Thursday, July 4, 2013

தலைவன் இராமனே

தலைவன் இராமனே !





உலகம் யாவையும்
தாமுளவாக்கலும்
நிலை பெறுத்தலும்
நீக்கலும்
நீங்கலா
அலகிலா
விளையாட்டுடை
யார் அவர்
தலைவர்
அன்னவர்க்கே
சரண் நாங்களே.

இந்த பாடலை இயற்றியவர் யார்?

சில பேருக்கு தெரிந்திருக்கலாம்
பல பேருக்கு தெரியாது.

இந்த பாடலை ஒரு மாபெரும் காவியத்திற்கு
ஒரு தெய்வ கதாநாயகனின் சக்தி முழுவதும்
உள்ளடக்கிய ஒரு உண்மையை விளக்கும்
பாடலாக ஒருவர் இயற்றியுள்ளார்

அவர்தான் கம்ப ராமாயணத்தை இயற்றிய
கவி சக்கரவர்த்தி கம்பர்.

பரம் பொருள் என்பது என்ன ?

எல்லா இடத்திலும் நீக்கமற
நிறைந்து இருக்கின்ற பொருள்,

,எல்லா காலத்திலும்
எப்போதும் உள்ள ஒன்று

,இந்த அண்ட சராசரங்களும்,
 உயிர்களும் முழுவதுமாக மறைந்து போனாலும்.,
அப்படி மறைந்து போன அனைத்தையும்
தனக்குள்ளே லயமாக்கிகொண்டு மீண்டும்
தோற்றுவிக்கும் சக்தி படைத்த ஒருவர்,

தோற்றிய வற்றை சிலகாலம்
நிலை பெற செய்பவர்,

மீண்டும் அவைகளை அழிப்பவர் யாரோ
அவர்தாம் உண்மையான தலைவர்.

மற்றபடி அழிந்து,அழுகி, மறைந்துபோகும்
இந்த உடல் தாங்கி நிற்பவர்கள்
தலைவர்கள் அல்லர்.
அவர்கள் வெறும் தறுதலைகள்.

இப்படிப்பட்ட சக்தியை உடையவர்
கடவுள் ஒருவர்தான்

அவர்தான் ஸ்ரீராமன் .

அவனைத்தான்
நாம் வணங்கவேண்டும்.

மற்றவை அனைத்தும்
அவனுள்ளே அடக்கம்.
நம் மூச்சு அடங்குவதற்குள்
அவனை நமக்குள்
அடக்கிகொள்ளவேண்டும்.

அதற்காகத்தான் இந்த பிறவி

மனிதர்கள் அதை செய்ய வேண்டும்
என்பதற்காக வெளியே சென்ற மூச்சு
மீண்டும் மீண்டும் உள்ளே செல்கிறது
நம்முள்ளே இருக்கும்
அந்த இராமச்சந்திரமூர்த்தியை
நாம் அறிந்துகொண்டு
கடைத்தேற

அப்படி செய்யாதவர்களையும்
கடைத்தேற்ற காசியில்
காசி விஸ்வநாதன் காத்துக்கொண்டிருக்கிறான்
காதில் ,ராம மந்திரத்தை ஓத.

pic.courtesy-google images 

3 comments:

  1. சொன்ன விதம் மனதில் பரவசம்... நன்றி ஐயா... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. //இப்படிப்பட்ட சக்தியை உடையவர் கடவுள் ஒருவர்தான் அவர்தான் ஸ்ரீராமன் .
    அவனைத்தான் நாம் வணங்கவேண்டும்.//

    சரியாகச் சொன்னீர்கள். ! ;))))) அருமை. கம்ப ரஸம் மிகவும் ருசியானது.

    ReplyDelete