Tuesday, August 6, 2013

குழப்பம் ஏதுமின்றி குறையொன்றுமில்லா கோவிந்தனிடம் முறையிடுவோம்.

குழப்பம் ஏதுமின்றி குறையொன்றுமில்லா 
கோவிந்தனிடம் முறையிடுவோம்.

மனமிரங்கினான்  மாலவன் 
குளிர் மழையாய் பொழிந்தான்  


ஆழி மழைக்கண்ணா 



6.5.2013 அன்று ஒரு பதிவிட்டேன் 
அனைத்துயிரும் வாழ மழை வேண்டி
மாலவனை சரணடைந்து 
பிரார்த்தனை செய்ய கோரி.

பின்நூட்டமிட்டவர் இருவர்மட்டுமே 
திருச்சியிலிருந்து ஒருவரும், 
திண்டுக்கல்லிலிருந்து ஒருவரும். 

13.5.2013 இரவு வானம் குளிர்ந்து 
மழையாய் பொழிந்தது. 
மனமிரங்கினான்  மாலவன் 
குளிர் மழையாய் பொழிந்தான்  

வறண்ட நிலத்தில் குளிர்ந்த 
நீரூற்று போல் பொழிந்தான்.
இன்னும் பொழிந்துகொண்டிருக்கின்றான்

என்னே அவன் கருணை. !

நீர் நிலையெல்லாம் நிரம்பி,பயிர்களும்
,உயிர்களும் துன்பமின்றி வாழ மீண்டும் 
அவன் தாள் சரண் புகுவோம்.  
நல்லார் ஒருவர் பிரார்த்தனையை ஏற்று
இறைவன் அனைவருக்கும் அருள். செய்யட்டும்
என்று மீண்டும் பதிவிட்டேன்

இன்று கர்நாடக மாநிலத்தில் மழை பெய்து 
நிலையெல்லாம் நிரம்பியதன் விளைவால் 
தமிழ்நாட்டில் அணைகள் நிரம்பி காவிரியாற்றில் 
வெள்ளம் கரை புரண்டு ஓட மக்கள்மகிழ்ச்சி பெருக்கில்  
 ஆடிபெருக்கும்  கொண்டாடிவிட்டனர்.





வழக்குகள் எதற்கு? 
வம்பதெற்கு ?  
போராட்டங்களும் 
வன்முறைகளும் எதற்கு?

குழப்பம் ஏதுமின்றி குறையொன்றுமில்லா 
கோவிந்தனிடம் முறையிடுவோம்.























குறை தீர்ந்து மகிழ்ச்சியாய் 
குவலயத்தில் வாழ்ந்திடுவோம்.  

pic. courtesy-hindu 

2 comments:

  1. வரைந்துள்ள படமும், சொல்லியுள்ள பாடங்களும் அருமை. உங்கள் காட்டில் நல்ல மழை பொழிகிறது. இன்று ஒரே நாளில் மூன்று பதிவுகள். அச்சா, பஹூத் அச்சா.

    பாராட்டுக்கள். வாழ்த்துகள். மழை பொழிய வைத்ததற்கு காரணமான ’நல்லார் ஒருவராகிய’ தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. அந்த' நல்லோர் 'யார் என்பது
      அந்த மாலவனுக்குதான் தெரியும்
      அந்த நல்லான் வாழ்க என்று
      நானும் உங்களோடு சேர்ந்துகொண்டு
      வாழ்த்துகிறேன்.

      Delete