Saturday, December 21, 2013

மோட்சம் எங்கே கிடைக்கும்?

மோட்சம் எங்கே கிடைக்கும்? 




























மோட்சம் அல்லது முக்தி என்பது
எங்கேயோ இருப்பதாக
மனிதர்கள் எண்ணுகிறார்கள்.

ஆனால் அது நமக்குள்ளேயே இருக்கிறது
என்பதுதான் ஞானிகள் கண்டு
 நமக்கு அறிவித்த உண்மை.

நாம் புலன்கள் வழியே
எப்போதும் வெளியே இன்பத்தை
தேடிக்கொண்டிருக்கிறோம்

அது தரும் இன்பங்கள்
 நிலைத்து நிற்பதில்லை.

இன்பத்தின் பின்னால்
துன்பம் நிற்ப்பதை நாம் அறிவதில்லை.

அறியாமையைப் போக்கும்
ஹயக்ரீவன் தாளினை பற்றுவதில்லை

ஆமையாக வடிவம் தாங்கி
மந்தர மலையை கடலில் மூழ்காமல்
 காப்பாற்றிய கூர்மாவதார மூர்த்தியை
சிந்தை செய்வதில்லை.

அன்று மந்தரமலையை
கடலில் மூழ்காமல் காப்பாற்றிய
அந்த கருணாமூர்த்தி
கவலைகளும் பயங்களும்
நம்மனம் முழுவதும் ஆக்கிரமித்துக்கொண்டு
 நம்மை துன்பக் கடலில் மூழ்கடிக்கும்
இந்த நேரத்தில் அவனை நினைத்து
வேண்டிக்கொண்டால் நம்மை
காப்பாற்றமலா விடுவான்?

ஆனால் அகந்தை கொண்டு
அலையும் நாம் அவனை நம்பாமல்
நம்மால் அனைத்தையும்
சமாளித்துவிடலாம் என்று
அழுது பிதற்றி திரிகிறோம்.

 நம்மை கருணையோடு
காக்கும் தெய்வம் கண்ணன் இருக்கையிலே
அவனை நினைத்து வணங்காமல்
எங்கெங்கோ அலைந்து நம்முடைய
துன்பங்களை பன்மடங்கு
பெருக்கிக்கொள்வதுடன்
மீளா மன உளைச்சலுக்கு ஆளாகின்றோம்.

ஞானிகளும் ஜீவன்  முக்தர்களும்
காட்டிய எளிய வழியை
பின்பற்ற மறுக்கிறோம்.

போலிகளிடம் சென்று
பாம்பில் வாயில் சிக்கிய
எலிகள்போல்
மெல்ல மெல்ல சாகிறோம்.

இனியாவது மனம் திருந்துங்கள்.
காலம்முடியுமுன்

கால காலனை,
கண் கண்ட தெய்வமாம் கண்ணனின்
காலடியில் நம் அகந்தையை விட்டு
பக்தி செய்வோம்,

பரமானந்தம் பெறுவோம்.

முக்திக்கு சமமான இன்ப நிலையை
இங்கேயே அடைந்து மகிழ்வோம்.


2 comments:

  1. //கால காலனை, கண் கண்ட தெய்வமாம் கண்ணனின் காலடியில் நம் அகந்தையை விட்டு பக்தி செய்வோம், பரமானந்தம் பெறுவோம்.

    முக்திக்கு சமமான இன்ப நிலையை இங்கேயே அடைந்து மகிழ்வோம்.//

    அற்புதமான விஷயங்கள் - அழகான விளக்கங்கள் - பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete