Saturday, July 6, 2013

உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே! (பகுதி-3)

உடம்பை வளர்த்தேன் 
உயிர் வளர்த்தேனே! (பகுதி-3)





இந்த உலகில் உள்ள அனைத்து
மனிதர்களின் உடல்களும்
அதன் உள்ளே இருக்கின்ற கருவிகளும்
இயக்கங்களும் ஒன்றுதான்.

உருவத்தில்,நிறத்தில்,அறிவில்,
 பழக்க வழக்கங்களில் உண்ணும்
 உணவில் மட்டும்தான்வேறு பாடுகள்  உண்டு.

இந்த உடல் ஒரு இயந்திரம்.
அவ்வளவுதான் .
அது மரிக்கும் வரை யார் யார் நன்றாக
பராமரிக்கிறார்களோ அவர்களுக்கு
அது ஒத்துழைப்பு கொடுக்கும்.

ஒத்துழைப்பு கொடுக்காதவர்களை
ஓய்வின்றி அல்லப்பட வைக்கும்.

அப்போதும் அதற்க்கு எதுவும் தெரியாது.
 மக்கர் செய்யும் கார் போல.
காரில்போகின்றவனுக்குத்தான்
எல்லா  துன்பமும்.

காரை பயன்படுத்துபவனும்
அதை ஒட்டி செல்பவனும்
 வேறு வேறாயினும்
துன்பம் இருவருக்குமே.

இந்த உடலை பயன்படுத்துபவன்
மனம் என்னும் ஒரு மாய சக்தி .
அதை ஒட்டிசெல்பவன்
அறிவு என்னும் சக்தி.

இந்த இரண்டும் சேர்ந்தததுதான்
 உயிர் என்னும் ஜீவன்.
அந்த உயிருக்குயிராய்
இருப்பது ஆன்ம சக்தி

அந்த ஆன்ம சக்தி பரம்பொருள்
 என்னும் பரமாணுவின் (பரமாத்வாவின்)
உள்ள ஒரு அணு.

பரம்பொருளுக்கு உள்ள
அனைத்து சக்திகளும்
இந்த ஆன்மசக்திக்கும் உண்டு

ஆனால் அதற்க்கு விதிக்கப்பட
வேலை வெறும் சாட்சியாக
ஜீவனின் உடலில் உறைவதுதான்

அதை இந்த ஜீவன் உணராத வரைக்கும்
அது தன்னை வெளிக்காட்டாது..

எப்படி என்றால் மின் கடத்தியில்லாத
பொருளினால் சுற்றப்பட்ட கம்பியில்
உள்ள   அதிக மின் அழுத்த  மின்சாரம்
தொட்டாலும் மின் அதிர்ச்சி
 ஏற்படுத்தாதுபோலதான்.

இந்த உடல் என்னும் கூட்டை மாயை
என்று கண்டுகொண்ட ஞானிகளும்
தான் இந்த உடல் அல்ல
தான் சத்து, சித்து ஆனந்த மயமான ஆன்மா
என்று உணர்ந்த ஜீவன் முக்தர்களுக்கும்
இந்தமின்சார சக்தி
எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.

அதனால்தான்  சாதாரணமான மனிதர்களுக்கு
ஆபத்தையும் அழிவையும் விளைவிக்கும்
பஞ்ச பூதங்களும் ஜீவன் முக்தர்களுக்கு
எந்த பாதிப்பையும் ஏற்ப்படுத்துவதில்லை

நாம் அந்த நிலையை
அடையமுடியுமா?

ஏன் முடியாது ?

எத்தனையோ மகான்கள்
அந்த உயரிய நிலையை அடைந்து
நம்மிடையே வாழ்ந்து
காட்டியுள்ளதை
நாம் கண்டுள்ளோம்?

இன்னும் எத்தனையோ பேர்கள்
நம்மிடையே வாழ்ந்து கொண்டுதான்
இருக்கிறார்கள் தங்களின்
சக்தியை மறைத்துக்கொண்டு.

(இன்னும் வரும் )

pic-courtesy-google images

6 comments:

  1. மனம் - மாய சக்தி... ஒட்டிச் செல்வது - அறிவு சக்தி...

    முடிவில் உள்ள வரிகளும் உண்மை... உண்மை...

    விளக்கங்களுக்கு நன்றி ஐயா... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. இந்த உடலை பயன்படுத்துபவன்
    மனம் என்னும் ஒரு மாய சக்தி .
    அதை ஒட்டிசெல்பவன்
    அறிவு என்னும் சக்தி.

    இந்த இரண்டும் சேர்ந்தததுதான்
    உயிர் என்னும் ஜீவன்.
    அந்த உயிருக்குயிராய்
    இருப்பது ஆன்ம சக்தி//


    ஆழமான விஷயத்தை மிக மிக
    எளிமையாக அனைவரும் புரிந்து கொள்ளும்படியாக
    அருமையாகச் சொன்னது மனம் கவர்ந்தது
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. //எத்தனையோ மகான்கள் அந்த உயரிய நிலையை அடைந்து நம்மிடையே வாழ்ந்து காட்டியுள்ளதை நாம் கண்டுள்ளோம்?

    இன்னும் எத்தனையோ பேர்கள் நம்மிடையே வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள் தங்களின் சக்தியை மறைத்துக்கொண்டு.//

    அருமையான ஆக்கம். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete