Thursday, August 1, 2013

குருவின் வாக்கை மீறுவது குருத்ரோகம்

குருவின் வாக்கை மீறுவது 
குருத்ரோகம் திருமணத்தில் ஆடம்பரம் (ஆட -ஆடல் -பாடல்-அலங்காரங்கள் முதலியன)(அம்பரம்-பட்டுப்புடவை தொடங்கி, பிளாட்டினம் நகை வரை வரை)
வேண்டாம்

பெரியவா   அன்றும் சொன்னார்
இன்றும் அவர் சொன்னது காற்றில்
ஒலித்துக்கொண்டிருக்கிறது
கேட்பவர்கள்தான் இல்லை

பெண்களை பாதிக்கும் இந்த கொடிய
வழக்கம் பெண்களாலேயே போற்றி
பாதுகாக்கப்படுகிறது

வீட்டில் இரண்டு மருமகள்கள்
இருந்தால் அவர்கள் கொண்டு வரும்
சீர்களை பொறுத்தே
அவர்களின் மரியாதை
நிர்ணயிக்கப்படும்.

தாயை போலவே பிள்ளை
நூலைப் போலவே
சேலை என்ற பழமொழியை
அப்படியே கடைபிடிக்கிறார்கள்
அவர்கள் பிள்ளைகள் வரதட்சிணை
வாங்கும் விஷயத்தில் மட்டும்

வயதானபிறகு மகனும் மருமகளும்
அவர்களை வெளியேற்றிவிட்டு
பரிகாரம் தேடுகிறார்கள்.

ஆடம்பரம் வேண்டாம்
என்று சொன்னார் பெரியவா
அனைவரும் நலம் பெற

தனம் ஏராளமாக இருப்பவர்கள்
ஆடம்பர செலவுகளை குறைத்து
அதில் ஒரு பகுதியை
வாழ்வில் வளமில்லாதவர்களின்
திருமணங்களை நடத்தி வைத்தால்
அவர்களுக்கும் மன திருப்தி ஏற்படும்
திருமணம் செய்துகொண்ட
உள்ளங்களும் வாழ்த்தும்

சிலர் விளம்பரமில்லாமல் செய்கிறார்கள்.
அரசுகள் விளம்பரம் போட்டு செய்கின்றன.
இதுவே பெரும்தனம் படைத்த ஒவ்வொருவரும்
அவர்கள் பகுதியில் உள்ள ஒரு சில
ஏழைகுடும்பங்களை கண்டறிந்து
உதவ முன் வரவேண்டும். வேண்டும்.

ஆனால் வரதட்சிணை  வாங்குவோர்
கூறுவது வர தட்சிணையாய்
யாராவது வேண்டாம் என்பார்களா?
என்பதுதான்

மேலும் ஆடம்பரம் வேண்டுவோர்
முன் வைக்கும் கோரிக்கை என்னவென்றால்
இதை நம்பி பிழைப்பு நடத்தும் லட்சக்கணக்கான
மக்களுக்குயார் சோறு போடுவது ?

பட்டுப்புடவை வேண்டாம் என்றால்
நெசவாளர்கள், வாழ்வு என்னவாவது?

உண்மை என்னவென்றால்
பட்டுப்புடவை விற்கும் விலையில்
லாபம் அடைவது தரகர்களும்
வியாபாரிகளுமே .

நெசவாளர்களை வியாபாரிகள்
முன்பணம் கொடுத்து அவர்களை
கொத்தடிமைகளாகத்தான் வாழ்நாள் முழுவதும்
வைத்திருக்கிறார்கள் என்பது இந்த உலகத்திற்கு தெரியாது

ஆனால் உண்மை என்னவென்றால்
கிடைத்த பணத்தை தொலைத்துவிட்டு
ஆண்டு முழுவதும் கடனாளிகளாய்
வருடம் முழுவதும் உழைத்து ஓடாகி
நெசவாளர்கள் ஏழ்மையிலேயே
வாழ்ந்துமடிவதுதான் உண்மை

இந்த கொடுமையை நேரில் கண்ட ஸ்வாமிகள்
அதிக விலை கொடுத்து பட்டுப்புடவை
வாங்குவதால் நெசவாளர்களுக்கு
முழு பயன் சேருவதில்லை என்பதால்
அதை தவிர்க்குமாறு வலியுறுத்தினாரோ?

குருவின் வாக்கு தெய்வ வாக்கு 
அதை கடைபிடித்தால் 
உய்வடையலாம்.

அவர் முன்பு அவருக்காக வேஷம் போட்டுவிட்டு
அதை மீறினால் அதற்காக கிடைக்கும்
தண்டனை மிகவும் கடுமையானது
என்பதை அவர் பக்தர்கள் உணரவேண்டும்.

மாதா பிதா செய்வதுதான்
தன்  மக்களுக்கு.

குருத்ரோகம் அவர்களின்
சந்ததிகளையும் பாதிக்கும்.

அதிலிருந்து தப்ப வைக்க
இறைவனாலும் முடியாது.

 மீண்டும் அந்த குருவின் பாதத்தில்தான்
போய்  விழவேண்டும் என்பதை மறக்கவேண்டாம்.

இல்லையேல்
அவர்கள் செய்த தவற்றை
காலம்  உணரவைத்துவிடும்  என்பது சத்தியம்.
அவரவர் மனதிற்கே அது தெரியும்.

திருமணத்தில் வரதட்சிணை  வேண்டாம்,
 பட்டுபுடவை, அளவுக்கதிகமான நகைகள்,
ஆடம்பரம் வேண்டாம் ,வேண்டாம் என்று
 பீடாதிபதியான முதல் சொல்லிக்கொண்டிருக்கிறார் .
இன்னும் ஆகாசத்தில் பெரியவாவின் வாக்கு
ஒலித்துக்கொண்டிருக்கிறது.

குருவின் வாக்கை
மீறுவது குருத்ரோகம் 

4 comments:

 1. மிகவும் அருமையான அலசல்கள். பாராட்டுக்கள். பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றிகள்.

  //குருவின் வாக்கு தெய்வ வாக்கு அதை கடைபிடித்தால்
  உய்வடையலாம்.//

  OK கடைபிடிப்போம்.

  ReplyDelete
  Replies
  1. பெரியவா போன்ற ஓர் ஞானமூர்த்தியை பரிபூரண சரணாகதி செய்து குருவாக ஏற்றுக்கொண்டபின் தனக்கு விதிக்கப்பட்ட கடமைகளை மனம் கோணாமல், செய்து கொண்டு அவ்வப்போது குரு சொல்படி நடந்துகொண்டால் போதும் வேறெதுவும் அவருக்கு இந்த உலகில் முக்கியமில்லை.

   ஏனென்றால் அவர் மூலமே அனைத்து மூர்த்திகளும் தேவையான அனைத்தையும்வாரி வாரி வழங்கும்.

   ஆனால் அது குருவின் உபதேசத்தை கடைபிடிப்பவருக்கு மட்டுமே.

   மற்றவர்களுக்கு அவரவர் வினைப்படிதான் வாழ்வு நடக்கும்.

   Chant the name of GOD
   But meditate on the form of guru

   என்றார் ஒரு மகான்
   அது உண்மை என்பது
   அதை கடைபிடித்தவர்களுக்குதான் தெரியும் .

   Delete
 2. விளக்கத்துடன் சரியாகச் சொன்னீர்கள் ஐயா.. நன்றி....

  ReplyDelete