்லை.

ஒருநாள் நாம் மீண்டும்
ராம நாமம் சொல்லுமாறு வேண்டுகோள்
விடுத்தபோது அவர் சொன்ன சொல்
என்னை அதிர்ச்சி அடைய வைத்துவிட்டது

அட போங்க சார்,எவன் சொல்லுவான் சார்
ராம நாமம் அது ஒரே போர்  என்றார்.

இப்படிதான் இருக்கிறது
மக்களின் பக்தி.

அனுபவங்களிலிருந்து மனிதர்கள் பாடம்
கற்றுக்கொள்ளவேண்டும்.

அப்போதுதான் பவக்கடலாகிய
இந்த சம்சார கடலிலிருந்து மீள முடியும்.

அதற்க்கு ஒரே வழி
இராம நாமம் சொல்லுவதுதான்.

அதுதான் நம்மை எல்லா
துன்பங்களில்ருந்தும் மீட்டு.
நம்மை கரை சேர்க்கும்.

pic.courtesy-google images.

8 comments:

 1. Naan solla thodangi vitten...thodarnthu soll aasi kurungal.

  ReplyDelete
  Replies
  1. நன்றி

   நம்பிக்கையோடு சொல்லுங்கள்
   அன்போடு சொல்லுங்கள்

   உள்ளத்தில் பக்தியோடு சொல்லுங்கள்
   எந்த பணி செய்தாலும் எங்கு சென்றாலும்
   மூச்சு காற்றுபோல் அவன் நாமம்
   மனதில் ஓட விடுங்கள்

   உங்களை பல பிறவிகளாக
   பிடித்திருந்த அத்தனை பாவங்களும்
   உங்களிடம் சொல்லிக்கொள்ளாமலே
   ஓடிவிடும்

   அனைத்தையும் அந்த இராமன்
   பார்த்துக்கொள்வான்

   இனி எதற்கு வீண் கவலை?

   Delete
 2. சொல்லப்பட்டதும் உண்மை... பலருக்கும் நம்பிக்கையில்லை... புரிவதில்லை...

  ReplyDelete
  Replies
  1. நன்றி DD
   புரியும் நேரம்
   வரும்போது புரியும்
   ஆனால் அதற்காக
   இராம நாமத்தை ஜெபிக்காமல்
   இருந்தால்
   ஆயுள் முடிந்துவிடும்.

   Delete
 3. //இராம நாமம் சொல்லுங்கோ!//

  நிச்சயமாகச் சொல்கிறேன் அண்ணா. பதிவுக்கு நன்றிகள்.

  நல்லதையே திரும்பத்திரும்பச்சொல்லும் அண்ணா வாழ்க!

  ReplyDelete
  Replies
  1. நான் பெற்ற இன்பம்
   பெறுக இவ்வையகம்
   என்பதற்காகத்தான்.

   என்ன இன்பம், அது எப்படி இருக்கும்
   என்பதெல்லாம் சஸ்பென்ஸ்

   அதை அவரவர்கள் மட்டுமே
   உணர்ந்துகொள்ளமுடியும்
   அவன் அருள் இருந்தால்,

   அந்த ராமன் என்னை
   காசு வாங்காத
   முகவராக
   நியமித்துள்ளான்

   மற்றவர்களை ராம நாமத்தை
   சொல்ல தூண்டும்போது
   இவனையும் ராம நாமத்தை
   நினைக்க வைக்கிறதல்லவா.

   Delete
 4. மிக அருமையான பதிப்பு. ராம நாமத்தை காதில் கேட்க கொடுத்து வைத்து இருக்க வேண்டும். ராம நாமத்தை சொல் என்று இந்த புனித பூமியில் பிறந்த மாந்தர்களை அன்புடன் கேட்டுக் கொள்வது பெரிய பாக்கியம். இதை ஸ்ரீ ஆஞ்சநேயர் நமக்கு சொல்வது போல் உள்ளது. இந்த ராம ஜெபத்தின் இனிமையே தனி அலாதி. உங்களுக்கு என் பணிவான நமஸ்காரங்கள். பேரன்புடன்

  ReplyDelete
 5. முற்பிறவியில் நல்ல சம்காரங்கள் இருந்தால்தான்
  ராம நாமத்தின் மீது நாட்டம் பிறகும். இல்லாவிடில்
  மனம் அவனை நாடாது.

  முதன்முதலாக வந்து கருத்துகளை
  பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி.

  எந்த வேலை செய்துகொண்டிருந்தாலும்
  ராம நாமம் சொல்லிக்கொண்டே இருங்கள்.
  உங்கள் உள்ளமும் சுத்தமாகும்.
  உங்களை சுற்றியுள்ள
  இந்த உலகமும் சுத்தமாகும்.

  ReplyDelete