Sunday, July 7, 2013

உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே (பகுதி-4)

உடம்பை வளர்த்தேன் 
உயிர் வளர்த்தேனே (பகுதி-4)

இறைவன் படைத்த
இந்த உடல் அதிசயங்களும்
ஆச்சரியங்களும் நிறைந்த
ஆனந்த உலகம்.

அற்புத உலகம்.
இதில் இல்லாததே
எதுவும் புறவுலகில் இல்லை.
அதனால்தான் பிண்டமாகிய
இந்த உடலில் உள்ளதனைத்தும்
அண்டத்தில் உள்ளது என்று
சொல்கிறார்கள்யோகிகளும்,
ஞானிகளும், சித்தர்களும்,
ஜீவன் முக்தர்களும்

அதை உணர்ந்ததால்தான்
அவர்களுக்கு அஷ்டமா சித்திகளும்
கைவரப்பெற்றன. பஞ்ச பூதங்களும்
அவர்களின் எண்ணப்படி இயங்கின.


இன்னும் சொல்லபோனால்
இன்றைய மனிதனின் கண்டுபிடிப்புகளுக்கும்
ஆதாரம் மனிதனின் உடலிலிருந்து வந்ததே.

உடலில் உள்ள அதிசயங்களை
ஒத்திட்டுப் பார்க்கும்போது
மனிதனின் கண்டுபிடிப்புகள்
மிகவும் குறைவே.

அவனால் உருவாக்கப்பட்ட கருவிகள்
அனைத்தும் சிறிது காலம்தான் செயல்படும்.

சில கால நிலைகளில்தான் செயல்படும்.

சில சூழ்நிலைகளில்தான் செயல்படும்.

சில அதற்க்கென்று பயிற்சி
பெற்றவர்களால்தான்
செயல்படுத்தமுடியும்.

ஆனால் இறைவன் படைத்த
இந்த உடலில் ஏராளமான கருவிகள்
நம்மை அறியாமல் பல ஆயிரக்கணக்கான
வேலைகளை ஓய்வில்லாது
தொய்வில்லாது செய்து கொண்டிருக்கின்றன.

ஓய்வில்லாது செயல்பட்டாலும்
அவைகள் அவைகளுக்கு தேவையான
ஓய்வை எடுத்துக்கொள்கின்றன.

உதாரணத்திற்கு நம் இதயம் ஒரு  துடிப்பிற்கும்
 மற்றொரு துடிப்பிற்கும் இடையில்
உள்ள நேரத்தில் ஓய்வு எடுத்துகொள்வதாக
கண்டுபிடித்திருக்கிரார்கள்.
என்னே ஆச்சரியம் பாருங்கள்!

நம் இதயம் துடிக்காது
நின்று விட்டால் அனைத்து
இயக்கங்களும். நின்றுவிடும்.

நாம் இறந்துவிட்டதாக கருதி
இந்த உலகத்தினர் (நாம் இறக்கமாட்டோம் என்பது வேறு விஷயம் )
நம் உடலை அழித்துவிடுவார்கள்.
ஏனென்றால் அவர்கள்
நம் உடலைதாம் நாம்
என்று எண்ணிக்கொண்டிருக்கிறார்கள்.

இதைபோல்தான் இந்த உடலில்
உள்ள அத்தனை கருவிகளுக்கும்.
பாதுகாப்பு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.

அதன் செயல்பாட்டின் அளவு
எல்லை மீறினால் அவைகளே
 சரி செய்துகொள்கின்றன.

உடலின் வெப்பம் அதிகமானால்
உடனே நம்முடைய தோலின் மூலமாக
வியர்வையை வெளியேற்றி
உடலின் வெப்பத்தை சம நிலைக்கு
கொண்டுவருகின்றன.

நம் உடல் சோர்ந்துவிட்டால்
ஒன்று மயக்கம் வருகிறது
அல்லது தூக்கம் வருகிறது.

அந்த இடைப்பட்ட காலத்தில்
உடல் தன் இழப்புகளை
ஈடு செய்து கொள்ளுகிறது.

சிறு காயங்கள் ஏற்பட்டு ரத்தம் வந்தால்
ரத்தம் வெளியேறி உடலில்
உயிர் போகும் நிலை வராமல்
தானே உறைந்து ரத்தக் குழாயை
அடைத்துவிடுகிறது.

நுரையீரலில் தூசுகளும் மாசுகளும்
அதிக அளவில் சேர்ந்துவிட்டால்
உடனே சளி திரவம் அதிக அளவில்
சுரந்து அத்தனை தூசுகளையும் மாசுகளையும்
இருமச் செய்து சளியாகவும் கோழையாகவும்
வெளியேற்றி நம் உடலைப் பாதுகாக்கின்றது.

இதுபோன்ற பல்லாயிரக்கணக்கான
பாதுகாப்பு அம்சங்களை இறைவன்
நம் உடலில் ஏற்ப்படுத்தி  தந்துள்ளான்.

நம் மீது இவ்வளவு கருணை காட்டியுள்ள
அந்த கருணா மூர்த்தியை,நாம்
நினைத்து நன்றி சொல்லாவிடில்
நம்மை போன்ற
நன்றி கெட்டவர்கள்
யார் இருக்க முடியும்?

(இன்னும் வரும்)

20 comments:

 1. நம் மீது இவ்வளவு கருணை காட்டியுள்ள
  அந்த கருணா மூர்த்தியை,நாம்
  நினைத்து நன்றி சொல்லாவிடில்
  நம்மை போன்ற
  நன்றி கெட்டவர்கள்
  யார் இருக்க முடியும்?/

  /நிச்சயமாக
  பயனுள்ள அருமையான பதிவு
  ஆன்மீகத்தையும் உடல் இயலையும்
  இணைத்துச் சொல்லிப்போகும் விதம்
  மிக மிக அருமை
  பகிர்வுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. உடலின் விளக்கங்கள் பிரமாதம் ஐயா... நன்றி... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 3. நம் மீது இவ்வளவு கருணை காட்டியுள்ள
  அந்த கருணா மூர்த்தியை,நாம்
  நினைத்து நன்றி சொல்லாவிடில்
  நம்மை போன்ற
  நன்றி கெட்டவர்கள்
  யார் இருக்க முடியும்?
  //அற்புதம் ஐயா! தொடருங்கள்! நன்றி!

  ReplyDelete
 4. //இதுபோன்ற பல்லாயிரக்கணக்கான பாதுகாப்பு அம்சங்களை இறைவன் நம் உடலில் ஏற்ப்படுத்தி தந்துள்ளான்.//

  ஆம், உண்மையே.

  //இறைவன் படைத்த இந்த உடலில் ஏராளமான கருவிகள் நம்மை அறியாமல் பல ஆயிரக்கணக்கான வேலைகளை ஓய்வில்லாது தொய்வில்லாது செய்து கொண்டிருக்கின்றன.//

  மிகவும் ஆச்சர்யமான விஷயம் தான்,

  அடிக்கடி பழுதுபார்க்க மட்டுமே ஆயிரக்கணக்கில் பணம் பிடுங்குகிறார்கள். அவர்களின் பிழைப்பும் நடக்க வேண்டுமே. ;(

  ReplyDelete
  Replies
  1. அவர்கள் பணம்
   பிடுங்குவது இருக்கட்டும்

   இந்த உடலை பழுதாக்குவது யார்?

   வெறும் பழையதை மோர் கலந்து நாரத்தங்காய்
   ஊறுகாய் சேர்த்து சாப்பிட்ட காலத்தில்
   இந்த உடல் பழுதடைந்தது கிடையாது நண்பரே.

   பாழாய்ப்போன காபியில்
   தொடங்கி கண்ட கண்ட பொரித்த,வறுத்த,சமாசாரங்களை
   உடலில் உள்ள குடலுக்குள்
   தள்ளியதால் வந்த விளைவு.தான்
   தண்ட செலவுகள்.

   பசிக்காக தின்னாமல்
   ஆடு மாடுகள் மேய்வதுபோல்.
   கண்ட கண்ட இடங்களில்
   பார்த்ததை எல்லாம்,
   கிடைத்ததை எல்லாம்
   ருசிக்காக தின்றதனால்
   ஏற்ப்பட்ட அவலம்.

   உப்பை தின்றால்
   தண்ணீர் குடிக்கத்தான் வேண்டும்.

   வெறும் தண்ணீரை மட்டும் குடிக்காது
   குவார்ட்டர் கலர் தண்ணீரையும்,
   அமில குளிர் பானங்களையும் குடித்தால்.
   குடல் ஏன் வெந்து போகாது?

   Delete
 5. //வெறும் பழையதை மோர் கலந்து நாரத்தங்காய் ஊறுகாய் சேர்த்து சாப்பிட்ட காலத்தில் இந்த உடல் பழுதடைந்தது கிடையாது நண்பரே.//

  இதை இதை இதையே தான் என் அம்மா எனக்குப்போட்டு, நான் SSLC படிக்கும் வரை சாப்பிட்டுள்ளேன். நினைத்தாலே நாக்கில் ஜலம் ஊறுகிறது.

  >>>>>

  ReplyDelete
  Replies
  1. அதனால்தான் இந்த வயதிலும்
   இளமை உங்களிடம் ஊஞ்சலாடுகிறது

   Delete
  2. அது எப்போதும் ஆடிக்கொண்டே தான் இருக்கும்.

   ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் எல்லாம் அந்த இறைவன் நமக்காகவே கொடுத்த ருசியோ ருசியான ஓர் ஸ்பெஷல் ஐட்டம் ஸ்வாமீ.

   ஆடட்டும் ...... இறுதிவரை ஆடட்டும்.

   ஆடிய ஆட்டமென்ன, பின் வாடிய வாட்டமென்ன ! ;)))))) என நாம் பாட வேண்டும். ;)))))

   உயிர் என்ற ஊஞ்சல் சங்கிலியும், உடம்பு என்ற ஊஞ்சல் பலகையும் ஒன்றையொன்று விட்டு விலகும் வரை “இளமை ஊஞ்சல் ஆடிக்கொண்டே தான் இருக்கும்”.

   ஆடியவருக்கும், ஆட்டியவருக்கும் தான் அந்தப்பேரின்பமே தெரியக்கூடும்.

   Delete
  3. ஆடியவர் அந்த
   தில்லையம்பெருமான்

   நம்மைஎல்லாம்
   ஆட்டுவிப்பவரும் அவர்தான்
   என்பதை புரிந்துகொண்டால்
   ஆட்டம் போடமாட்டோம்.

   அவன் போடும்
   ஆட்டம் வரம்புகளுக்கு
   அப்பாற்ப்பட்டது.

   நாம் போடும் ஆட்டம்
   ஒரு வரம்புக்குள்
   இருக்கவேண்டும்

   இல்லாவிடில்
   நரம்பு. கழண்டுவிடும்

   Delete
  4. //நாம் போடும் ஆட்டம் ஒரு வரம்புக்குள் இருக்கவேண்டும்

   இல்லாவிடில் நரம்பு. கழண்டுவிடும்//

   ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா !

   இதை இதை இதைத்தான் நானும் எதிர்பார்த்தேன்.

   வரம்பு மீறினால்
   நரம்பு கழண்டுவிடும்,

   நல்லதொரு சொல்லாடல் .... அச்சா ! பஹூத் அச்சா ;)))))

   நாடி நரம்பெல்லாம் தளர்ந்து போனாலும்
   தேடி அலைகிறதே இந்திரிய சுகங்களை
   பாழாய்ப்போன மனது ......

   பகவன் நாமா சொல் என்றால்
   கேட்கமாட்டேங்குது.

   உதைக்கணும் அதை.

   Delete
 6. //பாழாய்ப்போன காபியில் தொடங்கி கண்ட கண்ட பொரித்த,வறுத்த,சமாசாரங்களை உடலில் உள்ள குடலுக்குள் தள்ளியதால் வந்த விளைவு.தான் தண்ட செலவுகள். //

  சரியாகவே சொல்லிட்டீங்கோ. நாளுக்கு நாள் நாக்கு நீண்டு விட்டது ஸ்வாமீ. கல்யாணம் ஆகும் வரை சூடு சொரணை இல்லாமல் அம்மா போட்டதை [ஆறியதை] அமிர்தமாக உண்டேன்.

  என்னவள் வந்தாள். எனக்கு 21-22, அவளுக்கு 17-18 வயது. எதையுமே சுடச்சுட மட்டுமே சாப்பிட வேண்டும் எனப் பழக்கி விட்டாள்.

  திருமணம் ஆன பின், அதுவரை இல்லாமல் இருந்த, சூடு சொரணை வந்து விட்டதே [சாப்பாடு விஷயத்தில் மட்டும் - ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா - என் செய்வேன் - ராமா!]

  இதைப்பற்றி என் பதிவு ஒன்றினில் கூட மிகவும் நகைச்சுவையாக எழுதியுள்ளேன்.

  >>>>>

  ReplyDelete
 7. //வெறும் தண்ணீரை மட்டும் குடிக்காது குவார்ட்டர் கலர் தண்ணீரையும், அமில குளிர் பானங்களையும் குடித்தால்.
  குடல் ஏன் வெந்து போகாது?//

  இதைப்பற்றியெல்லாம் என்னிடம் கேட்கக்கூடாது.

  குவார்ட்டரோ, ஹாஃப்போ, ஃபுல்லோ ராவா அடிக்கணும். ஆனால் தொட்டுக்க ஊறுகாய் வேணும் என்று சொல்லிக் கேள்விப்பட்டுள்ளேன்.

  ஊறுகாயி [நார்த்தங்கா ஊறுகாயை பழைய சரக்குக்கு] அனுமதித்த தாங்கள் இங்கு அதே ஊறுகாயை இதுபோன்ற சீமைச்சரக்குகளுக்கு அனுமதிக்காதது ஏனோ?

  ஆண்டவா ! ஒண்ணுமே புரியலே உலகத்திலே ... என்னவோ நடக்குது.

  பெயரைக்கேட்டாலே கிக் ஏற்படுகிறது பாருங்கோ.

  நான் ரொம்ப நல்ல பையன். நம்புங்கோ அண்ணா.

  களவும் கற்று மற என்பது போல என் நண்பர்களிடம் பேசி, இவற்றையெல்லாம் கேட்டுத் தெரிந்து கொள்வது உண்டு ...... அதுவும் கதைகள் எழுதவும் கதாபாத்திரங்களைப் பேசச்செய்யவும் மட்டுமே.

  ReplyDelete
  Replies
  1. மடியில் கனமில்லை என்றால்
   ஏன் பயப்படவேண்டும் ?

   Delete
  2. மடியில் கனமில்லையே என்ற பயம் தான்.

   ம்டி எப்போதும் கனமாகவே இருக்க வேண்டும், நமக்கல்ல, பால் தரும் மாட்டுக்குச் சொன்னேன்.

   சும்மா கும்முன்னு ஜிம்மின்னு மோத மொழங்க இருந்தாத்தான், காம்பைப்பிடித்து சுரக்க வைக்கவும், கறக்க வைக்கவும் ஜோரா இருக்கும்.

   கணிசமான அளவு திருப்தியாப் பாலும் கிடைக்கும்.

   வத்தக்காச்சி மாடுகள் என்றால் என்ன செய்வார்கள்?

   லாரியில் ஏற்றி கேரளாவுக்கு அனுப்பி விடுவார்கள், பாவம்..

   Delete
  3. மனிதர்களுக்கும் அதே கதிதான்
   என்பதை நினைவில் கொள்ளவேண்டும்

   நினைவில் கொள்ளாவிடில் அதோகதிதான்

   Delete
  4. ஆஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா !

   நீங்க கரெக்டா பாயிண்டுக்கே வந்துட்டீங்கோ !!

   இத்துடன் போதும் அண்ணா, என்னை எழுதச்சொன்னா ஏதாவது இதுபோல ஜாலியா எழுதிக்கிட்டே இருப்பேன். அப்புறம் வரம்பு மீறி நரம்பு கட் ஆகிடும். அதனால் நான் இத்துடன் எஸ்கேப்....... ;)

   Delete
  5. போய் சூடாக ஆவி பறக்கும்
   நெஸ்கபே குடியுங்கள்.

   Delete