Wednesday, July 10, 2013

உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே (பகுதி-5)

உடம்பை வளர்த்தேன் 
உயிர் வளர்த்தேனே (பகுதி-5)








உடும்புபோல் நம்மை பிடித்திருக்கும்
இந்த உடம்பைப் பற்றி எழுதப்போனால்
நம் ஆயுள் போதாது.

அதற்குள் இருப்பதை இன்னும்
 பல்லாயிரம் ஆராய்ச்சியாளர்களும்
 மருத்துவர்களும்  புதிது புதிதாக கருவிகளை
கொண்டு இரவும் பகலும்
ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள்.

அதற்காக கோடிக்கணக்கான ரூபாய்கள்
பணம் செலவு செய்து  கருவிகளை உற்பத்தி
செய்து மனிதர்களை நிரந்தர
நோயாளிகளாக்கி வருகிறார்கள்.

உண்மையில்  நாம்தான் இந்த உடலை
விழித்திருக்கும் நேரம் முழுவதும்
பற்றிக்கொண்டிருக்கிறோம்.

குடலில் உணவுகள் என்ற பெயரில் கண்டதை
போட்டு அதை பாழ்படுத்திக்கொண்டிருக்கிறோம்.
என்பது வேறு விஷயம்

அது நம்மைப்பற்றை கவலைப்படுகிறதோ
இல்லையோ நாம் அதைப்பற்றி
ஒவ்வொருகணமும் கவலைப்பட்டுக்கொண்டு
அதற்க்கு நன்மை செய்வதாக நினைத்துக்கொண்டு
அதை கெடுத்து குட்டிசுவராக்கி கொண்டிருக்கிறோம்.

உண்மையில் இந்த உடல்
தனக்கு வேண்டியவைகள் அனைத்தையும்
அதுவே தயாரித்துக்கொள்ளுகிறது

நம்மை எதுவும் எதிர்பார்ப்பது  கிடையாது.

அதற்க்கு வேண்டியது எதுவாக இருந்தாலும் சரி
சைவமாகட்டும், அசைவமாகட்டும்
அது இரைப்பையில் வந்து விழுந்தவுடன்
உடலில் உள்ள அனைத்து கருவிகளும்
வேலைசெய்து அதை அரைத்து,அதில்
உள்ள  சத்துக்கள் அனைத்தையும்
உறிஞ்சி ரத்த குழாய் மூலம் உடலின்
அனைத்து பாகங்களுக்கு.
எந்த எந்த பகுதிக்கு என்னென்ன
சத்து தேவையோ
அதை கொண்டு சேர்த்து.
அங்கு செத்து விழுந்து கிடக்கும்
இறந்த செல்களை
எடுத்து சென்று அதை
வெளியேற்றும் கருவிகளுக்கு
சேர்த்துவிடுகிறது.

இந்த உடலில் உள்ள குடிநீர் வாரியம்
உடலில்  எந்த  உடலில் எந்த பகுதிகளில்நீர்
தேவையோஅந்த இடங்களிலெல்லாம்
24 மணி நீரம் குடி நீர்
சப்ளை குறையாமல் பார்த்து கொள்ளுகிறது

உதாரணத்திற்கு வாயில் உமிழ்நீர்,
கணையத்தில் கணைய நீர், பித்த பையில் பித்தநீர்.
போன்று ஏராளமான உறுப்புகள் தங்கள் பணியை செவ்வனே நிறைவேற்றிக்கொண்டிருக்கின்றன. .

அதைபோல் கழிவு நீர்,வடிகால் வாரியம்
அனைத்து கழிவுகளையும் அந்தந்த கருவிகள்
மூலம் பிரித்து எடுத்து வெளியேற்றிக்கொண்டிருக்கின்றன.
அவைகள் ஓய்வதே கிடையாது.

இதைத்தவிர உடலில் உள்ள ஒவ்வொரு செல்லிற்கும் பிராண வாயுவை கொண்டு சேர்க்கும் பணியும் அங்கிருந்து வெளியிடப்படும் கரிமிலவாயுவையும் நுரையீரலுக்கு கொண்டு சென்று அதை வெளியேஅனுப்புவதும் ,
வெளியிலிருந்து பிராணவாயுவை காற்றிலிருந்து
உள்ளே இழுக்கப்பட்டு அதை சுத்தம் செய்து
 உடல் முழுவதும் அனுப்பும் பணியையும்
இந்த இரத்தமும் அதை உடல் முழுவதும் கொண்டு
சேர்க்கும் பணியில் நம் இதயமும்
துடித்துக்கொண்டிருக்கிறது.

இவ்வளவு நம் உடலில் நடக்கிறதே
இதை பற்றி யாருக்காவது ஏதாவது தெரியுமா?

ஒன்றும் தெரியாது?

இவ்வளவு வேலைகள் வெளி உலகில்
நடக்க வேண்டுமேன்றால்
எவ்வளவு இயந்திரங்கள்,
அதை இயக்க தேவையான் மின் சக்தி உட்பட
பலவிதமான சக்திகள், எரிபொருட்கள்
அதை இயக்க வேலையாட்கள் என்று
அதற்காக ஆகும் செலவுகள் என்று
கணக்கு எடுத்தால். தலை சுற்றும்.

இது மட்டுமா
இன்னும் ஏராளமான பணிகள்
 நம்மை பிணியில்லாமல் வைக்க
இந்த உடல் படாத பாடு படுகிறது.
கொஞ்சம் கூட சலித்துக் கொள்ளாமல்.

நாம்தான் அதன் இயக்கங்களில்
தலையிட்டு அதை சிதைக்கின்றோம். தினமும்

இனியாவது இறைவன் இல்லை
என்று பிதற்றாது யாருக்கு நன்றி
சொல்கிறீர்களோ இல்லையோ
அவனுக்கு நன்றி சொல்லுங்கள்

இன்னும் வரும்



6 comments:

  1. மிகவும் அருமையானதோர் அலசல். படிக்க மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது. பகிர்வுக்கு நன்றிகள், அண்ணா.

    ReplyDelete
  2. அருமையானதோர் ஒப்பீடு
    பயனுள்ள அறியவேண்டிய தகவல்கள்
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தகவல்கள் ஏராளம்.
      அதற்கு முடிவே இல்லை
      வெறுமனே கோடிட்டு
      மட்டும் காட்டுகிறேன்
      ஆனால் பதிவின்
      நோக்கம் வேறு.

      Delete
  3. Excellent...what is more to say???

    ReplyDelete
  4. விளக்கமான தகவல்கள் ஐயா... நன்றி... வாழ்த்துக்கள்...

    ReplyDelete