Thursday, July 4, 2013

தியாகராஜ சுவாமிகளின் சிந்தனைகள் (97)

தியாகராஜ  சுவாமிகளின் 
சிந்தனைகள் (97)





உலகில்  நன்மக்கள்   
அனைவரும்  நாம  சங்கீர்த்தனம்  
செய்வதைக்  கண்டு  யமன்  கவலையுடன்  
யோசனையில்  ஆழ்ந்திருக்கிறான்  

கீர்த்தனை (200)-சிந்திஸ்துன்  நாடே  யமடு
 –ராகம் -முகாரி -தாளம் -ஆதி

உலகில்  நன்மக்கள்
அனைவரும்  நாம  சங்கீர்த்தனம்
செய்வதைக்  கண்டு  யமன்  கவலையுடன்
யோசனையில்  ஆழ்ந்திருக்கிறான்


சூலம் ,பாசக்கயிறு  முதலியன  ஏந்திய
தன்  தூதர்களைப்  பார்த்து  “உங்கள்  கொண்டாட்டம்
அடங்கும்  காலம்  வந்துவிட்டது  “என்று  கூறி
யோசனையில்  யமன் ஆழ்ந்திருக்கிறான்

சினத்துடன்  சமுத்திரத்தை  (ஆசமனம்  செய்து)
வற்றச்  செய்த  அகஸ்திய  முனிவரைப்  போல்
கோரமான  நரகங்களை  ஒழிக்கவல்ல
தாரக  நாமமாகிய  இராம  நாமத்தை
எண்ணி  யோசனையில்   யமன்
ஆழ்ந்திருக்கிறான்

நல்வழி  தெரியாமல்  திரியும்
மாந்தர்களேனும்  (யமலோகத்திற்கு ) போதும்
என்றால்   அவர்களும்  தியாகராஜன்
இயற்றிய  திவ்ய  கீர்த்தனைகளை
பாடுகிறார்களே  என்று
(யோசனையில்  ஆழ்ந்திருக்கிறான் )

அருமையான  கற்பனை  
கம்ப  நாட்டாழ்வாரும்  
"கற்பார்  இராமபிரானையல்லால்  
மற்றும்  கற்பரோ ! என்கிறார் 

சுவாமிகளின்  கீர்த்தனைகளுக்கும் 
மக்களை  நரகத்திலிருந்து  
காப்பாற்றும்  சக்தி உண்டு  என்பதை  
இந்த  கீர்த்தனையின்  மூலம் 
நமக்கெல்லாம்  உணர்த்துகிறார் . 

No comments:

Post a Comment