Wednesday, July 31, 2013

மனமே நீ உன் ஆட்டத்தை நிறுத்திக்கொள்

மனமே நீ
உன் ஆட்டத்தை 
நிறுத்திக்கொள் 











































சிலந்தி வலைப்  பின்னலடா
சிக்கல் நிறைந்த வாழ்க்கையடா

சில நாள் இன்பமடா
பலநாள் துன்பமடா
வேதனை தீருமோ
விடிவுகாலம் வருமோ
என்று மனம் கலங்குபவர்
பல கோடி

வினைகளை வேரோடு களைய
வேலவன் இருக்க  மனமே
வீணான கவலை உனக்காமோ ?

சிக்கலை தீர்த்துவைக்க
சிக்கல் சிங்காரவேலந்தான்
நின்றிருக்க சிந்தனையில்
குழப்பம் எதற்கு மனமே ?

அமரர் இடர் தீர்த்தவன்
நம்மைப்போல் மானிடர் இடர்
தீர்க்க வாராமல் போவானோ ?

அம்பிகையின் புதல்வனவன்
அல்லல்படும் உலக மக்களை
காக்க அவனிக்கு வந்தவனவன்

அடியாருக்கு அருள் செய்ய
ஆங்காங்கே கோயில் கொண்டு
நிற்கின்றான் அழகே வடிவாக

ஆடும் மயில் தன்  ஆட்டத்தை
நிறுத்திவிட்டது  மயில்சாமியின்
ஆடலைக் கண்டு

அதுபோல
மனமே நீயும் உன் ஆட்டத்தை
இன்றோடு நிறுத்திக்கொள்

முருகனின்   வடிவத்தை
உன் நெஞ்சில் நிறுத்திக்கொள்.

நிலையான இன்பத்தை
பெற்றுக்கொள்  

4 comments:

  1. வரையப்பட்டுள்ள மலையடிவார முருகன் அருமை.

    சொல்லியுள்ள கருத்துக்கள் யாவும் கரும்பாய் இனிக்கின்றன.

    வேலும் மயிலும் துணை. பாராட்டுக்கள். நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி VGK

      வரையப்பட்டுள்ள முருகனின் வடிவம்
      இஷ்ட சித்தி சுப்பிரமணியசுவாமி கர்நாடகா

      Delete
  2. /// அதுபோல மனமே நீயும் உன் ஆட்டத்தை இன்றோடு நிறுத்திக்கொள்... ///

    நன்றாக சொல்லி உள்ளீர்கள்... வாழ்த்துக்கள் ஐயா... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. இன்று மலரிட்டு வணங்கினேன்
      அந்த படம்தான் பதிவில்
      கவிதை மலர்ந்தது உடனே
      நன்றி DD.

      Delete