Monday, August 26, 2013

உலகெல்லாம் போற்றும் உத்தமனே

உலகெல்லாம்  போற்றும்  
உத்தமனே 




உலகெல்லாம்  போற்றும்
உத்தமனே
உத்தம   ஞானிகள்
உணர்ந்த  தத்துவமே


அண்டங்களை  எல்லாம்
உதரத்தில்  அடக்கிகொண்டாய்  .
ஆலிலைமேல்  அழகிய  பாலகனாக
உருக்  கொண்டாய்

காண்போர்   மயங்கும்  ‘கண்ணன் ”
என்னும்  வடிவு  கொண்டாய்

வெள்ளம்போல்
துன்பம்  வந்திடினும்
வெண்ணையைபோல்  
மனம்  உருகி
பக்தர்களை
தடுத்தாட் கொண்டாய்

அண்ட   சாராசரங்களை  தன்
கட்டுப்பாட்டில்  வைத்திருப்பவனே
கள்ளமற்ற  யசோதை  என்னும்
தாய்க்காக  உரலில் கட்டுண்டவனே


 


கண்ணா  உன்  லீலைகளை
என்றும் என்  நெஞ்சில்
நினைந்து  இன்புறுவேன்

என்ன  சொல்லி
உன்னை   புகழ்வேன்
அடியார்கள்  மீது
நீ  காட்டும்
காருண்யத்தை

என்  எண்ணமெல்லாம்
உன்  நாமம்  நிறைந்துவிட்டால்
வண்ணம்போல்   அல்லவா
வளமான வாழ்வு  மலரும்
என்றுணர்ந்தே  
எந்நேரமும்  செப்புகின்றேன்
உன்  திருநாமம்

Pic.courtesy-google images.

3 comments:

  1. அருமை கண்ணா ...... ஸாரி ...... அண்ணா.

    கோகுலாஷ்டமிக்கு ஏற்ற மிகச்சிறந்த பதிவு.

    வெல்லச்சீடையாக இனிக்கிறது.

    பாராட்டுக்கள். வாழ்த்துகள். நன்றிகள்.

    [நம்ம தொடர் பதிவு பகுதி-41 க்கு இன்னும் வரவில்லையே அண்ணா! இன்று மதியம் பகுதி-42 வெளியாக உள்ளது, அண்ணா, வாங்கோண்ணா]

    ReplyDelete
    Replies
    1. கூடாரை வெல்லும்
      சீர் கோவிந்தனல்லவா அவன்
      அதனால்வெல்ல சீடையாய்
      பதிவு இனிக்கிறது. போலும்

      Delete
  2. என் எண்ணமெல்லாம்
    உன் நாமம் நிறைந்துவிட்டால்
    வண்ணம்போல் அல்லவா
    வளமான வாழ்வு மலரும்
    என்றுணர்ந்தே
    எந்நேரமும் செப்புகின்றேன்
    உன் திருநாமம்

    எண்ணம் நிறைந்த கண்ணனின்
    வண்ணம் நிரம்பிய அருமையான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!

    ReplyDelete