Sunday, December 22, 2013

அருட்பாவை தந்த திருப்பாவை (பாசுரம்(7)

அருட்பாவை தந்த திருப்பாவை (பாசுரம்(7)





கீசுகீசு என்றெங்கும் ஆனைச்சாத்தன் கலந்து
சின பேச்சரவம் கேட்டிலையோ? பேய்ப்பெண்ணே!
காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து
வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசை படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ?
நாயகப் பெண்பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ?
தேசம் உடையாய்! திறவேலோர் எம்பாவாய்.

முன்னாளில் மக்கள் 
தங்கள் சுற்றுபுறத்தை பற்றி நன்றாக 
அறிந்து வைத்துள்ளதை இப்பாசுரம் 
தெளிவாக காட்டுகிறது. 

அவர்களோடு வாழும் மற்ற உயிரினங்களைபற்றியும் 
அதன் குணங்களைப்  பற்றியும் 
ஆண்டாள் அழகாக தெரிவிக்கின்றாள்.

இக்காலத்தில் ஆனைச்சாத்தன் என்ற குருவி இருக்கிறதா, 
அது எவ்வாறு ஒலிஎழுப்பும்.என்று யாருக்கும் தெரியாது. 

ஆனால் அதிகாலையில் எழுபவர்களுக்கு 
வெவ்வேறுவிதமான பறவைகள் 
வெவ்வேறுவிதமாக ஒலிழுப்புவதை கேட்கலாம்.

மற்றவர்களுக்கு எதுவும் தெரிய வாய்ப்பில்லை

மேலோட்டமாகப் பார்த்தால்இந்த பாசுரத்தில் 
ஆனைச்சாத்தன் என்ற குருவி கீசு கீசு என்று குரல் எழுப்புகிறது,
ஆயர்பாடியில் ஆய்ச்சியர் மத்தால் தயிர் கடையும் சத்தம் 
இவைகள் கேட்கிறது




இவை பொழுது விடியதுவங்கி விட்டது என்பதைக்காட்டுகிறது.

நாயகன் வீட்டில் உள்ள பெண் பிள்ளையே 
நாராயணன் ,கோயிலில் மூர்த்தியாய் நிற்கும் கேசவனை பற்றி 
நாங்கள் பாடுவதைக்  கேட்டுக் கொண்டிருந்தும் 
எழுந்து வராமல் படுக்கையிலே கிடக்கிறாயே 
கதவை திறந்து வெளி வருவாய் என்று பாடுவதாகபொருள் கொள்ளுவர். 

இதைதான் முந்தய பாசுரங்களில் 
ஆண்டாள் சொல்லிவிட்டாளே மீண்டும் அதையேதான் 
இந்த பாசுரத்திலும் சொல்வாளா என்று நினைக்க தோன்றுகிறது. 


பாலைச் காய்ச்சி புரை ஊற்றி தயிராக்கி 
கடைந்தால்தான் வெண்ணை வரும்.
வெண்ணையிலிருந்து நெய் கிடைக்கும். 

பாற்கடலை தேவர்களும் அசுரர்களும் 
கடைந்தபின்தான் அவர்களுக்கு அமிர்தம் கிடைத்தது 


மனிதர்களையும் தெய்வங்களையும் 
ஆட்டி படைப்பது மூன்று குணங்கள்தான். 

ஒரு சத்வ குணம்,இரண்டாவது ரஜோ குணம்,
மூன்றாவது தமோ குணம். 

இந்த மூன்றையும் முக்குறும்புகள் என்பர் 

இந்த மூன்றையும் கடந்தால்தான் 
பரம்பொருளை அடையமுடியும். 

இந்த மூன்றில் நம்மை இறைவனை 
அடையமுடியாதபடி செய்வதில் முதலில் 
நிற்பது தமோ குணமே 

உறக்கம் தமோ குணத்தின் பார்ப்பட்டது.

அதிலும் மார்கழி போன்ற குளிர் காலத்தில் 
உறக்கத்தை  விட்டு எழுந்திருக்க மனம் வராது. 

நன்றாக போர்த்திக்கொண்டு உறங்கத்தான் 
மனம் செல்லும்.

மனதில் இருக்கும் தீய எண்ணங்களையும், 
நல்ல எண்ணங்களையும் 
பகுத்து ஆராய்ந்து தீயவை நீக்கி நல்ல எண்ணங்களை 
வளர்த்துக்கொண்டால்தான் மனம் இறைவனை நோக்கி செல்லும். 
அதற்க்கு நல்ல சத்சங்கம் வேண்டும் 

தினமும்  அதிகாலையில் எழுந்து நீராடி 
நெற்றியில் சாற்றிக்கொண்டு கோயிலுக்கு 
சென்று கண்ணனை தரிசிக்கவேண்டும் என்று 
கடந்த ஆறு நாட்களாக பழகியும் 
ஏழாவது நாளன்று உறக்கத்திலிருந்து 
எழ மனம் ஒப்பவில்லை. 

நம்மை தமோ குணமான உறக்கத்திலிருந்து 
விடுபட சொல்கிறாள் ஆண்டாள். 

நம்மை குரு ஸ்தானத்திலிருந்து
 நமக்கு கண்ணனின் மகிமைகளை எடுத்துக் கூறி 
அவனை சென்று வணங்க வருமாறு அன்போடு அழைக்கிறாள்.



பெண்ணே என்றழைக்காமல் பேய்ப்பெண்ணே 
என்று அழைக்க காரணம் பேய்கள் இரவெல்லாம் சுற்றிவிட்டு 
அதிகாலையில் உறங்கப் போய்விடும்.

அதபோல் மனித மனம் விழித்திருக்கும்  
நேரமெல்லாம் இறைவன் சிந்தனையின்றி 
உலக விஷயங்களை பற்றி அலைந்து திரிந்து விட்டு களைத்துப்போய் 
அதிகாலையில் எழும்போது முதல் நாள் விட்ட காரியங்களை
செய்ய தொடங்கிவிடும்.

அது அவ்வாறு செய்வதற்குள்  அதை இறைவனின் 
திருவடிகளில் திருப்பவேண்டும் என்பதே 
இந்த பாசுரத்தின் பொருளாகக் கொள்ளவேண்டும். 

2 comments:

  1. //உறக்கம் தமோ குணத்தின் பார்ப்பட்டது. அதிலும் மார்கழி போன்ற குளிர் காலத்தில் உறக்கத்தை விட்டு எழுந்திருக்க மனம் வராது.
    நன்றாக போர்த்திக்கொண்டு உறங்கத்தான் மனம் செல்லும்.//

    அதே, அதே !!

    //ஆனைச்சாத்தன் என்ற குருவி கீசு கீசு என்று குரல் எழுப்புகிறது, ஆயர்பாடியில் ஆய்ச்சியர் மத்தால் தயிர் கடையும் சத்தம் இவைகள் கேட்கிறது//

    அழகான சூழல். படமும் அருமை. பாராட்டுக்கள், அண்ணா.

    ReplyDelete