Wednesday, August 7, 2013

வேமன்னாவின் சொல்லமுதம்

வேமன்னாவின் சொல்லமுதம்  
" நாளைக்கு வா" என்று கால் ஓடிய அலையவைத்து கடைசியில் செல்லாத காலணா கொடுக்கும் பணத்தில் உழலும் லோபிகளே, மறுஜென்மத்தில் சேறு ரெடி, அதில் புழுவாய் உழல தயாராகுங்கள்" 

தெலுங்கு கவியின் நெஞ்சை தொடும் வரிகள். 
அவர் காலத்திலேயே செல்லாத காசை 
தானமாக அளிக்கும் புண்ணிய புருஷர்கள் 
இருந்திருக்கிறார்கள். 

பிச்சை கேட்பவனுக்கு பிச்சை போடாதவன்
அடுத்த பிறவியில் பிச்சை எடுக்க நேரிடும்
என்பது அந்தக் காலம்.இந்த கலி காலத்தில்
அவர்களின் வாழ் நாளிலேயே
பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டவர்களை
நாம் பார்க்கின்றோம்.

செல்வத்து பயன் ஈதல்
என்றால் திருவள்ளுவர்.

எட்டி பழுத்தென்ன
 ஈயாதார் வாழ்ந்தென்ன  ?

தினமும் ஒரு விருந்தினருக்கு
 உணவளிக்காமல் சமைத்த உணவை தானே
உண்பவன் பாவத்தையே உண்கின்றான்
என்கிறது வேதம்

மற்றோர் பசித்து பார்த்திருக்க
அவரெதிரில் அறுசுவை உணவை
உண்பவன் இழி பிறவியாவான்

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்
நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை
என்றார் திருவள்ளுவர்.

அன்ன விசாரத்திர்க்கு பிறகுதான்
ஆத்ம விசாரம் என்பார்
சுவாமி ஞானானந்தகிரி ஸ்வாமிகள்.

உண்டி கொடுதோர்
உயிர் கொடுத்தோரே.என்கிறது வேதம்

அன்னம் பிரம்மம்
என்கிறது உபநிஷதங்கள்.

பாடுபட்டு  தேடி பணத்தை புதைத்து
வைக்கும் கேடு கேட்ட மானிடரே கேளுங்கள்
கூடுவிட்டு ஆவி போயின பின் யாரோ
அனுபவிப்பார் பாவிகள் அந்தப் பணம்
என்கிறது தமிழ் நூல்கள்.

பொருளை தர்ம வழியில் தேடவேண்டும்.
 தர்ம வழியில் செலவிடவேண்டும்.

தானும் அனுபவிக்காது பிறருக்கும்
வழங்கப்படாத செல்வம்
எதற்கும் பயன்படாது போகும்

அல்லது கொள்ளையர்களால் களவாடப்படும்
அல்லது உயிருக்கே உலை வைக்கும்
அல்லதுமீளா நோயிலும் துயரிலும் தள்ளிவிடும்.

பசியோடிருபவருக்கு
தானம் செய்யுங்கள்.
அந்த உயிர் வாழ்த்தும்
உங்கள் உயிர் அதனால் வளரும்.

இந்த உலகத்தில் யாருக்கும்
பிச்சை போட  மனம் வருவதில்லை .
அப்படி பிச்சை போட  மனம் இருந்தாலும்
சில்லறை காசுகளைதான் போடுவார்கள்.

ரூபாய் நோட்டாக போட  மனம் இருப்பதில்லை.
பிச்சை கேட்பவர்களிடம் சில்லறை. இல்லை
என்று அனுப்பிவிடுவார்கள்.
சிலரோ திட்டி துரத்தி விடுவார்கள்
இன்னும் சிலர் ஒரு படிமேல் போய்
அடித்து,துரத்துவதோ அல்லது நாயை
ஏவி விடுவதும் உண்டு.

சில புண்ணியவான்கள் ரூபாய் நோட்டை
கொடுத்து அங்கிருப்பவர்களிடம் பிரித்து
எடுத்து கொள்ள சொல்வதும் உண்டு.

அன்ன தானம் செய்யும் பழக்கத்தை
புனிதமாக சாத்திரங்கள் வகுத்துள்ளன.

ஏனென்றால் மகான்களும் சித்தர்களும்
அந்தஅன்னத்தை  புசித்தால்  அந்த குடும்பங்கள்  
கடைதேறும் பாவங்கள் அகலும்  என்று
ஞானிகள்  பலர் தெரிவித்துள்ளார்கள்.

பிச்சை போடும்போது தான் 
என்ற அகந்தையுடன் போடாது
அந்த உயிரில் உறையும் இறைவனுக்கு
அர்ப்பணிப்பதாக நினைத்துக்கொண்டு
அளிக்கவேண்டும். என்பது விதி.

அதை மீறுபவர்களின் வாழ்வு
போய்விடும் அதோகதி.

பிச்சை போடாவிட்டாலும்
பரவாயில்லை
யாரையும் மனம் நோகும்படி
பேசக்கூடாது ஏசக்கூடாது


ஆடம்பரத்திற்கும் வீண் பெருமைக்கும்
உணவு பொருளை வீணாக்காதீர்கள்.
அது உங்களுக்கு என்றும் நன்மை தராது.
தீமையே விளைவிக்கும்.

நன்றி-கவிதை மூலம்.http://amrithavarshini.proboards.com/thread/30/vemana-2

4 comments:


 1. //பொருளை தர்ம வழியில் தேடவேண்டும்.
  தர்ம வழியில் செலவிடவேண்டும்.//

  வெகு அழகாகச் சொல்லப்பட்டுள்ளது.

  ஒரு பெரியவர் என்னிடம் சொன்னார்:

  கோயில் வாசலில் அமர்ந்திருக்கும் காவி உடை அணிந்த பரதேசிகள் பலர் திரு ஓட்டுடன் இருப்பார்கள்.

  அவர்களுக்கு உன்னால் ஆன ஒரு தொகையை மறக்காமல், ஒருவர் விடாமல் அனைவருக்கும் குனிந்து பெளவ்யமாகப் போட்டுவிட்டு வா. புண்ணியம் உண்டு என்றார்.

  இதில் ஏதேனும் விஷேசமாக தாத்பர்யம் உண்டா? என்று நான் கேட்டேன்.

  ” நமக்கெல்லாம் தினமும் படியளிக்கும் சாக்ஷாத் பரமேஸ்வரனே அவர்களில் ஒருவராக அமர்ந்திருப்பார். அது உனக்குத் தெரியாது” என்றார்.

  அதிலிருந்து நானும் இதனை முடிந்தவரை கடைபிடித்து வருகிறேன். இப்போதெல்லாம் எல்லோருமே சாக்ஷாத் பரமேஸ்வரனாக எனக்குத் தெரிகிறார்கள்.

  ReplyDelete
  Replies
  1. கொடுப்பவரெல்லாம் மேலாவார்
   கொள்பவரெல்லாம் கீழாவார் என்ற
   கர்ணன் பட பாடல் வரிகள்
   அகந்தையின்பாற்பட்டது.

   அதனால்தான் எல்லாவற்றையும்
   தானம் செய்த கர்ணன்
   அன்ன தானம் செய்யாததால்
   நரகத்தை அடைந்தான் .

   Delete
 2. மிரட்டுகின்ற பாணியில் அய்யா
  சொன்னாலும் மிகுந்த அர்த்தமுண்டு
  (சித்தர்களில் சிலர் இப்படித்தான்
  அதட்டுவார்கள்..
  மருந்து கசப்பு என்றாலும்
  உடலுக்கு நன்மைதானே)
  ஒன்று நிச்சயம்
  இப்பதிவை 100 பேர் படித்து
  ஒருவர் மட்டுமே ஓரளவு
  திருந்தினாலும் வெற்றி உங்களுக்கே
  அதில் சந்தேகமே இல்லை
  அந்த ஒருவனாக நானிருக்க கூடாத???

  ReplyDelete
  Replies
  1. நல்லதை சொன்னால்
   மக்களுக்கு நாராசமாக இருக்கிறது.

   இனிப்பு தடவிய நஞ்சை போல்
   வஞ்சகர்கள் பேசும் வார்த்தைகள் இனிக்கிறது.

   அவரவர் பட்டுதான் திருந்தவேண்டும்.
   அப்படியும் திருந்துவதுமில்லை
   மாறாக செய்த செயலை நினைத்து
   வருந்துவதுமில்லை.

   இளம் சமுதாயத்தினருக்கு கேட்கும்போதெல்லாம்
   கொடுக்கும் வரை பெற்றோர் வேண்டும்.
   இல்லையெனில் அவர்களே தேளைபோல்
   பெற்றோர்களை விஷம்போல்
   கொடுக்கினால் கொட்டுகிறார்கள் தற்காலத்தில்.

   எல்லாம் அறிந்தும்
   பகவான் எதையும் கண்டுகொள்வதில்லை.
   அதே நேரத்தில் தவறை உணர்ந்து அவனை
   அழைத்தால் காப்பாற்றாமல் இருப்பதும் இல்லை.

   Delete