Monday, December 16, 2013

அருட்பாவை தந்த திருப்பாவை (பாசுரம்-2)


அருட்பாவை தந்த திருப்பாவை (பாசுரம்-2)


கோதை மார்கழி மாதத்தை
பெருமைப்படுத்திய
மாதவன்,மாலவன்,மலையப்பன்
கண்ணனை பெருமைப்படுத்தும்
விதமாக30 பாசுரங்கள் பாடினாள்



அந்த பாக்களை பாடியதால்
அவள் அந்த கண்ணனையே அடைந்தாள்.

 நம்மையும் அவன் திருவடிகளையே
அடைக்கலமாக பற்றிக் கொள்ள சொல்கிறாள்.

அவனை படைக்கலமாக
ஆக்கிக்கொள்ள சொல்கிறாள்
 நம்முடைய எதிரிகளை அழித்தொழிக்க .

அந்த பாக்களை ஓதுவதால்
ஒதுவோருக்கு செல்வம் கொழித்தது.

இவ்வுலக வாழ்வு செழித்தது.
இவ்வுலக வாழ்வை நீத்ததும்
காக்கும் தெய்வமாம் ஸ்ரீமான் நாராயணனின்
அருளும் கிடைத்தது

அதனால் அவள் பாடிய  பாக்கள்
திருப்பா என்று மருவியது.

திருப்பாவில் அவள் பாவை நோன்பு
மேற்கொள்ள சொல்கிறாள்.

பாவை என்றால் அம்பிகை என்று பொருள்.
பெண்கள் அம்பிகையின் ஸ்வரூபங்கள்.

பாவையான கோதை
இவ்வுலக போகத்தில் திளைத்து
இறைவனை  மறந்து பாவிகளான
நம் போன்றவர்களை கை தூக்கி விடுவதற்கான
வழிகளை நம் விழிமுன் காட்டியருளினாள்.

அதனால் பாவை பாவை மீது பாடிய பாக்கள்
திருப்பாவை என மருவிவிட்டது.

அம்பிகைதான் கண்ணனாக
அவதரித்தாள் என்று  ஒரு கோட்பாடு உண்டு

.ஸ்ரீமன்   நாராயணன் அம்பிகையின்
ஆண் வடிவம் என்று சாக்தர்களும்
அம்பிகை நாராயணின் பெண் வடிவம் என்று
வைணவர்களும்  கூறுவதுண்டு.

எது எப்படி இருந்தாலும்
ஒரே பரம்பொருள்தான் பல வடிவங்களாக
பரிணமித்துள்ளது என்பது
ஞானிகள் கண்ட உண்மை.

அதனால்தான் திருப்பாவையில்
நாராயணனைப் பற்றி பாடினாலும்
அவன் பெயரிட்டு அழைக்கப்படாமல்
திருப்பாவை என்றே அழைக்கப்படுகிறது போலும்.

30 ஆண்டுகள் வாழ்ந்தவனுமில்லை
30 ஆண்டுகள் கெட்டவனுமில்லை
என்பது பழமொழி.

ஆசை அறுபது நாள் மோகம் 30 நாள்
என்பதும் ஒரு பழமொழி.

நாம் 30 ஆண்டுகள்
எதற்காக காத்திருக்கவேண்டும். ?

வருடம் முழுவதும் மனிதர்கள் மீதும்
பொருட்கள்மீதும் மோகம் கொண்டு ,
அகந்தையினால் பலவிதமான
துன்பங்களை நாமே
வரவழைத்துக்  கொண்டு
அல்லல்படுகிறோம்

கோபியர்கள் போல்
கண்ணன் மீது மோகம் கொண்டு
இந்த மார்கழி மாதம் 30நாளும்
அலைவோம்.

எல்லா செயலையும்
அவனுக்காக செய்வோம்.
அவனைப் போற்றுவோம்.
அவன் நினைவாகவே இருப்போம்.

வருடத்தில் 365 நாட்களில்
ஒரு 30 நாட்கள் திருப்பாவையை
பக்தியுடன் பாராயணம் செய்து
நோன்பிருந்தால் போதும்.
ஆண்டு முழுவதும் இன்பமான வாழ்வை
அந்த கண்ணன் அருளால் பெற்று உய்யலாம்.



இனி அடுத்து வருவது "வையத்து வாழ்வீர்காள் "என்னும்
பாசுரத்தை பாடி மகிழ நம்மையெல்லாம்
ஆண்டாள் வாழ்த்தி அழைக்கிறாள்.
வாருங்கள் பாடி மகிழ்வோம்.(இன்னும் வரும்)

pic.courtesy-google images

9 comments:

  1. கண்ணனைப் போற்றுதும்.













    //ஸ்ரீமான் நாராயணன் அம்பிகையின்
    ஆண் வடிவம் என்று சாக்தர்களும்
    அம்பிகை நாராயணின் பெண் வடிவம் என்று
    வைணவர்களும் கூறுவதுண்டு.

    எது எப்படி இருந்தாலும்
    ஒரே பரம்பொருள்தான் பல வடிவங்களாக
    பரிணமித்துள்ளது என்பது
    ஞானிகள் கண்ட உண்மை.//

    ஒருபொருள் மறைபொருள் இறைவனுக்கு இலக்கணமே! வித்தியாசங்கள் காணும், தேடும் மனிதனை உய்வடையச் செய்வதற்கு பல்வேறு ரூபங்களில் அந்த சக்தி மனிதனுக்குக் காட்சியளிக்கிறது.



    ReplyDelete
    Replies
    1. பரம்பொருள் தன்னை
      மறைத்துக்கொள்ளுவதில்லை

      எப்போதும்
      அது நம் எதிரேதான் இருக்கிறது..
      முன்னும் இருக்கிறது
      பின்னும் இருக்கிறது
      நம்முள்ளும் இருக்கிறது

      அதை உணரும்
      சக்தியைதாம் இழந்துவிட்டோம்
      முயன்றால் அவனை உணர முடியும்.

      அவனை உணர்ந்தவர்கள்
      காட்டும் வழியை பின்பற்றினால்.

      அதற்கு நாம் ஏற்கெனவே
      சென்றுகொண்டிருக்கும்
      தவறான வழிகளிலிருந்து
      நம் மனதை தடுத்து
      திருப்பவேண்டும்.

      Delete
  2. //பாவை பாவை மீது பாடிய பாக்கள் திருப்பாவை // ;)))))

    அழகான பாசுரம். அதைவிட அழகான அண்ணாவின் விளக்கம்.

    முப்பது நாள் கோபியர்கள் போல் கண்ணன் மீது மோகம் கொண்டு அலைவோம்.

    ஆனந்தம் ..... ஆனந்தம் ... ஆனந்தமே !

    பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  3. ஸ்ரீமான் நாராயணன் அம்பிகையின்
    ஆண் வடிவம் என்று சாக்தர்களும்
    அம்பிகை நாராயணின் பெண் வடிவம் என்று
    வைணவர்களும் கூறுவதுண்டு.

    அவனருளாலே அவன் தாள் வணங்கி ...!

    அருமையான ஆக்கம்..பாராட்டுக்கள்..!

    ReplyDelete
    Replies
    1. நிச்சயமாக !
      அவன் அருளின்றி அவன் தாளை வணங்கமுடியாது.
      நம்முடைய மனம் ரூபாய் தாள்களைதான் எண்ணிக்கொண்டிருக்கும்.

      Delete
  4. அருமையான சிறப்பான விளக்கங்கள் ஐயா... நன்றி...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  5. அய்யனை நினைத்து பதிவெழுதலாமென எண்ணிய போது, மார்கழிப் பனியின் மலர்ந்திட்ட நறுமணப் பூக்களாய், அண்ணலின் பதிவுகள் கண்ணுற, மெய்மறந்து போனேன்....

    அருமையானதொரு தொடருக்கு நல்வாழ்த்துக்களும் பாராட்டுதல்களும் அய்யா!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் அன்பான நல்வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் மிக்க மகிழ்ச்சியும் ஊக்கமும் தருகிறது . .நன்றி

      Delete