Thursday, December 26, 2013

அருட்பாவை தந்த திருப்பாவை (பாசுரம்(13)

அருட்பாவை தந்த திருப்பாவை (பாசுரம்(13)


பாடல்-13

புள்ளின் வாய்க் கீண்டானை பொல்லா அரக்கனைக் கிள்ளிக்  களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய் பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம் புக்கார் வெள்ளி எழுந்து விழாயனும் உறங்கிற்று புள்ளும்  சிலம்பின காண் போதரிக் கண்ணினாய் குள்ளக் குழைந்து நீராடாதே பள்ளிக் கிடத்தியோ ? பாவை நீ நன்னாளால்  கள்ளம் தவிர்த்து  கலந்தேலோ ரெம்பாவாய்

விளக்கம் 

 கோகுலத்தில்
வளரும்  சிறுவன் கண்ணனை கொல்ல மாமன் கம்சனால் அனுப்பப்பட்ட  பறவை வடிவில் வந்த கொடிய அரக்கனின் வாயைப்  பிளந்து அவனைக் கொன்றவன் கண்ணன்  .அவன் பெருமைகளைப் பாடிக்கொண்டு மற்ற பிள்ளைகள் அவன்  சன்னதிக்கு சென்றுகொண்டிருக்கிறார்கள். 
வானிலே ஆதவன் உதிக்கும் நேரத்தை அறிவிக்கும் முகமாக வெள்ளி என்னும் சுக்கிரனும் விழாயன் என்னும் குருவும் உறங்குவதுபோல்  கண்ணிலிருந்து மறையத் தொடங்கி விட்டன.
பறவைகளும் தன்  கூட்டை விட்டு பறந்து இரை கிளம்பும் முகத்தான் சத்தம் போடத் தொடங்கிவிட்டன. காலைப் பொழுது புலர்வதை அறிந்தும் நீ கண்களை திறந்து எழுந்து வந்து குளிர்ந்த நீரில் நீராடாமல்  படுக்கையில் கிடப்பது முறையோ? 
இறைவனுக்காக ஏற்பட்டது  மார்கழி மாதம். அதில்  அனைத்து நாட்களும் நல்ல நாட்களே. அதுபோல் இந்த நன்னாளில் மற்ற சிந்தனைகளை விட்டுவிட்டு கண்ணனை நினைத்து அவனுடன் கலக்க வந்திடுவாய். என்கிறாள்  ஆண்டாள். 

12 நாட்களாக தினமும் நல்ல உபதேசங்களை ஆண்டாள் அருளி செய்கிறாள். உலகில்  வாழும் இந்த ஜீவன்களுக்கு.
எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டு அவைகளை செயல்படுத்தாமல் மீண்டும் மீண்டும் இந்த உலக மோகத்தில் மயங்கி சுகமாக நித்திரையை செய்து கொண்டிருகின்றனர் ஜீவர்கள். 



ஆனாலும் ஆண்டாள்
 அவர்களை விடுவதாயில்லை.

புள் என்றால் உயிர்கள். 
உயிர்களை தவறான பாதையில் செலுத்துவது மனம்தான். 
அதுதான் உயிர்களை தீய வழியில் செலுத்துவதும் 
நல்ல பாதையிலிருந்து திசை திருப்புவதுமாக ஓயாமல்  .தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டே இருக்கிறது 

சில நேரங்களில் தீமை செய்யப் புகுந்தாலும் 
பறவை வடிவில் வந்த அரக்கனுக்கு பகவான்கண்ணன் கையினால்மாளும் 
 பாக்கியம் கிடைத்தது.

மனதில் ஆயிரம் தீய சிந்தனைகள் இருந்தாலும் 
அனுதினமும் நாம் பகவானை சிந்தித்துக் கொண்டே வந்தால் 
அவைகள் மறைந்து
 நம் மனம்  முழுவதும் இறை சிந்தனையால் 
ஒருநாள் நிரப்பட்டுவிடும் 

அப்போது நாமும் நரகத்தில்
 விழாமல் காப்பாற்றப்படுவோம்.

அதற்க்கு நல்லவரோடு 
இணங்கவேண்டும்.



தானே இயங்கமுடியாத
 பல ரயில் பெட்டிகளை ஒரு இஞ்சின் 
இழுத்து சென்று நாம் சேருமிடத்தில் கொண்டு சேர்ப்பதுபோல 
பகவானின்  ஒரு நாமத்தை விடாமல் பற்றிக் கொண்டோமானால் 
நாம் அவன் இருக்குமிடத்தை ஒரு முயற்சியுமின்றி எளிதாக அடைவது திண்ணம். 

அதற்கு தான் என்ற அகந்தையற்று அவன் தாள்களை சரணடையவேண்டும் 

சரணடைந்ததுபோல் நடிப்பது பயனளிக்காது. 



6 comments:

  1. //மனதில் ஆயிரம் தீய சிந்தனைகள் இருந்தாலும் அனுதினமும் நாம் பகவானை சிந்தித்துக் கொண்டே வந்தால் அவைகள் மறைந்து நம் மனம் முழுவதும் இறை சிந்தனையால் ஒருநாள் நிரப்பட்டுவிடும் //

    ஆண்டாளின் அழகான பாசுரம் + அண்ணாவின் அருமையான விளக்கங்கள். பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. பாராட்டிற்கு நன்றி.எல்லாம் அவன் அருள்
      இவன் வெறும் கருவி மாத்திரமே

      Delete
  2. அண்ணன் வரைந்த கண்ணனுடன் கூடிய ரயில் வண்டிப்படமும், பட விளக்கமும் அட்டகாசம். ;))))) மிக்க மகிழ்ச்சி அண்ணா.

    ReplyDelete
    Replies
    1. பாராட்டிற்கு நன்றி.எல்லாம் அவன் அருள்
      இவன் வெறும் கருவி மாத்திரமே

      Delete
  3. ’அதற்க்கு ’ என்பதை ’அதற்கு’ என மாற்றி விடுங்கோ அண்ணா.

    ’ற்’ க்கு அடுத்து புள்ளி வைத்த மெய் எழுத்து எதுவும் வரக்கூடாது.

    ReplyDelete
    Replies
    1. நீங்களும் தவறு செய்யவில்லை
      நானும் தவறு செய்யவில்லை.

      நம்முடைய மனமும் புத்தியும்
      தான் என்னும் அகந்தையோடு கூடி
      நம் இருவரையும் மட்டுமல்ல அனைவரையும் ஆட்டிவைக்கிறது

      அது என்று அந்த ஆட வல்லானின் பாதங்களில் முழுமையாக தன்னை ஒப்புவிக்கிறதோ அதுவரை இந்த தொல்லைகள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கும்.

      Delete