Friday, December 20, 2013

அருட்பாவை தந்த திருப்பாவை (பாசுரம்-6)-

அருட்பாவை தந்த திருப்பாவை (பாசுரம்-6)-





மார்கழி பிறந்து 
ஐந்து நாட்கள் ஓடிவிட்டது. 

ஐந்து பாசுரங்களையும்
செவிமடுத்தோம்.

இப்புவியை வாழ வைக்கும்
புவி அன்னையான பூ மகளையும்  
அவளை சுற்றி பற்றி படர்ந்து கொண்டிருக்கும் 
கடலன்னையின் கருணையையும் அறிந்துகொண்டோம்.

கடலிலிருந்து நம்மையெல்லாம் 
காப்பதற்கே அவதரித்த 
அலைமகளையும் வணங்கி நின்றோம்.

அனைத்து  சக்திகளும் ஒன்றாய் விளங்கி
அசுர சக்திகளை அழித்து நம்மை காக்கும் 
பாவையின் பெருமையினையும் அறிந்துகொண்டோம். 

மழைக் கடவுளாம் கண்ணனின் 
அருமைகளையும் பெருமைகளையும் 
சிந்தித்து நெஞ்சம் நெகிழ்ந்து கிடக்கிறோம். 

அவனின் சரிதத்தை படிப்பதை விட, 
அவனையே எந்நேரமும் சிந்திப்பதை விட 
உண்மையான் மகிழ்ச்சி இந்த அண்டத்தில் 
வேறு எங்காவது உண்டோ?

நிச்சயம் கிடையாது. 
இதை விட வேறென்ன வேண்டும்
உண்மை பக்தர்களுக்கு? . 

அதிகாலையில் பனி படர்ந்து 
குளிர்ந்து நிற்கும் பூமி 

நம் உள்ளங்களிலும் 
எண்ணற்ற கவலைகள்,
ஐயங்கள் ,பயங்கள் 
பனிபோல் கப்பிக்  கிடக்கின்றன 

ஆதவன் கிழக்கே உதயமானதும்
 பனி விலகுவதுபோல் 
நம் உள்ளங்களிலும் உள்ள 
ஒட்டு மொத்த அறியாமையும் 
விலகத்தான் போகிறது.

அனல் அதற்கு நாம் 
ஒன்று செய்யவேண்டும். 

குளிருக்கு பயந்து போர்வையை 
இழுத்துபோட்டுக்கொண்டு உறங்கக் கூடாது.
மீளா உறக்கதின்போதுதான் மற்றவர்கள் இழுத்து  போர்த்து 
மூடிவிடுகிரார்களே. 
அப்போது அந்த பரந்தாமனை 
அருகில் சென்று அர்ச்சாவதாரத்தில் 
 தரிசிக்க ஆனந்தம் அடைய முடியுமா?
அவன் புகழை பாடி மகிழமுடியுமா?
முடியாது. 

அதனால்தான் கண்ணனின் நாமத்தை 
உச்சரித்துக்கொண்டே 
நம் மனதை நாம் எச்சரிக்கவேண்டும்.

இனியும் இதுபோல் உறங்காதே .
இப்பிறப்பு போனால் மீண்டும் 
எப்பிறப்பு வாய்க்குமோ?

அல்லது பிறப்பே இல்லாமல் 
வானில் மீண்டும் சுற்றி திரிய வேண்டுமோ?

அப்படிப் பிறந்தாலும் கண்ணனின் 
நினைவோடுதான்பிறவி எடுப்போமோ 
யார் அறிவார் என்று கூற வேண்டும்.

குளிர்ந்த நீரில் நீராடி. 
குளிர்ந்த பார்வையுடன் நம்மை 
கடாட்சிக்க காத்துகொண்டிருக்கும் 
அன்னையையும் அரங்கனையும் 
அவன் அவதார வடிவங்களையும் 
தீப வொளியில் 
அவன் புகழை பக்தியுடன் 
பாடிக்கொண்டு வரும் பக்தர் குழாத்தோடு 
சேர்ந்துகொண்டு அவன் உறையும் 
கோயிலுக்கு சென்று தரிசிக்க வேண்டாமோ?

அவனை தரிசிக்க வேண்டுமென்றால் 
வேண்டாத சில தீய குணங்களை விட்டுதான் 
ஆகவேண்டும் என்று ஆண்டாள் 
கடந்த பாசுரங்களில் தெரிவித்துள்ளதை
நினைவில் கொள்ள வேண்டாமோ? 

கொள்ளத்தான் வேண்டும். 
எதற்க்காக?
அவன் அருளை அள்ளத்தான் 
 
அதைதான் அடுத்த பாசுரத்தில் 
தெரிவிக்கிறாள் ஆண்டாள். 
நாமும் செல்வோம். 

இந்த ஆண்டு விட்டுவிட்டால் 
இன்னும் ஓராண்டு அல்லவா
காத்திருக்க வேண்டும் 

அதற்குள் அவன் நமக்கு 
அல்வா கொடுத்துவிட்டால்
என்ன செய்வது?

அடுத்த கணம் என்ன நடக்கும் 
என்பதை  யாரறிவார்?

(இன்னும் வரும்) 

4 comments:

  1. என்ன செய்ய வேண்டும் என்பதை நன்றாக விளக்கி உள்ளீர்கள் ஐயா... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. //இந்த ஆண்டு விட்டுவிட்டால் இன்னும் ஓராண்டு அல்லவா காத்திருக்க வேண்டும். அதற்குள் அவன் நமக்கு அல்வா கொடுத்துவிட்டால் என்ன செய்வது?

    அடுத்த கணம் என்ன நடக்கும் என்பதை யாரறிவார்?//


    அருமையான சிந்திக்க வேண்டிய செய்திகள். பாராட்டுக்கள்.

    ReplyDelete
  3. ஆஹா! என்னுள் அடிக்கடி சிந்தித்து, ஏன் பதிவெழுத வேண்டும் அதைவிட அவனை நினைத்திருப்போமே என்கிற உணர்வு தான் மேலோங்கி இருக்கின்றது! என் மன நிலையை அப்படியே வெளிப்படுத்திய உணர்வு! தங்களுக்கு சிரம் தாழ்ந்த நன்றி அய்யா!
    கண்ணன் அருள் என்றும் நிறைந்திருக்கப் பிரார்த்திக்கின்றேன்!

    ReplyDelete
    Replies
    1. நன்றி தொடர்ந்து வாருங்கள்
      உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள்

      Delete