Monday, July 1, 2013

தியாகராஜ சுவாமிகளின் சிந்தனைகள்(94)

தியாகராஜ சுவாமிகளின் 
சிந்தனைகள்(94)




















இராமா!

எத்தனை காலம் 
நீ  என்னைக் காப்பாற்றாமல் 
சும்மா இருக்கப் போகிறாயோ
பார்த்துவிடுவோம்.

கீர்த்தனை9407)-எந்நாள்ளூரகே யுந்துவோ ஜூதாமு
ராகம்-சுப பந்துவராளி -தாளம்-சாபு (த்ரிபுட)

எத்தனை காலம் நீ என்னைக்
காப்பாற்றாமல் சும்மா
இருக்கப் போகிறாயோ,
பார்த்துவிடுவோம்

உன்னை ஏனென்றேன்று
கேட்பதற்கு ஒருவரும் இலரா?

சில காலம் நீ அயோத்தியா நகரத்தை
பரிபாலனம் செய்ய வில்லையா ?

பின்னர் வனத்தில் முனிவர்களின்
கோரிக்கைகளை நிறைவேற்றி
வைக்கவில்லையா?

சீதாபிராட்டியின் வார்த்தைகளைக் கேட்டு
பக்தகோடிகளை நீ  பரிபாலித்தருளவில்லையா?

"ஞானமும்  விவேகமும் படைத்த
அறிவாளிகளை காப்பது என் பொறுப்பு"
என்று நீ கூறவில்லையா?

இத்தியாகராஜன் உன்னை
சதா நம்பியவனல்லவா?

ஸ்வாமிகள் ஸ்ரீராமனை முழுமையாக 
சரணாகதி செய்து நம்பி விட்ட நிலையில் 
அவர் மனதில் எழும் தாபத்தின் 
வெளிப்பாடுகள்தான் 
இந்த கீர்த்தனை. 

ஸ்ரீராமன் தன்னிடம் அடைக்கலம் நாடி
வந்தஅனைவரையும் ஆதரித்துக் காத்தான்.

ஆனால் சில பேரை அவனாகவே தானாகவே
வலிய தேடி அவர்கள் இருக்கும் இடத்திற்கே
சென்று அபயம் அளித்தான்

ஏனென்றால்
அவன் பக்த வத்சலனல்லவா!

4 comments:

  1. ஏக்கத்துடன் உரிமையுடன் பாசத்துடன் நல்ல கீர்த்தனை...

    நன்றி... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. //அவன் பக்த வத்சலனல்லவா!//

    அருமையான பதிவு. பாராட்டுக்கள்.

    ReplyDelete