Thursday, July 4, 2013

தியாகராஜ சுவாமிகளின் சிந்தனைகள் (100)

தியாகராஜ  சுவாமிகளின்  
சிந்தனைகள் (100)





மனமே !
ஜகம்  முழுவதும்  சர்வ  வியாபியாய் 
நிற்கும்  பரம்பொருள்  இராமன்  ஒருவனே 

கீர்த்தனை (229)-உண்டேதி  ராமுடோ  கடு  –ராகம் -ஹரிகாம்போஜி -தாளம்  -ரூபகம்

ஜகம்   முழுவதும்  நிறைந்து
சர்வ  வியாபியாய்  நிற்கும்
பரம்பொருள்  இராமன்  ஒருவனே

வேறு  நம்பிக்கைகளை
ஏற்று  வீணில்  கெட்டுப்போகாதே


தீவிரமான  பிரகாசத்தையுடைய
சூரிய  மண்டலத்தின்  நடுவில்
விளங்குபவன்  அவன்

தமோ  குணம்  முதலிய
குணங்கலற்றவன்

தர்மாத்மா

அனைவருக்கும்சமமானவன்

நன்மை  புரிபவன்

தியாகராஜனின்  உள்ளத்திற்கு
இதம்  தருபவன்  .

ஒரு  இராம  பக்தனுக்கு  அனைத்தும்  
இராமனே 

அவனே  நித்தியானந்த  
பதத்தை  அளிப்பவன்  

அவன்  மற்ற  தெய்வங்களையோ   
மார்க்கங்களையோ  நாட  வேண்டிய  
அவசியமில்லை  

இராமதாசர் கூறியுள்ளதைப்போல  
மனதில்  எந்த  சஞ்சலத்திற்கும்   
இடம்  கொடாது  இந்த  அண்ட  
சராசரங்களனைத்தையும்   
இராமனாகக்  கண்டு  வழிபட்டு 
முக்தி  மார்க்கத்தில்  
மூழ்கி  மாளாப்  பிறவி  
கடலை  கடக்க  வேண்டும் 
என்பதே இந்த அடியவனின் 
பிரார்த்தனை. . 

4 comments:

  1. OHM..SIR RAMA JAYE RAMA JEYA JEYA RAMA

    ReplyDelete
    Replies
    1. Chant this mantra 13 crores to get the darshan of SriRama

      Akkalkot Maharaaj

      Delete
  2. மற்ற பதிவுகளையும் கண்டேன்... வாசித்தேன்... இப்போது 95 முதல் இந்த பகிர்வு வரை Font சரியாகி விட்டது ஐயா... சிறிது வருத்தம் அடைந்தேன்... ஆனால் சரி செய்து விடுவீர்கள் என்னும் நம்பிக்கை இருந்தது... வாழ்த்துக்கள் ஐயா... மிக்க நன்றி...

    ReplyDelete
    Replies
    1. நான் online ல் தட்டச்சு செய்து copy paste செய்வேன்.
      அதை தவிர்க்க oofline ல் பாமினி பாண்டில் தட்டச்சு செய்து வலையில் copy paste செய்தேன்.அது என் கணினியில் மட்டும் சரியாக வந்தது .வலையில் மற்றவர்களுக்கு அது வரவில்லை என்பது அப்புறம்தான் புரிந்துகொண்டேன். நேற்று 3 மணி நேரம் உட்கார்ந்து 6 பதிவுகளையும் மீண்டும் தட்டச்சு செய்தேன். முடிக்க வேண்டும் என்ற வெறி. முடித்துவிட்டேன். கோளாறை சுட்டிக் காட்டியமைக்கு நன்றி. DD

      Delete